எட்டு வயது மோகஸ், கொரோனா விடுமுறையில் கிராமத்தில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான். கூட விளையாடும் அவனுடைய நண்பன் மோகன் அவனை கிணற்றுப் பக்கம் செல்லலாம் என கூப்பிட கவனம் அங்கே சென்றது

. பிறகு மோட்டரை போடலாம் மோட்டார் அறைக்கு செல்லலாம் எனச் சென்று தொங்கிக்கொண்டிருந்த ஒரு கம்பியை பிடிக்க இரண்டு அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டான்.அவன் மற்றும் நண்பன் மோகனின் சத்தத்தைக்கேட்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க பேச்சு மூச்சற்று கிடந்தான். கை கால்கள் வெட்டி இழுத்து வாயில் நுரை வந்து சுயநினைவின்றி கிடந்தான். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப எந்த பலனும் இல்லை. அழ ஆரம்பித்தவன் அடுத்த 2 மணி நேரத்திற்கு அழுவதை நிறுத்தவில்லை.

நாடித்துடிப்பு அதிகமாக இருந்ததைக் கண்டுபார்க்கத் தெரிந்த செவிலியர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார் சுயநினைவு இல்லை; உளறல். யாரையும் அடையாளம் காணவில்லை. இடைவிடாத அழுகை, சமயத்தில் சோர்வு என மாற்றி மாற்றி வந்து போகமருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்
மருத்துவமனையில், உடனடியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது . வலி ப் பு மறுபடியும் வராமலிருக்க வலிப்பினைக் கட்டுப்படுத்தும் மருந்து தரப்பட்டது. ரத்தத்தில் அமிலத்தன்மையை கண்டறிய செய்யப்பட்ட பரிசோதனையில் அமிலத்தன்மையின் அளவு அதிகம் இருப்பதைக் கண்டு உடனடியாக ரத்தக் குழாய்களின் வழியே தேவையான சலைன் செலுத்தப்பட்டது .சுயநினைவு இன்னும் வரவில்லை அழுகையும் சோர்வும் மாறி மாறி வந்தது .சிறுநீர் எவ்வளவு போகிறது என்பதை கணக்கிட ஒரு குழாயும் ஆண்குறிக்குள் போடப்பட்டது இதயத்துடிப்பு 140 இருந்தது படிப்படியாக இறங்க இறங்க 110க்கு வந்தது அவசரமாகப் படுக்கை அருகில் செய்யப்பட்ட இருதய எக்கோ படம் இருதயத்தின் கீழறைகள் நன்கு சுருங்கி விரிவதை உறுதி செய்தன.

ஈ சி ஜி வரைபடம் இதயத்தில் பாதிப்பு இருப்பதை கோடிட்டு காண்பித்தது தசைகள் பாதிக்கப்பட்டால் அதிகரிக்கும் சிபி கே அளவு மிக அதிகமாகி 100 மடங்குக்கு மேலே போய் இருந்தது.
என்ன நடந்தது மோகிசுக்கு ஏன் இந்த பிரச்சினைகள் என்பதை இப்போது பார்ப்போம்
மின்சாரம் செல்லும் கம்பியை பிடிக்கும்போது 240 ஓல்ட் கரண்ட் உடலில் பாயும். சிறு குழந்தைகள் தூக்கி எறியப் படலாம் மின்சாரத்தில் தாக்குதலினால் இதயம் ,உடலில் உள்ள தசைகள் ,மூளை ஆகியவை பாதிக்கப்படலாம் மின்சார தாக்குதலின்போது உயிரிழப்பிற்கு முக்கியமான உடனடி காரணம் இருதயம் பாதிக்கப்படுவதுதான். இதயத்தில் நுழையும் ரத்த ஓட்டம் குறையும் துடிப்பு மிக அதிகமாகி அல்லது திடீரென்று நின்றுவிடும் இந்தக் காரணங்களால் உடனடி உயிரிழப்பு ஏற்படலாம்
இதயத் தசைகளின் உடைய பாதிப்பினை சில ரத்த பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்
2 மின்சார தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக ரத்த அழுத்தம் குறைந்து இதயத்துடிப்பு அதிகமாகும் குறைந்த ரத்த அழுத்தத்தை சமநிலைக்கு கொண்டுவர மருந்துகள் ரத்த குழாய் வழியே செலுத்தப்பட வேண்டும்
3 மின்சாரம் உடலில் உள்ள தசைகளின் வழியே பாயும் போது தசைகளில் இருந்து புரதம் வெளியேறும் .பாதிப்பு அதிகமாகவோ அல்லது அதிக மின் அழுத்தம் உள்ள கம்பியில் படும்போதோ வெளிவந்த புரதம் சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் அந்த சூழ்நிலையில் சிறுநீரக டயாலிசிஸ் செய்ய வேண்டியது கூட இருக்கலாம். இதுதவிர மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக வலிப்பு வந்த பின் மூளை வீக்கமும் அதன் காரணமாக மூளையில் அழுத்தமும் ஏற்படலாம் தேவைப்படின் வலிப்பினைக்குறைப்பதற்கும் மருந்தையும் மூளை அழுத்தத்தை குறைப்பதற்கு மருந்துகளும் தேவைப்படலாம்.

திடீரென்று இதயத்துடிப்பு நின்றவர்களுக்கு ,
மின்சாரம் மூலமாக இதயத்தை தூண்டலாம் அதிகம் துடிக்கும் இதயத் துடிப்பினை குறைக்கலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் டீ பிப்ரிலேட்டர் இய ங்குகிறது இதனை மருத்துவமனையின் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு களிலும் காணலாம். வெளிநாடுகளில் ஆட்டோமேட்டிக் கருவி மூலம் பொது இடங்களில் தானியங்கியாக செயல்படவும் செய்கிறது என்ன பிரச்சினைகள் குழந்தைக்கு வருகிறது என்பதனை தெரிந்து கொள்ள 48 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருப்பது அவசியம்
வருமுன் காக்க என்ன செய்யலாம்?

நன்றி seedsfor safety
