childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

ரேபிஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு வைரஸ் நோய்.100% உயிரிழப்பை ஏற்படுத்தும் ரேபிஸ் நோய் நோய்த்தொற்று உள்ள விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் முக்கியமாக நாய்க்கடி மூலம் நமது நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 22000 பேர் உயிரிழக்கிறார்கள் நோயால் பாதிக்கப்பட்டு விட்டால் வேறு மருந்துகள் கிடையாது பாதிக்கப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படுகிறது


நாய், பூனை, பசு, எருது ,ஆடு, செம்மறியாடு, பன்றி ,கழுதை, குதிரை, ஒட்டகம், நரி ,குள்ள ந,ரி குரங்கு ,கரடி, மங்கூஸ் உள்ளிட்ட விலங்குகள் இந்நோயால் பாதிக்கப்படலாம்.நாய்கள் மற்றும் பூனை மூலமாகவே 95% ரேபிஸ் நோய் கிருமிகள் பரவுகின்றன. பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரில் வைரஸ் கிருமிகள் உள்ளன. மனிதர்களை கடிக்கும் போது அதன் மூலம் வைரஸ் பரவுகிறது
ரேபிஸ் நோய்க் கிருமிகளின் பாதிப்பு கடிபட்ட 5 நாட்களுக்குள் ஆரம்பித்து விடும்.சிலருக்கு நோய்க்கிருமி தாக்கிய பின் வாரங்கள் ஏன் மாதங்கள் கழித்து கூட நோய் தீவிரமாகி உயிரிழப்பை ஏற்படுத்தலாம் எனவே வெறிநாய்க்கடி தடுப்பு ஊசியினை எவ்வளவு விரைவில் போட முடியுமோ அவ்வளவு விரைவில் போடுவது நல்லது

.


நோய் கடித்த பின் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதனை இப்போது பார்ப்போம். நாய் கடித்தாலும் அல்லது நகம் மூலமாக்க கீறினாலும் ஒரு துளி ரத்தம் வந்தாலே செய்ய வேண்டிய விஷயங்கள்
ஒன்று. சோப்பு மற்றும் தண்ணீரால் கடிபட்ட இடத்தை குழாயின் கீழ் வைத்து பத்து நிமிடம் முழுமையாகக் கழுவ வேண்டும். நோய்க்கிருமி மருந்தினை போவிடின் ஐயோடின்தடவலாம்.
தேவைப்படின் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் டிடி தடுப்பூசியும் போடப்பட வேண்டும்
2. அனைத்து குழந்தைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்
3.ரேபிஸ் இம்முநோகுளோபுளின அல்லது ஆன்டிபாடி தேவைப்படும் குழந்தைகளுக்கு தரப்பட வேண்டும். இது கடி வாயிலும் சதையிலும் போடப்படும்.
ரேபிஸ் தடுப்பூசி போடும் போது எதிர்ப்பு சக்தி குழந்தையின் உடலில் ஏற்பட 21 நாட்கள் ஆகும் அதுவரை வைரஸ் கிருமியினால் பாதிப்பு ஏற்படுட வாய்ப்புஉள்ளது .இதை தடுக்க 2 உடனடி எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.

ஒன்று:ரேபிஸ் இம்முநோகுளோபுளின்
இரண்டு :ரேபீஸ் மோனோகுளோனல் ஆன்டிபாடி
இவை இரண்டும் ரேபிஸ் வைரஸின் தாக்குதலிலிருந்து உடனடி பாதுகாப்பினை குழந்தைக்கு ஊசி போட்ட உடனேயே வழங்குகின்றன.


தடிப்பு ஊசி போடப்பட்ட வூட்டு நாய் கடித்திருந்தால்(ரேபிஸ் தடுப்பூசி போட்டு ஐந்து வருடத்துக்குள் இருந்தால்) ஒரு ஊசி மட்டும் போட்டால் போதும்.
வளர்ப்பு பிராணிக்கு தடுப்பூசி இரண்டு முறை குறைந்தபட்சம் போட்டிருந்தாலும் ஒரு வயதுக்குள் இருந்தால் வேண்டியதில்லை கடித்த வளர்ப்பு பிராணியை 10 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும் .நாய்க்கு ஏதாவது உடல்நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்

ரேபிஸ் நோய் உயிர்க்கொல்லி நோயாகும். எனவே சிறு குழந்தைகள் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் உட்பட அனைவரும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ஐந்து முறை தடுப்பூசிகள் போடப்படவேண்டும் ஜீரோ 3,7 ,14 28( 4 டேஸ் -ஜீரோ 3,7 ,14.எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களுக்கு தரலாம்) நடுவில் ஏதாவது காரணத்தால் ஊசியைப் போடவில்லை என்றால் மறுபடியும் தொடரலாம் .ஒரு ஊசிக்கும் மற்றொரு பூசிக்கும் உள்ள இடைவெளியினை மட்டும் தொடர்ந்து அ கடைப்பிடிக்கப்பட வேண்டும் தடுப்பூசிகளை கைகளைத் தொடையின் முன்பகுதியில் போடலாம் பிட்டத்தில் கட்டாயம் போடக்கூடாது கடித்த விலங்கு பத்து நாட்களுக்குப் பிறகும் நன்றாக இருந்தால் இருபத்தி எட்டாவது நாள் ஊசி மட்டும் போட்டால் போதும்


குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading