Blog Stats

  • 128,339 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

அழுது மூச்சுப்பிடிக்கும் குழந்தை

1 min read
ஆறு மாதத்திலிருந்து 2 வயது வரைக்கும் உள்ள குழந்தைகள் சிலர் ஏதாவது வேண்டும் என்று கேட்பார்கள். கிடைக்கவில்லை என்றால் அழுகை அதிகமாகும் திடீரென்று வேகமாக மூச்சை உள்ளே இழுத்து பிறகு மூச்சு விடுவதை நிறுத்தி விடுவார் குழந்தையின் கை கால்கள் தொய்ந்துவிடும். சில வேளைகளில் கை கால்கள் வெட்டி எடுத்து ஜன்னி வந்து மூச்சை குழந்தை நிறுத்திவிடும். கூட இருந்து பார்க்கும் பெற்றோர்களின் உயிர் போய் உயிர் வந்துவிடும்

images (2)

ஆறு மாதத்திலிருந்து 2 வயது வரைக்கும் உள்ள குழந்தைகள் சிலர் ஏதாவது வேண்டும் என்று கேட்பார்கள். கிடைக்கவில்லை என்றால் அழுகை அதிகமாகும் திடீரென்று வேகமாக மூச்சை உள்ளே இழுத்து பிறகு மூச்சு விடுவதை நிறுத்தி விடுவார் குழந்தையின் கை கால்கள் தொய்ந்துவிடும். சில வேளைகளில் கை கால்கள் வெட்டி எடுத்து ஜன்னி வந்து மூச்சை குழந்தை நிறுத்திவிடும். கூட இருந்து பார்க்கும் பெற்றோர்களின் உயிர் போய் உயிர் வந்துவிடும் மூச்சு பிடித்து அழுதல், பிறகு கைகள் தளர்ந்து போதல் வலிப்பு போல் பிரச்சனையா? எப்படி சரி செய்வது ?என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்
மூச்சு பிடித்தலை நிறையக் குழந்தைகள் செய்யும் .பெற்றோர்களை பயப்படுத்தக்கூடிய பிரச்சனை இது. ஆனால் சாதாரணமாக பெரிய தொல்லைகளை குழந்தைக்கு தராது
ஆயிரத்தில் ஒரு குழந்தையிலிருந்து நூற்றில் நான்கு குழந்தைகள் வரை நோயற்ற பிரச்சனையில்லாத நலம் உள்ள குழந்தைகள்அழுது மூச்சுப் பிடிக்கலாம்.

images (4)

ஆறு மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்குள் பலவிதமான காரணங்களால் இது ஏற்படுகிறது என கண்டுபிடித்துள்ளனர் அதில் அனிச்சைப்பணி செய் நரம்பு மண்டலத்தின் ஒழுங்கின்மை, வேகஸ் நரம்பின் மூலம் உருவான குறைந்த இதயத்துடிப்பு, காலம் தாழ்ந்து மயலின் திசுக்கள் மூளைத் தண்டில் உருவாதல் மற்றும் இரும்பு சத்து குறைபாடு ஆகியவை நிரூபிக்கப்பட்டவை.

குழந்தை மூச்சை பிடித்தவுடன் முழு உடலும் நீல நிறமாகவும் அல்லது வெளிரியோ போகும்
கோபம் அல்லது பொறுமை இன்மை காரணமாக அழும் குழந்தை திடீரென்று அதிக சத்தத்துடன் சிறு அழுகையை வெளிப்படுத்தும் அப்போது அவனையும் அறியாமல் தன்னுடைய மூச்சை வெளியே விட்ட பின் பிடித்துக்கொள்ளும் உடனே குழந்தையின் உடல் நீலநிறமாக மாறும் கட்டை போல அல்லது தொளதொளவென்றோ இருக்கும் சிறிது நேரம் நினைவு தவறலாம். பிறகு மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மறுபடியும் சுயநினைவை பெறும்

வெளிரிப்போகும் வகை மூச்சுப்பிடிப்பில் அழகை மிகக் குறைவாகவே இருக்கும் அல்லது அமைதியாகவே இருக்கும் மூச்சு நிற்கும் நேரம் குறைவாக இருக்கும் .சுயநினைவு சிறிது நேரம் இழக்கும். உடல் தளர்வாகும். மீண்டும் மூச்சினைஉள்ளிழுத்து சுயநினைவு அடையும்
இந்த இரண்டு வகைகளிலும் மூச்சு பிடிக்கும் மொத்த நேரம் பத்தில் இருந்து 60 நொடிகளுக்குள் தான். ஐந்து வயதிற்குள் தானாகவே இந்தப் பிரச்சினை சரியாகி விடும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹிப்போகிரேட்டஸ் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் நெருங்கிய உறவினரின் குழந்தைகளுக்கு பாதிப்பு 25% இருக்கிறது மரபணு ரீதியாக இரு தலைமுறைகளுக்கு கடத்தப்படலாம்
எந்த காரணத்தினால் இது நடக்கிறது என்பது அறுதியிட்டு இறுதியாக சொல்லப்படவில்லை. அழுது அல்லது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தை தன்னுடைய மூச்சு கட்டுப்பாட்டினை உபயோகப்படுத்தி மூளை செயல்பாடுகளை அதிகரித்திருக்கும்.அப் போது நீலம் பாரித்து மூச்சை பிடிக்கிறது சில குழந்தைகளின் அதீத மூச்சை பிடிக்கும் மூளைக் கட்டுப்பாடு இதற்கு காரணமாக இருக்கிறது.
மூச்சை நிறுத்தி பயமுறுத்தும்்் இந்த குழந்தைகளுக்கு மருத்துவம் சுலபம்தான் முதலில் ஐன்னி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்

இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறதா என்று பரிசோதித்து இரும்பு சத்து மருந்து தரவேண்டும் உணவில் கீரை சிறு தானியங்கள் ஆகியவற்றை கட்டாயம் சேர்க்க வேண்டும்

 

download

குழந்தை மூச்சைப் பிடித்து அழுது மயக்கம் ஆகும்போது பதட்டப்பட வேண்டாம் ஒருபுறமாக குழந்தையை திருப்பி படுக்க வைக்க வேண்டும் நாம் சொல்லியது போல 60 நொடிக்கும் மறுபடியும் மூச்சினை உள்ளிழுத்து சுய நினைவு திரும்பி வந்தது விடும் அப்படி வரவில்லை என்றாலும் இந்த ஜன்னி தொடர்ந்தாலோ உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்

குழந்தை கேட்டதை எல்லாம் உடனடியாக தருவதோ,பிடிவாதத்திற்கு மசிவதோ கூடாது.அடிக்கடி இதுபோல் நடந்தால் மருத்துவர் ஆலோசனை தேவை

 

 

 

 

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading