childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஊரடங்குகாலத்தில்பால்பவுடர் மற்றும்குழந்தைஉணவு கம்பெனிகளின் சட்டமீறல் – 1

1 min read

ஊரடங்கு காலத்தில் பால் பவுடர்  மற்றும் குழந்தை உணவு கம்பெனிகளின் சட்டமீறல்

பால் பவுடர்  மற்றும் குழந்தை உணவு என விற்கப்படும் டப்பாக்கள் பேரிடர் காலங்களில் இலவசமாக பல சேவை நிறுவனங்களால் தரப்படுகின்றன இது

ஐ எம் எஸ் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்

image001தாய்ப்பால் தரும் தாய்க்கு தேவையான உணவு ரேஷன் கடைகள் மூலம் இவலசமாக வழங்கப்பட வேண்டும் உணவு கிடைக்காமல் பசியால் வாடும் குழந்தைகளுக்கு போதுமான இணை உணவினைத் தர வேண்டியது அரசினுடைய கடமை .மூடப்பட்டுள்ள சத்துணவு கூடங்களில் கணக்கில் உள்ள இணை உணவு மாவுகள் வீடுகளுக்கு தரப்படவேண்டும் அதைவிடுத்து போதுமான சுத்தமான தண்ணீர்கூட இல்லாத. சுகாதார வசதிகள் குறைந்த வீட்டில் இருக்கும்  தாய்மார்களுக்கு பால் பவுடர் டப்பாக்களை தருவது மிகப்பெரிய நோய்ச் சூழலுக்கு ஆளாக்கி விடும் . தேவைப்படும் குழந்தைகளுக்கு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் .பால் தருவது விவசாயிகளுக்கும்  உதவியாயிருக்கும்.டப்பா பாலைக் கொதிக்க வைக்க முடியாது.அதன் மிலம்  கிருமிகளைக்கொல்ல முடியாது என்பது நிறையப்பேருக்கு தெரியாத தகவல்.

image001

உலகம் முழுதும் 2014 வெளியிடப்பட்ட டைகர் என்ற படம் பன்னாட்டு பால் பவுடர் கம்பெனி ஒன்று தன்னுடைய விற்பனை பிரதிநிதிகளை எவ்வாறு உபயோகப்படுத்துகிறது என்பதினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எவ்வாளு அவர்களுடைய உணவு டப்பாக்களை வாங்க பழக்கியது கையில் காசில்லாத தாய்மார்கள் எவ்வாறு குழந்தைக்கு தண்ணீரைச் அதிகருத்து சத்துக்களை குறைத்து கொடுக்க ஆரம்பித்தனர்? அதனால் குழந்தைகளுக்கு எப்படி சத்துக்கள் குறைந்தது? புட்டியில் தருவதன் மூலம் கிருமிகள் எவ்வாறு பரவின? எத்தனை விதமான பிரச்சனைகள் அந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டன ?என்பதை எல்லாம் பட்டவர்த்தனமாக அந்தப் படம் காண்பிக்கிறது .ஜீ 5 சேனலில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய அந்த படத்தை நிறைய பேர் பார்த்து இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

இன்றைய சூழ்நிலையில் எப்படி தாய்ப்பால் கொடுப்பது? என்று பொதுமக்களுக்கு சொல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தருகிறேன் என  என்று மறைமுகமாக இந்த வகையான கம்பெனிகள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர் முகநூலிலும் மற்றும் யூடியூபிலும் இவர்களுடைய திருவிளையாடல்கள் காணக்கிடைக்கின்றன

image005

தங்களுடைய பால் பவுடர்  மற்றும் குழந்தை உணவு கம்பெனிசின்னத்தினையோ கம்பெனி சார்பில்   இந்த செய்திகளை சொல்லுகிறேன் என்று பொது வெளியில் வரக்கூடாது என்பதுதான்  IMS  சட்டத்தின் உடைய சாராம்சம். சமூக சேவை .மக்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இவர்களுடைய இந்த செயல் தாய்ப்பால் ஊட்ட நினைத்திருக்கும் தாய்மார்களுக்கு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.புட்டியில் தந்த பின் நேரடியாக பால் ஊட்ட சிரமப்படுவார்கள். பால் போதவில்லை என்று தங்கள் தன்னம்பிக்கை இழப்பார்கள் அப்போது கையில் உள்ள பால் பவுடரை கொடுத்தால் என்ன என்று தோன்றும் கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனியின் வலைக்குள் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியின் நிலைதான். 40 வருடங்களுக்கு முன் இருந்த பாட்டில் பழக்கம் எவ்வளவு சிரமத்துக்கு இடையில் சுலபமாக ஒழிந்து வரும் இந்த சூழ்நிலையில் இந்த கம்பெனிகளின் செயல் நாட்டுக்கும் நல்லதல்ல நம்நாட்டு குழந்தைகளுக்கும் நல்லதல்ல

இவர்களுடைய பணபலம் சமூகத் தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்புகள் மூலம் வெகு சுலபமாக இவர்களால் சட்டத்திற்குப் புறம்பான தங்கள் செயல்களை தொடர்ந்து செய்ய முடிகிறது எக்காரணத்தைக் கொண்டும் இந்த கம்பெனிகள் எந்த ஒரு மருத்துவ மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதோ நடத்துவதற்கு உதவி செய்வதோ அல்லது பின்னணியில் இருந்து செயல் புரிவது கூடாது . இந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற உண்மை நிறைய மக்களுக்கு ஏன் மருத்துவர்களுக்கு தெரியாமல் இருப்பதினால் இவர்கள் சித்து விளையாட்டு செல்லுபடி ஆகிறது.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading