இரத்த மச்சம்!!!
விட்டலாச்சாரியா படத் தலைப்பு போல இருக்குது!ன்னு பயந்துட்டீங்களா?சாதாரணமாக சதைக்கு நடுவே இருக்கக்கூடிய ரத்தக்குழாய்கள் மேல்தோலில் செவப்பா தெரியறதுதான் ரத்த மச்சம்.( Haemangioma)
பார்த்தாலே ரொம்பப் பயமாக இருக்கும். இது உடம்பில் எந்தப் பகுதியிலும் கூட வரலாம்.. பிறந்த குழந்தைகளுக்கு கண்,காது.தலை இமைகள்,கழுத்துக்கு பின்னாடியும் இருக்கலாம் .நிறைய குழந்தைகளுக்கு படிப்படியா ஆறு மாதம் முதல் இரண்டு வயதுக்குள்ள குறையக் கூடிய வாய்ப்பும்தானே சரியாகிவிடக்கூடிய தன்மையும் கொண்டது.
ஆனா சில குழந்தைகளுக்கு சிறியதாக இல்லாமல் மிகப் பெரியதாக இருக்கும் .குழந்தை வளர வளர இதனுடைய அளவும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் நிறைந்திருக்கும். அதனால இது நன்கு சிவந்து இருக்கும் ஏதாவது நகமோ கூர்மையான பொருள் பட்டால் ரத்தம் கசியத் தொடங்கி விடும். பார்ப்பதற்கே பயமா இருக்கும்.இது பயப்படக்கூடிய நோய் அல்ல! ஆனால் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது
இது ஒரு நோயா ?இதற்கு என்ன செய்யணும்? மருத்துவச் சிகிச்சை எல்லாவற்றிக்கும் செய்யணுமா? அப்படிங்கறத பற்றிஇப்ப பார்ப்போம்
சாதாரணமாக ரத்தக்குழாய்களுடைய வளர்ச்சியை குறைக்கக்கூடிய ஒரு சத்து உடலில் உள்ளது போதுமான அளவு குறிப்பிட்ட இடத்தில் அந்த சத்து வேலை செய்யலை என்றால் இது தோன்றும். குழந்தையின் கை, கால்கள், முதுகு தலை என எங்க வேணாலும் இருக்கும் .மிகச்சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவு வரை கூட இருக்கலாம் சில நேரங்களில் கண் பார்வையை மறைக்கும் அளவுக்கு இருக்கும் போது உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது இருக்கும்
அதுக்கு பதிலா மிகக்குறைவாக இருக்கும் போது பெரிய தொல்லை இல்லை இதை கண்காணிப்பில் வைத்திருந்தால் போதும் ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வயது வரை கொஞ்சம் கொஞ்சமா அளவு பெரிதாகி வரும் அதற்கு பிறகு தானே குறைந்து மறைந்து போய்விடும்
சிலநேரங்களில் இதனுடைய அளவு மிக அதிகமாகி முக்கியமான உறுப்பினுடைய வேலை பாதிக்கப்படலாம்உடனடி சிகிச்சை செய்ய வேண்டும் (கண்ணிமையில் இருக்கும் இது கண் பார்வையை பாதிக்கிறது )
இதற்கான மருத்துவ சிகிச்சைகள்:
1..அறுவை சிகிச்சை
2 .லேசர் சிகிச்சை மூலம் அதை நீக்குவது 3
3.ஊசி மூலம் மருந்தினை மச்சத்தின் உள்ளேயே போடுவது
4 புரோபிரனால் மருந்தினை வாய்வழியாகத் தருவது.இது எல்லா இடங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது .ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தர வேண்டும். குறைந்தபட்சம் 6 இருந்து 12 மாதங்களுக்கு தரும்போது முழுவதும் சரியாகிவிடும.
மருந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுடைய ரத்த அழுத்தம் மூச்சுத் திணறல் மூச்சு விட சிரமம் மற்றும் சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட வேண்டும்
நூற்றுக்கு 99 சதவீதம் குழந்தைகளுக்கு இந்த இரத்த மச்சம் தானே மறைவதால் இது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
