துரித உணவுகளை உண்பது உடலை போதைப் பழக்கத்திற்கு சமமாக அடிமையாக்கி விடும்.நாகரீகம் என்ற பெயரில் அவசர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உருவானதுதான் துரித உணவு .இன்று மனித ஆரோக்கியத்தின் கேட்டிற்கு முக்கிய காரணமாகிய துரித உணவு தான். தொழில்நுட்பத்தில் விஞ்ஞானத்தில் பணபலத்தால் வல்லரசாக திகழும் அமெரிக்கா இந்தத் துரித உணவுகளால் தாக்கப்பட்டு இருக்கிறது இத் தாக்குதல் தீவிரவாத பாதிப்பை

விட அதிகம்
என்ன காரணத்தினால் உடலுக்குத் இவ்வுணவு தீங்கு விளைவிக்கிறது?
1. பட்டை தீட்டப்பட்ட பதப்படுத்தப்பட்டது
2. உயிர்ச்சத்து ஊட்டச்சத்து குறைவாக உள்ளது
3. நார்ச்சத்து என்ற பேச்சுக்கே இடமில்லை
4. அதிக உப்பு அதிக சர்க்கரை அதிக கொழுப்பு நிறைந்தது
5. சமைக்கும் போது ஏற்படும் வேதியல் மாற்றங்கள்
6. சேர்க்கப்படும் கஃபின் போன்றவை உணவிற்கு நம்மை அடிமையாக்கும்
7. நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் ரசாயன பொருட்கள்
1.ரிபைனிங் எனப்படும் செப்பம் செய்தல்
இம்முறை இயற்கையாகவே உள்ள நார்ச் சத்து உயிர்ச் சத்துக்களை தனியே பிரித்து எடுப்பதாகும் உதாரணத்திற்காக கோதுமையில் உள்ள நார்ச்சத்து எடுத்தபிறகு மைதா கிடைக்கிறது பல துரித உணவுகள் தயாரிக்க மைதா பயன்படுத்தப்படுகிறது
உ ம் சமோசா பரோட்டா
உணவில் இயற்கையாக உள்ள பொருட்களை நீக்குவார்கள் இதன் மூலம் எளிதாக சாப்பிடவும் உணவை கெடாமல் வைத்திருக்கவும் வேதிப்பொருட்களை சேர்க்கவும் முடியும் .சுவையை க்கூட்ட சர்க்கரை உப்பு கொழுப்பு போன்றவை இவ் உணவுகளில் சேர்க்கப்படுகின்றன உதாரணம் நூடுல்ஸ்.
நூடுல்சை பாதி வேகவைத்த நிலையில் நமக்கு கிடைக்கிறது இதில் நார்ச்சத்து இருந்தால் உடனடியாக வேகாது .உதாரணமாக ரேஷன் அரிசி ,சாதம் ஆக நீண்ட நேரம் சமைக்க வேண்டும் .ஆனால் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் வறுத்த சோறினை (fried rice)உடனடியாக சமைக்க முடியும் .நார்ச்சத்து குறைவாக இருந்தால் விரைவாக சாப்பிட முடியும் .நூடுல்ஸ்ஐ விழுங்க முடியும் .சப்பாத்தி யினை மென்று தான் சாப்பிட வேண்டும்
வேகமாக ஜீரணமாகும் உணவுகள் சர்க்கரை அளவினை ரத்தத்தில் அதிகமாக்கும்.
எனவே இன்சுலின் அதிகமாக சுரக்கும் .அதனால் பசி அதிகமாகிக் அதிகரிக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும். நிறைய சாப்பிட்டாலும் சாப்பிட்ட திருப்தி உண்டாகாது
உடல் பருமனாகும். ரத்தக் குழாய் நோய்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகும்
2. குறைந்த அடர்த்தியில்உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள்
ஒப்பிட்டு பார்த்ததற்கு பழங்களையும் பழச்சாறுகளையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.100 கிராம் பழத்தில் நார்ச்சத்து நீர்ச்சத்து உயிர்சத்து நிறைந்துள்ளது உணவு உண்ணும் பொழுது நம் உடலுக்கு சக்தி மட்டும் போதாது வைட்டமின் சத்துக்களும் தாது உப்புகளும் உடல் நலத்திற்கு மிக அவசியம் இவை குறைவான உணவை உண்டால் சாப்பிட்ட திருப்தி இருக்காது உடல் சோர்வு அசதி கை கால் வலி நரம்புத் தளர்ச்சி உண்டாகும் இதனால்தான் துரித உணவு சாப்பிடுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் பசி அடங்காது பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகளில்உண்மையான பழச்சாறு அளவு மிகக் குறைவாகவே இருக்கும் .செயற்கை நிறமூட்டிகள் மணமூட்டிகள் இனிப்பு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக சேர்க்கப்பட்டு கெட்டுப்போகாமல் இருக்க பதனப் பொருள்களும் உபயோகப்படுத்தப்படுகிறது
எனவே சத்துக்கள் குறைவாகவும் வேதியல் பொருட்கள் அதிகமாகவும் தான் நமக்கு கிடைக்கும் உதாரணத்திற்கு 100 கிராம் நூடுல்ஸ் 440 கலோரிகளை தரும் ஆனால் 100 கிராம் பழம் 65 கலோரி வரை மட்டுமே தரும் கொழுப்பு சத்து அரை கிராம் மட்டுமே
நூறு கிராம் நூடுல்ஸில் கொழுப்புசத்து 15 கிராம்
உப்பு 5 மில்லி கிராம் பழங்களில். நூடுல்ஸில் 1170 மில்லிகிராம்
அடுத்தது நார்ச்சத்து இல்லாதது நீரின்றி உலகம் அமையாது :அது போன்று நார்ச் சத்து இன்றி அமையாது ஆரோக்கியம் .நார்ச்சத்து என்பது ஒரு கட்டிடம் அமைய இரும்புக்கம்பி எவ்வளவு அவசியமோ அதுபோல முக்கியமானது .அனைத்து இயற்கை உணவின் அமைப்பிலும் நார்ச்சத்து முக்கியமானது. உடல் ஆரோக்கியத்திற்கு வயதுக்கு ஏற்ப நார்ச் சத்தினை குழந்தைகளுக்குத் தரவேண்டும் சீரணமண்டலத்தின் செயல்பாட்டுக்கு நார்ச்சத்து மிக முக்கியம். குடலில் உள்ள நல்ல கிருமிகள் வளர்ச்சிக்கு உதவும். உடலை சுத்தம் செய்யும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உணவு மெதுவாக ஜீரணம் ஆக உதவும். சீரண நீர்கள் உடலுருப்புகளை பாதிக்காமல் தடுக்கும். நார்ச்சத்து உணவில் உள்ள வேதியல் பொருட்களை பிடித்து மலத்தில் வெளியேற்ற உதவுகிறது. துரித உணவுகளில் இவை குறைவாக இருப்பதால் வேகமாக ஜீரணமாகி இரத்தத்தில் உறிஞ்சப்படும் போது விரைவில் வயிறு காலியாகும் இயற்கை உணவுகளை உண்பது நல்லது நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள் ,அரிசி -கைக்குத்தல் ரேஷன் கேரள மட்டை.உமி நீக்கப்படாத, கோதுமை .பருப்பு பயறு வகைகளை சாப்பிடுங்கள்
சர்க்கரை உயர்த்தும் திறன் அதிகம்.
உணவில் நார்ச்சத்து குறையக் குறைய சர்க்கரை உயர்த்தும் திறன் அதிகரிக்கும். சர்க்கரை அதிகமாகும் இன்சுலின் சுரப்பு அதிகப்படும். ரத்தக்குழாய் அடைப்பு ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படும்.
இவ்வளவு கெட்ட உணவுகள் ஏன் அவ்வளவு ருசியாக இருக்கின்றன?
அதிக சர்க்கரை அதிக உப்பு அதிக எண்ணெய் அதிக கொழுப்பு அதியவை மூலம் சுவை அரும்புகள்,நரம்புகள் வேகமாக வலுவாக தூண்டப்படுகின்றன துரித உணவுகள் 5லிருந்து 10 மடங்கு அதிக சர்க்கரையையும் நான்கிலிருந்து ஐந்து மடங்கு அதிக உப்பையும் பத்து மடங்கு அதிக கொழுப்பையும் கொண்டுள்ளன. இவைகளின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது எனவே சுவை அரும்புகள் மிக வலுவாக தூண்டப்படும்
1ஸ்பூன் சர்க்கரை 5 கிராம் 10 கிராம் 50 கிராம் .அடர்த்தி அதிகமாக இருப்பதால் சுவை நரம்புகள் தூண்டப்படுகிறது
உதாரணத்திற்கு.இனிப்புடன் உப்பு சேர்ந்தால் சொல்லவே வேண்டியதில்லை கொஞ்சம் உப்பு சேர்த்தால் குளிர்ச்சியாக இருந்தால் கபீன் சேர்க்கப்பட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்
இதுதான் நாம் விரும்பிப் பருகும் கோக்
துரித உணவுகளில் உள்ள காஃபின் நாவை சுவைக்கு அடிமையாக்குகிறது
இதுதவிர (MSG) நரம்புகளை தூண்டி பல்வேறு மாறுதல்களை உடலில் உண்டாக்குகிறது உணவை கெடாமல் பாதுகாக்கும் செயற்கை ரசாயன பொருட்கள் சிறுநீரகத்திற்கும் ஈரலுக்கும் அதிக வேலையை தருகிறன்றன. இதனால் பாதிப்பு ஏற்படும் தன்மை அதிகமாகிறது இத்தகைய செயற்கை இனிப்பூட்டிகள், நிறங்கள் நறுமணங்கள் கலந்த துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது
நன்றி இனிப்பு சர்க்கரை நோய் மாத இதழ் .ஆசிரியர் டாக்டர் சேகர்.
மலர் 17 இதழ்1
