childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

பள்ளி முன்பருவக்கல்வி

1 min read

பள்ளி முன்பருவக் கல்வி வகுப்புகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர வேண்டியதில்லை என்பது கல்வியாளர்களின் கருத்து .என்ன விதமாக சொல்லித் தரலாம் என்பது பற்றிய செய்திகள் நிறைய பேருக்கு கிடைக்காது எனவே என்னென்ன சொல்லித் தரலாம் என்பது பற்றி இதோ!!
பள்ளி முன்பருவக் கல்வி ,என்ற புத்தகத்தில் டாக்டர் சி பங்கஜம் முன்னாள் துணைவேந்தர் காந்திகிராம பல்கலைக் கழகம் சாரதா பதிப்பகம் வெளியிட்டது.

பள்ளி முன்பருவக் கல்வி டாக்டர் பங்கஜம் சாரதா பதிப்பகம்


இக்குழந்தைகளுக்கு சிறந்த பொருளாதார சமூக சூழ்நிலையில் வளரும் போது எல்லா தூண்டுதல்களும் கிடைக்கும். ஏறக்குறைய அதிக எண்ணிக்கை உள்ள மக்களுடைய வீடுகளில் நவீன உலகத்தில் என்னென்ன சாதனைகள் இன்றோ அவை அனைத்தும் இருக்கிறது. குழந்தைகளுக்கு அவைகளை அறிந்து கொள்ள வேண்டும். பெயர்களை சொல்லவேண்டும். செயல்முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது பணக்கார படித்த பெற்றோர்கள் குழந்தைகளின் வினாக்களுக்கு விடை அளிக்கிறார் அதே சமயத்தில் கிராம மக்களும் புறநகர் பகுதியில் வாழும் பிற சமுதாயத்தினரும் இந்த வாய்ப்பினை தங்கள் குழந்தைகளைப் தருவது கடினம். ஆகவேதான் பள்ளி முன்பருவ கல்வியும் பள்ளிக்கூடமும் இவற்றுக்கு ஒரு மாற்று முறையாக அமைந்திருக்க வேண்டும் அவர்களது பெற்றோர்களாளும் வீடுகளாலும் கொடுக்க முடியாத வாய்ப்புகளை பள்ளிக்கூடம் தர வேண்டியிருக்கும்

முன்பருவக் கல்வி அல்லது பாலர் கல்வி என்பது புதிய தத்துவம் அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் பலர் இதன் முக்கியத்துவத்தையும் குறிக்கோள்களை விளக்கி உள்ளனர். கல்வி என்னும் பெரும் கோபுரத்திற்கு அடித்தளமாக அமைவது முன்பருவக் கல்வி தான். குழந்தையின் இரண்டரை வயது முதல் ஐந்து வயதுள்ள பருவத்தை பள்ளி முன் பருவம் எனலாம். இப்பருவத்தில் தான் குழந்தையின் அறிவு வளர்ச்சியில்50 விழுக்காடு கிடைக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் அவர்கள் வளர்ந்து குமரப்பருவத்தில் எல்லா வகையில் சிறந்த ஆளுமை உடையவர்களாக விளங்க முடியும்


பள்ளி முன்பருவ கல்வியை குறிக்கோள்களை நான்காகப் பிரிக்கலாம்.

ஒன்று .குழந்தையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் இரண்டு. சிறு குழந்தைகளுக்கு இடையில் நல்ல பழக்கங்களை வழக்கங்களை வளர்த்தல்

மூன்று. குழந்தைகள் முழுவளர்ச்சி ஊக்குவித்தல்

நான்கு.குழந்தையை அடுத்த நிலைக்கு தயாராக்குதல்

இந்த நான்கும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன .ஏதேனும் ஒரு பகுதியில் பழுது ஏற்பட்டாலும் முழுமையான வளர்ச்சி என எதிர்பார்ப்பது கடினம் .ஆகவே குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் குறிக்கோள் அமைதல் வேண்டும்
பள்ளி முன்பருவக் கல்வியின் பாடத்திட்டம் சிறந்ததாக அமைய வேண்டுமென்றால் இருக்க வேண்டிய அம்சங்கள்

ஒன்று .குழந்தையின் சூழலைக் கணக்கில் கொள்ளாமல் குழந்தையின் முழு வளர்ச்சியை ஊக்கு விப்பதாக பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும். சிறிய குடும்பம் ,பெரிய குடும்பம் ,முதிர்ந்த குழந்தை வந்தாலும் வாய்ப்புகள் நிறைந்து இருந்த இடமும், குறைந்த இடமும் இருந்தாலும், குழந்தையின் வளர்ச்சி முழுமையாக இருக்கும்படி செயல்களை மேற்கொள்ள வேண்டும் .சிறந்த பாடத்திட்டம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, விழிப்புணர்ச்சி,காப்புணர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் குழந்தையின் வயதிற்கேற்ப செயல்களை அமைத்து அவர்களின் மனதில் பள்ளியையும் கட்டளையும் மற்ற குழந்தைகளையும் நேசிக்கும் மனம் வைத்து ஊக்குவிக்க வேண்டும் குழந்தைக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் குழந்தையின் மன எழுச்சியை வளர்ப்பதற்கு உதவும். முதன்முறையாக பாதுகாக்கப்பட்ட ஒரு சூழலிருந்து இருந்து வெளிவரும் குழந்தைக்கு காப்புணர்ச்சியை ஊட்டி வளர்க்கும் வண்ணம் அமைய வேண்டியது அவசியம். இந்த பாடத்திட்டம் குழந்தையின் விறுவிறுப்பான அமைதியான செயலை சமநிலைப்படுத்துவது மீண்டும் ஒரு இடத்தில் அமர்ந்து செயலாற்றுவது கதைகள் கேட்பது,ஓடியாடி விளையாடுவது என மாறி மாறி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் விரைவில் களைப்பும் சோர்வும் அடையும் குழந்தைகல்வி கற்கும் திறனை இழக்கிறது ஆகவே குழந்தைகள் களைப்பும் சோர்வும் அடையாதவாறு நமது செயல்கள் அமைய வேண்டும் .சுதந்திர மனப்பான்மையுடன் கூடிய குழந்தையை உருவாக்குவதே ஒரு சிறந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் முக்கிய அம்சம். நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளக்கூடிய திறனை அடையும் வாய்ப்பு அளிப்பது சிறந்தது .பழக்க வழக்கங்களில் ஒரு வரைமுறை ஏற்படுத்தி தனிப்பட்ட முறையிலும் ஒரு குழுவிலும் கற்கும் சூழ்நிலைகளும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது குழந்தையின் தன்னொழுக்கத்தினையும் வளர்க்கிறது. குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்க வேண்டும் சிந்தனா சக்தி , பகுத்தறிவு, நினைவாற்றல் செயல்முறை ,பொதுமைப்படுத்தும்

திறன் ஆகியவை ஊக்கப்படுத்தப்படவேண்டும். போதனையை விட ஆய்வுக் கூடமே சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது

கருத்துக்களை திறமையோடுவெளியிடும் வழியினை வகிக்கிறது. குழந்தையின் உணர்வை மதிக்க வேண்டும் ஆக்க உணர்வின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும் .கலை இலக்கியம் இசை ஆகியவை தினசரிச் செயல்களில் அம்சங்களாக வேண்டும் மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதே சிறந்த பாடத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். சமூக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் . தன்னை நன்கு புரிந்து கொள்ளும் சக்தி பெறவேண்டும் உறுதியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் தனது முறை வரும்வரை காத்திருக்கதெரியவேண்டும்.

சிறந்த பாடத்திட்டம் தனது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கவும் உடலின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவவும் வேண்டும். ஒரு சிறந்த பாடத்திட்டம் செயல்கள் நிறைந்த ஒன்றாகும் ஆகவே அத்தகைய முன்பருவ பள்ளியில் எப்பொழுதும் ஓசை இருந்து கொண்டே இருப்பதில் வியப்பில்லை முன்பருவ பள்ளியின் செயல்கள் அனைத்தும் கவர்ச்சி மிக்கதாக அமைத்திட வேண்டும் குழந்தையின் ஆர்வத்தையும்

பெற்றோரின் தேவையையும் பூர்த்தி செய்வதாக அமைவதே ஒரு சிறந்த பாடமாகும்
ஒரு நாளைய பாடத்திட்டத்தில் இருக்க வேண்டிய செயல்கள்: உதாரணம்:

இறைவணக்கம் குழந்தை பாடச்சொல்லி பழக்கலாம். ஆரோக்கிய பரிசோதனைசெய்யலாம். சுதந்திரமாக பேசுங்கள்குழந்தைகளுடன். வெளி விளையாட்டு ஊக்குவியுங்கள். கை ,கால் சுத்தம் கழிப்பிடத்திற்கு செல்லும் பழக்கம். வீட்டுக்குள் கதை சொல்லுங்கள் பாட்டு பாடுங்கள் ஆக்கச் செயல்களைமுக்கியம். ஆயத்த செயல்கள் அவசியம் தேவை வருகை வீட்டுக்கு செல்லுதல் முதலியன தினசரி நடைபெறும் செயலாக இருக்கவேண்டும் இந்த செயல்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் பெயர், பெற்றோர் பெயர் ,இருக்கும் தெருவின் பெயர் போன்றவற்றை சொல்லித் தரலாம் .உடலுறுப்புக்கள் உணவு. உடை .இருப்பிடம் விலங்குகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ,புழுக்கள் ,செடிகள், பாகங்கள் ,இலை ,பூ ,காய், பழங்கள், காற்று ,நீர் நிலைகள், வாகனங்கள், ரேடியோ ,தொலைபேசி, திரைப்படங்கள் ,உருவங்கள், அளவுகள் ,சமூகநல ஊழியர்கள் காவலர்கள் பாதுகாவலர்,பால்காரர் செருப்பு தைப்பவர்கள், நெசவாளி மருத்துவர் விஞ்ஞானி ஆசிரியர் அறிவியல் பொருட்கள், மிதத்தல், கீழே விழுதல், விதை முளைத்தல் தண்ணீரில் இறைக்க உதவும் உருளை ,சுவை மணம் ஆகிய பண்புகளை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் அமைந்தால் என்றால் குழந்தையின் அறிவு வளர்ச்சியும் மற்ற வளர்ச்சியும் ஒருங்கிணைந்து வளர வாய்ப்புகள் ஏற்படும்
உதாரணமாக ஜூன் மாத பாடத்திட்டத்தில்
1.தாய் தந்தை உடன்பிறந்தவர் பெயர்கூறச்செய்தல் காலையில் மாலையிலும் வணக்கம் கூறும் பழக்கத்தை ஏற்படுத்துதல்,

2- ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கற்றுத் தருதல் அதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதல் நல்ல உணவுப் பழக்கம் குறிப்பிட்ட இடத்தில் சிறுநீர் மலம் கழிக்கச் செய்யும் பழக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துதல்
3.மொழிப் பயற்சியாக குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர் ஆகியவற்றை அறியச்செய்தல்
4.பாட்டு பள்ளியின் அவசியத்தையும் ஆரோக்கிய பழக்கவழக்கங்களிலும் கல்வியின் அவசியத்தையும் பற்றியது
5.கதை ஆரோக்கிய பழக்கவழக்கங்கள் பற்றிய கதைகள்
6.ஆக்க வேலை. கரும்பலகையில் கிறுக்குதல் களிமண்ணைப் பிசைந்து விளையாடுதல் காகித்தை கசக்குதல்


ஜூலை மாத பாடத்திட்டம்
1.மனித உடலும் உணவும் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிதல் சுவாசித்த காற்று அவசியம் என்பதை உணர்த்துதல். நோய் வராமல் தடுப்பது எப்படி என்று சொல்லித் தருதல். உணவின் அவசியத்தையும் உணவுப் பொருள்கள் பெயர்களையும் சொல்லித் தருதல் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் விதை நடுதல் தண்ணீர் விடுதல் விதை முளைத்தளைக் கவணித்தல்
2.வெளிப் பயணம்
மாட்டுப் பண்ணைக்கு அழைத்துச் செல்லுதல் காய்கறி தோட்டத்துக்கு அழைத்துச் செல்லுதல் ஆட்டுப்பண்ணை பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்
3.மொழிப் பயிற்சி ஆசிரியரின் பெயரையும் மற்ற குழந்தைகள் பெயரையும் சொல்லி தருதல் தான் வசிக்கும் ஊரின் பெயரையும் தன் பெயரையும் அறியச் செய்தல்
4.பாட்டு பாடத்திட்டத்தை தழுவிய பாடல்கள்
5.கதை பாடத்திட்டத்திற்கு ஏற்ற கதைகள்
6.ஆக்கவேலை. சாக்பீஸால் சிலேட்டில் கரும்பலகை படம்வரைதல் வண்ண வண்ண , மெழுகுபென்சில்களளைல் காகிதத்தில் படம் வரைதல் களிமண் வேலை மணிகோர்த்தல்

அப்பப்பா எத்தனை விதமாக சொல்லித் தரலாம் குழந்தைகளுக்கு சிறிது மனது வைத்தால் ஒவ்வொரு வீட்டில் தினசரி நடக்கும் விஷயங்களை குழந்தைகளுக்கு மிகப்பெரிய கற்றுத்தரும் அனுபவத்தைத் தரும் பள்ளி முன்பருவக் கல்வியினை அழிக்க விரும்புகிறேன் பெற்றோர்களுக்கு மிகச் சிறந்த புத்தகம் சாரதா பதிப்பகம் வெளியிட்ட இந்த புத்தகம் எளிதில் கிடைக்கிறது தொடர்பு கொள்ள 9444082232

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading