Blog Stats

  • 128,340 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஆண் குழந்தை பிறக்கும் என உறுதியாகச் சொல்ல முடியுமா?

1 min read

Pregnant woman in gender anticipation. Close up image of pregnant woman's belly and hands holding pink and blue tiny baby shoes (side view). With copy space.

நல்ல ஆழ்ந்த உறக்கம் வரக்கூடிய காலை 3லிருந்து 4 மணிக்குள் சிசேரியன் ஆபரேஷன் என்று மருத்துவமனையிலிருந்து தகவல் வந்தால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்!! யாரோ ஒருஜோதிடர் சொன்னதை நம்பி மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் குழந்தை பிறப்பதற்கு அதுவும் ஆண் குழந்தை, இது நல்ல நட்சத்திரம் என முடிவு செய்து அதற்காக முழு குடும்பமும் வந்து தயாராகி உட்கார்ந்து இருப்பார்கள்

என்னுடைய 30 வருட குழந்தைகள் மருத்துவ அனுபவத்தில் இந்த மாதிரி ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்று ஜோசியர் சொன்னதை நம்பி வந்த பார்த்தால் காலையில் பிறப்பது ஒரு அழகான பெண்தான்;!!(இந்த என்னோட சோதிடம் எப்பவும் பொய்யானதில்லை !!!!)
குழந்தை உருவாவது, பிறப்பது ,எப்படி! ஆண் குழந்தை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு உங்கள் ஜாதகத்தில் ஏதாவது கிரக அமைப்பு இருக்க வேண்டுமா?(!!!!!) என்பதைப் பற்றி எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முதலில் சமூகத்தில் நிலவும் சில நம்பிக்கைகளை பற்றி பேசுவோம் ஆண்குழந்தை வேண்டும் என்பது நமது சமூகத்தின் ஒரு மிகப்பெரிய ஆசை. ஆண் குழந்தை தான் அந்த குடும்பத்தின் வாரிசாகக் கருதப்படும்.சொத்து அவர்களுக்கு மட்டும்தான்(கடனும் தான்) அதனால் சாண் குழந்தை என்றாலும்ஆண் குழந்தை தேவை (உண்மையான அர்த்தம் இதுதானா?)என்ற சமூக மன நிலை. இப்போது உள்ள சூழ்நிலையில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே அளவு சொத்தில் சமபங்கு. இதில் ஆண்/பெண் குழந்தை வாரிசு என்ற பிரிவினைக்கு இடமில்லை.

ஆண் குழந்தை பிறப்பதற்கு வலது புறம் திரும்பி படுக்க வேண்டும் இடது புறம் படுத்தால்பெண் குழந்தை .மூச்சுக்காற்று வலதுபுறமாக வரும்போது தாம்பத்திய உறவு கொண்டால் ஆண் குழந்தை என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் நாட்டில் எக்கச்சக்கம்.எனக்குத்தெரிந்து இதைப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் குறைந்தபட்சம் ஒரு சர்வே கூட எடுத்துப் பார்த்தது இல்லை. எனவே இதை நம்புவதா வேண்டாமா என்பது நிகழக்கூடிய ஊகக் கருத்தினைப் (probability theory)பொருத்தது!! இதன்படி எப்படி இருந்தாலும் 50 சதவீதம் ஆண் குழந்தைகளும் 50 சதவீதம் பெண் குழந்தைகளும் பிறக்கும்.

ஆண் குழந்தை பிறந்த அந்த 50% பேர இதனால் தான் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று உங்கள் தலையிலடித்து, சாமி அறையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வார்கள்.ஜோதிடம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஜோதிடம் என்பதினை எவ்வளவு தூரத்துக்கு நம்பலாம் அதனால் பலன் ஏதும் உண்டா? என்பதனை இந்த 2020 கொரோனா நோய்த் தொற்று நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டு விட்டது ஜனவரி 1ஆம் தேதி அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் பேசிய மிகப் பிரபலமான ஜோதிடர் அனைவரும் 2020 பற்றி என்ன சொன்னார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் ஜோதிடத்தை நம்புவதா ?வேண்டாமா ?என்பது உங்களுக்கு புலப்படும்


ஆண் குழந்தை எப்படி உருவாகிறது?
ஆண் பெண் இருவருக்கும் 46 குரோமோசோம்கள்((23 இணைைைைை)கள்கள்களக இருக்கின்றன அதில் 22 இணைகள்உடல் உறுப்புகளுக்கான குரோமோசோம்கள் 23வது இணை ஆணா ?பெண்ணா? என்பதைத் தீர்மானிக்கும்

ஆணின் விந்தணு கருமுட்டையோடு சேரும்போதுகுழந்தை உரிவாகிறது. பெண்ணின் கரு முட்டையில் எக்ஸ்\ எக்ஸ் குரோமோசோமும் ஆணின் விந்தணுவில் எக்ஸ்\ ஒய் குரோமோசோம் ஆகிய இரண்டும் உள்ளன ஆணின் விந்தனுவில் உள்ள எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணின் கருவிலுள்ள எக்ஸ் சோடு சேரும்போது பெண் குழந்தையும் ஆணின் விந்தணுவில் உள்ள ஒய் குரோமோசோமோடு சேரும்போது ஆண் குழந்தையும் உருவாகிறது.எனவே குழந்தை ஆணா? பெண்ணா ?என்பது தந்தையைப் பொருத்துதான் என வே ஆண் குழந்தை பிறக்க வில்லை என்று இரண்டாம் தாரம் கட்டுவது இன்னும் நான்கு பெண்களை குடும்ப உறுப்பினர்களாக்க காரணமாக இருக்கும்.


ஆண் குழந்தை மோகத்தினைைைைத் தவிர்க்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை . திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண் சுயம்வர பரிதாப நி லை வந் தே தீரும்.நிறைய மாவட்டங்களில் 1000 ஆண்களுக்கு ,950 க்கு கீழே பெண் குழந்தைகள் என்ற விகி தம்இப்போது வந்துவிட்டது இதனை தடுக்கவே அரசு கருவிலே குழந்தையின் பாலினத்தை கண்டறியும் பரிசோதனையை தடை செய்திருக்கிறது.பெண் சிசு கொலைகளை தடுக்க அரசு திட்டங்களும் இருக்கின்றன உசிலம்பட்டி பகுதியில் இருபது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பெண் சிசுக்கொலை தடுப்பு சட்டத்தில் தப்பிய குழந்தைகள் இன்று அங் கு சேவை செய்யும் சுகாதார ஊழியர்கள் ஆக மாறி வந்து இருப்பது அக் கண்ணைை திறக்க வேண்டும்

ஆணோ? பெண்ணோ? குழந்தையை எவ்வாறு நாம் வளர்க்கிறோம் என்ன விதமாக சொல்லித் தருகிறோம் ?எவை அவர்களுடைய விழுமியங்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் எதிர்பார்த்தபடி ஆண் குழந்தையாகப் பிறந்து விட்டால் அதுவும் பெண் குழந்தைகளாக இருந்த அந்த குடும்பத்தில் முதல் ஆண் குழந்தையாக இருந்து விட்டால் தொலைந்தது . அனைவரின் செல்லம் துளிகூட கண்டிப்பு இல்லாமல் அனைத்துக்கும் சரி என்ற பெற்றோரின் மனப்பான்மை ,நிறைய நேரங்களில் யாருக்கும் அடங்காத, முரட்டுத்தனமான உலகத்தோடு ஒத்து வராத, தனக்கென மட்டும் வாழும் ,ஒரு தனி மனிதனை உருவாக்கி விடுகிறது என்னுடைய 30 வருட அனுபவத்தில் 50 %ஜோசியக்காரன் சொன்னபடி ஆண்குழந்தை பிறந்தது இல்லை . என்ன குழந்தையாக இருந்தாலும் நல்ல குழந்தையாக இருந்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக பிறந்திருக்கிறது!!! இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு ஆசையாக பெண் குழந்தைகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள்!!! அதுவுமில்லாமல் இது வாழ்க்கை நம்முடன் விளையாடும் விளையாட்டு கலந்து கொள்வோம். மகிழ்ச்சியாக வாழ்வோம்

சோதிடம் தவிரப் பல நம்பிக்கைகள் உள்ளன. பொழுது போக வேண்டுமெனில் நேரம் இருப்பின் கீழே சொடுக்குங்கள். எல்லாமே நிகழக்கூடிய ஊகக் கருத்தினைப் (probability theory)பொருத்தது!!

அவைகளைப்பற்றி அறிய

1.https://www.baby-chick.com/old-wives-tales-babys-gender/

2.https://www.verywellfamily.com/predicting-the-sex-of-your-baby-facts-and-myths-4580299

3.https://www.thebump.com/a/gender-prediction-tests

4.https://dailymom.com/nurture/ways-to-predict-baby-gender-when-can-you-tell/

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading