- “மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் சிவப்பு கண் நோய் உள்ளவர்களைப்பார்த்தால் நமக்கும் அந்நோய் வந்து விடும். எனவே அவங்க கண்ணிற்கு கருப்புக்கண்ணாடி போட்டுக்கிட்டா மற்றவர்களுக்கு பரவாது.ஏனெனில் நம்ம கண்ணை அவங்க நேரடியாகப்பார்ப்பதில்லை!” என்பது ஒரு பரவலான நம்பிக்கை.இது உண்மையா? பொய்யா?என்பதினைப்பற்றி இப்போது பார்ப்போம்.சிவப்புக்கண் நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.ஒரு கண் அல்லது இரண்டு கண்ணும் பாதிக்கப்படலாம்.கண் சிவந்து வலியுடன் இருக்கும்,உடல் வலி,தலைவலி இருக்கும்.கண்ணிலிருந்து பூளை வரும்.கண்ணிற்குள் ஏதோ தூசி உள்ளது போல் உறுத்தல் இருக்கும்.ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நேரடியாகவோ அல்லது அவர்கள் உபயோகித்த துணி,துண்டு மற்றும் பொருட்கள் மூலமாகப் பரவலாம்.நோய்க்கிருமி கண்ணிற்குள் நுழையும்போது தொற்று ஏற்பட்டுநமக்கும் நோய் ஒட்டிக்கொண்டு விடுகிறது.இப்ப உங்களுக்கு எப்படி சிவப்புக்கண் வருகிறது என்பது தெளிவாகத்தெரிந்திருக்கும் .சிவப்புக்கண் நோய் வந்தபின் என்ன செய்யணும் எனப் பார்ப்போம்
1.கண்களை கழுவி சுத்தமாக வைத்திருக்கவும்.
2.கண் மருத்துவர் பரிந்துரைத்த கண் சொட்டு மருந்துகளை நாட்களுக்கு போடவும்.
3.,கண்ணின் மேல்பகுதி மட்டும் பாதிப்படைந்துள்ளதா அல்லது உள்ளேயும் நோய் பரவிஉள்ளதா என்பதினைப்பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைப்பார்.
4.பெரும்பாலோனர்க்கு 5 நாட்கள் கண் மருத்துவச்சிகிச்சை தேவைப்படும்.வெகுசிலருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படலாம்.
5.உங்களுடைய கண் மருந்துகளை மற்றவர் உபயோகிக்க வேண்டாம்.கிருமி தொற்று வரலாம்.
6.அடிக்கடி தண்ணீரில் கண்ணைக் கழுவி சுத்தமாக வைத்திருக்கவும்.
7.பூளைக்கண்ணைத்துடைக்க உபயோகிக்கும் துணிகளை மற்றவர் தொடக்கூடாது,
8.மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டாம். அவர்களுக்கும் சுலபமாக பரவி விடும்,விளையாடப்பயன்படுத்திய பொருட்களை மற்ற குழந்தைகள் உபயோகிக்கக்கூடாது.
9.மருந்துகளை சொன்ன நாட்களுக்குப் போடவும்,மறுபரிசோதனையை குறித்த நாளில் செய்து கொள்ளவும்,
10.கருப்புக்கண்ணாடி போடுவதால் எந்த பயனும் இல்லை,
11.நந்தியாவட்டையின் பால் கண்ணில்விழுந்தால் கண் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும்
11.தாய்ப்பால்,கழுதைப்பாலினை கண்ணில் விடக்கூடாது.
