Blog Stats

  • 128,303 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

வேர்க்கரு பவுடர் தேவையில்லையா?

வெயில் காலத்தில் அனைவருக்கும் வேர்க்குரு வருவது சகஜம். வேர்க்குரு என்பது வேர்வை அதிகமாக இருக்கும்போது தோலில் உள்ள வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு தோன்றுகிறது.

தோலில் சிவந்த கொப்புளம் போன்று இருக்கும் அரிப்பு அதிகமாக இருக்கும் மேலே தடித்திருக்கும். வியர்வை வந்தால் அரிப்பு அதிகமாகும்

வெயில் காலத்தில்  போடும் துணி தளர்வாக இருக்க வேண்டும். பருத்தித் துணிகளை போடலாம் அது வியர்வையை உறிஞ்சிவிடும்

முடிந்தவரை அதிக வெயிலில் செல்ல வேண்டாம்.

குளிக்கும்போது குளிர் நீரில் குளிக்கலாம் .உபயோகப்படுத்தும் சோப்பு வறட்சியை ஏற்படுத்தக் கூடாது

துணி மூலம் துடைப்பதைவிட காற்றில் காய விட்டு விட வேண்டும். இது தானே சரியாகக் கூடியது.

மிக அதிகமான அரிப்பு இருப்பின் மருந்துகள் உபயோகப்படுத்தலாம். தோல் மடிப்புகளிலும் அக்குள், தொடையிடுக்கிலும் இடத்திலும் அதிகமாக தோன்றும் குழந்தைகளுக்கு கழுத்து ,தோள்பட்டை மற்றும் நெஞ்சில் அதிகமாக இருக்கலாம்.

முழங்கை மடிப்புகள், மேல் தோலுக்கு அடியில உள்ள வேர்க்குரு தான் அதிகமாக இருக்கும். சுத்தமான நீர் நிறைந்த கொப்புளம் போன்று இருக்கும். தடிப்பாக இருக்கலாம் .சிவந்திருக்கும். அரிப்பு இருக்கும். சில நேரங்களில் நீர் சேர்ந்த வேர்க்குரு நோய்த்தொற்று ஏற்பட்டால் சீழ்க் கொப்பளம் ஆக மாறிவிடும். தோலின் அடிப்பகுதியில் ஏற்படின் உள்ளே தங்கியிருந்த வேர்வை, சுரப்பிகளில் இருந்து வெளியேறி தோலுக்கு கீழே வரும் அது தடித்து, சதையின் நிறத்தினை ஒத்த வீக்கமாக காணப்படும்

அதிக வெப்பம், அதிக வியர்வை,புழுக்கம், அதிக வேலை, மற்றும் உயர் காய்ச்சல், காற்றுப்புகா ஆடை இவை அதிக வேர்க்குரு தோன்றக்காரணங்கள் ஆகும்.

அறை வெப்பம் குறைய சன்னலில் ஈரத்துணி போடவும்.காற்றோட்டமான இடத்தில் இருக்க வைக்கவும்.அடிக்கடி குளித்து விடவும்.நீராகாரம் அதிகம் தரவும்.அதிகம் துணி போட வேண்டாம். வியர்வை உறிஞ்சக்கூடிய பருத்தித்துணி அணியச் சிறந்தது.

வேர்க்கரு பவுடர் தேவையில்லை. அதனால் பலன் உண்டு என எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் நிரூப்பிக்கவில்லை

Copyright © All rights reserved.