childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

காதில் ஏன் சீழ் பிடிக்கிறது?

1 min read

குழந்தைகளின் காதில் சீழ் பிடித்தல்

  காதில் சீழ்பிடித்தல் சாதாரணமான குழந்தைப்பருவ நோய்களில் ஒன்று .உள் காதில் கிருமிகள் தாக்கம் ஏற்பட்டதினால் வலி பிடித்து குழந்தை திடீரென்று அழ ஆரம்பிக்கும் காது மடலை பிடித்து இழுக்கும் காது முன்பகுதியை தொட்டாலும் அழும்.கூடவே காய்ச்சல் லேசான வலி இருக்கலாம் உணவு உண்ணுவது குறைந்துவிடும் .சுறுசுறுப்பு குறைவாக இருக்கும்.காது கேட்கும் திறன் குறைந்து இருக்கும். எரிச்சலுடனும் காணப்படுவர்.காதிலிருந்து ரத்தமும் சீழும் கலந்து வரலாம்.அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைக்கு தொடர்ந்து காது சீழ் வரும் .

ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயதுக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்ணுயிர்க்கிருமிகள் நோயினை உண்டாக்கும்.உள் காதில் ஏற்பட்ட நோய்த் தொற்றினால் செவிப்பறையில் ஓட்டை ஏற்படும் .அதன் வழியே திரவம் வெளி வரும்வரை வலி அதிகமாக இருக்கும் . செவிப்பறை ஓட்டை ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விடும் அடிக்கடி நோய்த் தொற்று ஏற்பட்டாலோ அல்லது வேறு காரணங்களினால் செவிப்பறை ஓட்டை மூடாமல் இருந்தால்  கேட்கும் திறன் பாதிக்கும் .தொண்டைக்கும்    உள் காதுக்கும்இடையே இருக்கும்  குழாய்  சாதாரணமாக இரு பக்க அழுத்தத்தை சமச்சீராக வைத்திருக்கும் நோய்த் தொற்று காரணமாக தொண்டைப் பகுதி அல்லது இந்தக் குழாயின் உள் பகுதி வீங்கினாலோ  அழுத்த வேறுபாடு இருக்கும் எனவே உள்காதில் அழுத்தம் அதிகரிக்கும்

உள்ளே இருந்த பாக்டீரியா நுண்ணுயிர்க் கிருமி உள்காது திரவத்தில் நோய்த்தொற்றினை ஏற்படுத்தும் அதன் காரணமாக செவிப்பறை  வீங்கி வலியினை ஏற்படுத்தும் இந்த வலி தாங்க முடியாமல் குழந்தை தொடர்ந்து அழலாம் உணவு எடுத்துக் கொள்ளாது சுறுசுறுப்பின்றி எரிச்சலோடு இருக்கலாம் குழந்தைகளை இவ்வளவு சிறியதாக இருக்கும் அடினாய்டு நோய்த்தொற்றின் காரணமாக எளிதாக வீங்கி அடைப்பினை ஏற்படுத்தும் 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உள்காது நோய்த்தொற்று ஏற்படும் இதை உண்டாக்கும் கிருமிகளை தடுக்க   hib மற்றும் pneumococcal  தடுப்பூசிகள் உள்ளன

மருத்துவர் குழந்தையைப் பரிசோதிக்கும்போது தொண்டை பகுதிகளில் நோய்த் தொற்று இருக்கிறதா?அடினாய்டு வீங்கி உள்ளதா? செவிப்பறையில் ஓட்டை உள்ளதா ?என்பதனை கண்டறிந்து அதற்கேற்ப மருந்து தருவார்

நோய்த் தொற்றைத் தவிர்க்க கைகளை அடிக்கடி கழுவுவது குழந்தையின் கைகளை சுத்தமாக வைத்திருப்பது ,தாய்ப்பால் 2 வயது வரை தொடர்ந்து தருவது, புட்டிப் பால் தவிர்ப்பது சூப்பான் , தேன் இரப்பர் உபயோகிக்காமல் இருப்பது, காப்பகத்திற்கு சிறு குழந்தையை அனுப்பாமல் தவிர்ப்பது, குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது, சரியான உணவு பழக்கங்களை குழந்தைக்கு பழக்குவது ஆகியவை உதவும். வாய் வழியாக சுவாசித்தால் ,குறட்டை விட்டால், அடினாய்டு நிணநீர் கட்டி வீக்கம் ஏற்பட்டுள்ளதா? என்பதை மருத்துவர் முடிவுசெய்து அதற்குரிய சிகிச்சை அளிப்பார் 

வலி குறைவாக இருந்தால் பேராசிட்டமால் மருந்து மட்டும் போதும் நோய்ந் தொற்று அதிகமாக இருப்பின் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தினை தருவார் . வலியைக் குறைப்பதற்கு குறிப்பிட்ட வலிநிவாரணி சொட்டு மருந்தை மருத்துவர் ஆலோசனையின்பேரில் போடலாம் காதில் சீழ் வடிந்தால் காது சொட்டு மருந்து உபயோகம் ஆகாது தொடர்ந்து சீழ்வடியும் குழந்தைக்கு மட்டும்தான் நுண்ணுயிர்க்கொல்லிகலந்த காது சொட்டு மருந்து உதவியாக இருக்கும் 

அடிக்கடி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு செவிப்பறையில் சிறு குழாய் பொருத்துவார்கள். காது  நன்கு கேட்கவும், வலி மற்றும் தொற்றினைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்

    குழந்தைநலம் குடும்ப பலம்

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Discover more from childhealthtoday-childhealth wiki

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading