Blog Stats

  • 128,337 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையின் தலை ஏன் சூடாக எப்போதும் இருக்கிறது?

1 min read

fever child. 1jpg

நிறைய பெற்றோர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
குழந்தை தல சூடா இருக்கு! இது காய்ச்சலாக இருக்குமா?காய்ச்சல்னா என்ன காரணம் ?நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா? விளையாடுது!! இது நோயா? இல்லை உடம்பு மட்டும் சூடா இருக்குதா?

ஒரே குழப்பமா இருக்கா? அப்படி இருந்தா இந்தக் கட்டுரையை தொடர்ந்து படிங்க. குழந்தையினுடைய தலை ஏன் சூடா இருக்கு? பிரச்சனையின் காரணமாகவா? என்பதைப் பற்றி பார்ப்போம்
1.பெரியவர்களை விட குழந்தைகளுக்குதலையின் அளவு உடலின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக விகிதாச்சாரத்தில் இருக்கும்
2. குழந்தை வளர வளர மூன்று வயது வரை மூளை வளர்ச்சியும் இருக்கும்.2% எடை உள்ள மூளைக்கு 20% இரத்த ஓட்டம் தேவை. மூளைதிசுக்கள் வளர்ச்சிக்கு முக்கியமான தேவை ரத்தம் ஓட்டம் எனவே ரத்த ஓட்டம் பெரியவர்களை விட வளரும் குழந்தையின் மூளைக்கு செல்வது அதிகமாக இருக்கும்

3 .ஒன்னரை வயது ஆகிவிட்டால் போதும். ஒரு இடத்தில் நிற்க மாட்டார்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஒரே ஓட்டம்தான் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாமே குழந்தை விளையாடிக் கொண்டே தான் இருக்கும் அதிக விளையாட்டு ஓட்டம் ஆகியவற்றினால் தசை இயக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது இந்த தசை இயக்கத்தினால் உடலின் பி.எம்ஆர் அதிகமாகிறது

4.அடுத்தது பெற்றோர்களில் ஒருவர் அதிக உடல் சூட்டினை கொண்டவராக இருந்தால் குழந்தையின் உடல் சூடும் தாய் தந்தையைப் போலவே அதிகரித்திருக்கும் தொட்டுப் பார்க்கும் போது எந்நேரமும் உடம்பு சுட்டுக்கொண்டு இருப்பது போல் தோன்றும்
5. வெயில் காலத்தில் போதுமான நீர்ச்சத்து பருகவில்லை என்றால் குழந்தையின் உடலும் தலையும் சூடாக இருக்கும் தலைக்கு எப்போதும்மும் ஸ்வெட்டர் போட்டு இருந்தாலோ அதிக துணிகளைப் போட்டு குழந்தையை எந்நேரமும் பொதித்து வைத்திருந்தாலோ சூடு அதிகமாகும்
நாம் முதலில் சொன்னபடி பெரியவர்களைவிட குழந்தையின் தலை பரப்பளவு உடலோடு சேர்த்து போது அதிகமாக இருப்பதனால் தலை சூடு மற்ற பகுதிகளை விட அதிகமாக முதலில் தெரிகிறது. தலை சூடாக உள்ள குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கிறார்களா ?விளையாடுகிறார்களா? சாப்பிடுகிறார்களா? சரியாக சிறுநீர் கழிக்கிறார்களா?என்று பார்க்க வேண்டும் அவர்களுடைய தூக்கமும் நல்ல முறையில் இருந்தால் அவர்களுக்கு எந்த நோய் தொற்றும் கிடையாது உடல்சூடு மட்டும் அதிகமாக இருக்கிறது அது காய்ச்சலும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துவிடலாம்

pexels-photo-3873176
Photo by Polina Tankilevitch on Pexels.com
fits 2

காய்ச்சல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம் குழந்தை உடல் வெப்பம் 36 .5 செல்சியஸ்லிருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சொல்லப்போனால் உடல் வெப்பம் ஒரே அளவாக எப்போதும் இருக்காது காலையில் உள்ள உடல் வெப்பத்தை விட மாலை நேரத்தில் உடல் வெப்பம் சிறிது(0.5 செல்சியஸ்)அதிகமாக இருக்கும் .விளையாடிய பின் அதிகமாக இருக்கும் நீர் சத்து குறைந்தால் ,சுடுநீரில் குளித்தால் ,கம்பளி மற்றும்வெப்பத்தை வெளிவிடத துணிகளை அணிந்து இருந்தால் உடல் சூடும் தலை சூடும் அதிகமாக இருக்கும்

நிறைய பெற்றோர்கள் தலை சூடு இருந்தால் அது மூளை காய்ச்சலா? என்ற சந்தேகப்படுவர். மூளை காய்ச்சல் முக்கியஅறிகுறி முன்னே இருந்தது போல் குழந்தையின் நடத்தை இருக்காது அதாவது குழந்தை சிரிக்காது. முகம் பார்த்த குழந்தை முகம் பார்க்காது. உச்சி வீக்கமாக இருக்கும் தொடர்ந்து வாந்தி சோர்வு அதிகமாகும் தூக்கம் சரியாக இருக்காது உணவு சரியாக உட்கொள்ளாது படுத்தே கிடைக்கும் என ஆரம்பித்து வழக்கமான சூழலுக்கு மாறுபட்டு குழந்தை இருக்கும்

கூடவே தொடர் காய்ச்சல்,வலிப்பு,அடையாளம் காணாமை,உளறல்,நினைவு இழப்பு உள்ளிட்ட மற்ற அறிகுறிகளும் தென்படும் எனவே தலை சூடு என்றால் மூளைக்காய்ச்சல் என்றோ அல்லது நோய் தொற்றினால் ஏற்பட்டது என்றோ பயப்படவேண்டாம்

medicines thermometer
Photo by Kaboompics .com on Pexels.com

குழந்தையின் உடல்நலம் சரியாக இருப்பின் கவலை வேண்டாம் வெயில் காலங்களில் அதிக திரவ உணவுகளை குழந்தைக்கு தருவது மிக நல்லது குளிர் காலங்களில் மட்டும் வெப்பத்தை வெளிவிடாத துணிகளை அணியுங்கள் மற்ற நேரங்களில் அதைத் தவிர்க்கவும் தேவை இன்றி காய்ச்சல் மருந்துகளை தர வேண்டாம்

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading