Blog Stats

  • 128,303 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

  சில்லி மூக்கு உடைந்தால்!!

 சில்லி மூக்கு உடைந்தால்!!

சில்லி மூக்குன்னு ஒன்று உள்ளதா? அது எப்படி உடையும்? எங்கு உள்ளது ? என்ன மருத்துவம் என்பதினைப்பற்றி இப்போது பார்ப்போம்

யாருக்காவது மூக்கில் இரத்தம் வந்தால் அனைவரும் ஒரே குரவில் சொல்வது சில்லி மூக்கு உடைந்துள்ளது ? என்பது மட்டும்தான்!

 

நமக்கு தெரிந்தது மூக்கு ஒன்று தான்.அதற்கு  வலது மற்றும் இடது பக்கம் துளை உண்டு !இதென்ன புதுக்கதை? எல்லாத்துக்கும் இது இருக்குமா?உடைஞ்சா ஆபத்தா?

 

முதல் கேள்விக்கு,-எல்லாருக்கம் ஒரே மூக்கு மட்டும்தான்.சில்லி மூக்குனு கூட ஒன்று யாருக்கும் இல்லை

2.மூக்கினுள் உள்ள  சவ்வுப்படலம் மென்மையானது, இங்கு இரத்தக் குழாய்கள மெல்லியவை.சவ்வுப்படலத்தின் மேற்புறத்திலேயே இருக்கும், சிந்தல், ,நோண்டல், தட்டு மற்றும் அழுத்தம் கூட சவ்வுப்படலத்தினைப் காயப்படுத்தி விடும்.உடனே இரத்தம் கொட்டும்,

3.சளிஇருக்கும்போது,மூக்கினை அழுத்தித்தேய்க்கும் போது, மூக்கில் விரல் போடும்போது,குளிர் மற்றும் உலர்ந்த வறண்ட காற்று வீசவதால் காயும் போது,லேசா காயம்படும்போது  இரத்தம் கொட்டும்,

 

4.மூக்கினை அழுத்தி சிந்தினால் சளி முழுவதுமாக வெளிவந்து விடும். உடனே சரி செய்துரலாம் என்கிற நம்பிக்கை அழுத்தி சிந்திக் காயப்படுத்த வைக்கிறது,

 

  1. ஆபத்தான நோயான புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாகத் திரைப்படங்களில் இது காண்பிக்க படுவதால் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு வருவார்கள்,சாதாரணமாக தானே நின்று விடக்கூடிய அளவுதான் கசிவு இருக்கும்,

6.கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலினை வைத்து இரத்த வரும் மூக்கு துவாரத்தினை 10 நிமிடம் அழுத்திப்பிடித்தால் கசிவு நின்று விடும்

6.தலையை முன்னோக்கி சிறிது சாய்த்து வைத்தால் பின்னோக்கிச் செல்லாது, தொண்டையை குறுகுறு செய்து வாந்தி வரவைக்காது

7.தொடர்ந்து வந்தால், ,அடிக்கடி வந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும்

8.சோர்வு,அதிக இரத்தப்போக்கு, இரத்த அழுத்தக்குறைவு, வேர்த்து விறுவிறுத்துப்போதல்,மயக்கம்  இருப்பின்உடனே மருத்துவமனைக்கு செல்லவும்

Copyright © All rights reserved.