Blog Stats

  • 152,867 hits
ஜூன் 10, 2026

childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் விடலைப்பருவ மாற்றங்கள்

1 min read
நன்றி வெரிவெல் பேமிலி

ஸ்மார்ட் நூலிலிருந்து

உடல்கட்டுமஸ்தாகும். அரும்பு மீசை, குறும்புப் பார்வை பிறக்கும்.

குரல் உடைந்து கட்டைக் குரலாகும். அந்தரங்க உறுப்புப் பகுதி, மார்பு, அக்குள் மற்றும் முகப் பகுதியில் முடி முளைக்கும். மார்பக வளர்ச்சி, சிலருக்கு இயக்குநீர்களினால் (ஹார்மோன்கள்) மார்பகம் பெரிதாகலாம். எனவே அவன் வெட்கப்படலாம். பயமில்லை. ஏதும் செய்ய வேண்டியதில்லை என்ற உறுதிவார்த்தையே போதும். இறுக்கிப்பிடித்த பனியன் மேல், பெரிய சட்டை அணிவித்தால் மார்பக வளர்ச்சி வெளியே தெரியாது.

நன்றி பீடியாட்ரிக்ஸ்இன் ரிவியூ

தூக்கத்தில் விந்து வெளியேறுவது பருவ வயதில் நடக்கும் இயல்பான விஷயம். கனவுகளோடு தொடர்பிருக்கலாம். ஆண் வயதிற்கு வந்ததின் அறிகுறியாகக் கூட இதனைக் கருதலாம்.

சுயஇன்பம் அனுபவிப்பது பற்றிய குற்ற உணர்ச்சி குழந்தைகளுக்கு இருக்கிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நல்லஉறவுகள், அனுபவங்கள் மற்றும் சமூகத் தொடர்புகள், என்னேரமும் சுயஇன்பம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்க உதவும்.

நன்றி பேரன்டாலஜி

தன்பாலின ஈர்ப்பு (ஓரினச்சேர்க்கை)

பருவ வயதுள்ள ஆண் பெண் இருவருக்கும் ஏற்படலாம். விடுதியில் தங்கியிருத்தல் மற்றும் என்னேரமும் சேர்ந்திருக்கும் சூழல், சமூக, கலாச்சார, மனவியல் மற்றும் பாரம்பரிய தாக்கங்களும் இதற்கு காரணமாகலாம். இது வந்து நீங்கும் நிகழ்வாகவும் அமையலாம். குழந்தையை நிராகரித்து ஒதுக்க வேண்டாம்.

ஆபாசப் படங்கள் பார்ப்பது, கதைகள் படிப்பது பாலியல் உந்துதல் மற்றும் ஆர்வக்கோளாறின் காரணமாக நடக்கலாம். தொடர்ந்து இவைகளைப் பார்ப்பதால் தந்தை, சகோதரன், தாய், சகோதரி என்கிற உறவுகள் சிதைந்து, ஆபாச எண்ணங்கள் தான் மனதில் நிற்கும். தேவைப்பட்டவர்களுக்கு மனவியல் வல்லுனர் ஆலோசனையையும் மருத்துவ உதவியையும் பெறவும்.

நன்றி விக்கி ஹௌ

உங்கள் குழந்தைக்கு வாழ்க்கைக் கல்வி பற்றி எவ்வளவு தெரிந்துள்ளது என பார்க்கவும். தவறான புரிதல்களை களையவும். உங்கள் குடும்ப பண்புகள் ,எதிர்பார்ப்புக்கள்,வீட்டுச்சூழல் பற்றி புரியும்படி சொல்லித் தரவும். 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading