Blog Stats

  • 128,303 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஊரடங்குகாலத்தில்பால்பவுடர் மற்றும்குழந்தைஉணவு கம்பெனிகளின்சட்டமீறல் -2

1 min read

NESTLE2019 இல் நடந்த உலக சுகாதார நிறுவனக் கூட்டத்தில் அமெரிக்க பால்பவுடர் கம்பெனிகளின் நலனுக்காக சட்டத் திருத்தத்தை கொண்டு வர ஈகுவடார் நாடு துன்புறுத்தப்பட்டு அரசியல் மற்றும் இராணுவப் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என்று மிரட்டப்பட்டது. கடைசி நேரத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் தான் அந்தத் திருத்தம் தடை நிறைவேறாமல் தடுக்கப்பட்டது.

Code of marketing of breastmilk substitute ஏற்படுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆனது என்பது களத்தில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். 1992இல் ஐ எம் எஸ் சட்டம் வந்தாலும் 2005இல் விதிமுறைகள்  கடினப் படுத்தப்பட்டன.

இந்த கம்பெனிகளுடைய வழிமுறைகள் சிலந எதிர்த்து குரல் தரும் விமர்சகர்கள் மற்றும் பொதுநல ஊழியர்களை பேச விடாமல் செய்வது .கொள்கை முடிவு எடுப்பவர்களுடன் கைகோர்த்து வேலை செய்வது. தனக்கு ஆதரவைத் திரட்டுவது .மருத்துவ ஊழியர்களுக்கு பரிசுப் பொருட்களை தருவது குழந்தைநல உணவுகளை சட்டப்படி கட்டுப்படுத்தும் குழுக்களிடம் இடம்பிடிப்பது ஆலோசனைக் குழு மற்றும் கமிட்டிகளில் உள்நுழைவது

புதிதாக இன்னும் சில  வழிகளைக் கண்டுபிடித்து உள்ளனர். அவை . சட்டம் இயற்றப்பட்டாலும் கூட அந்த சட்டத்தை கட்டுப்படுத்துவது அல்லது சட்ட சரத்துக்களை நீர்த்துப்போகவைப்பது , சட்டம் தன் வேலையை செய்யாமல் தள்ளிப் போட வைப்பது, அதன் மீறல்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்காமல் செய்வது.உதவி செய்து கெடுப்பது மற்றும்  கூட இருந்து குழி பறிப்பது

 

இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை லேன்செட்மருத்துவ இதழில் வந்த கட்டுரைஆசிரியர்கள் மிகப்பெரிய பன்னாட்டு குழந்தை உணவு கம்பெனியின் தொடர்பில் இருந்தவர்கள் .அவர்களைத் தவிர்த்து அறிக்கை தர முடியவில்லை என்பது மிகப்பெரிய துக்ககரமான விஷயம் .அந்தத் தொடரில் நான்காவதாக வந்த அறிக்கையில் அவர்கள் சாயம் வெளுக்க ஆரம்பித்திருந்தது

“தனியார் உணவு தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்வதால் ஏற்படக்கூடிய நல்ல மற்றும் தீய விளைவுகளை பற்றி திறந்த மனதுடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என்று சொல்லியிருந்தார்கள். தனியார் நிறுவன  குழந்தை உணவு மற்றும் சத்துணவுகள் , தீய விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்களிடமிருந்தே அறிக்கை பெறமுடியும் என்ற கூற்று மணலைக் கயிறாக திரிப்பதுபோன்றதாகும்.

 

  1. உலக அளவில் குழந்தை உணவுகள் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களைப் பற்றி நிறைய அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் கெயின் மற்றும் சன் நிறுவனங்களில் வழியாக பின்புலத்தில் இந்த பன்னாட்டு உணவு கம்பெனிகள் இயங்குகின்றன அதுமட்டுமின்றி அரசினுடைய திட்டங்கள் கொள்கை முடிவுகள் எடுக்கும் குழுவில் ஒரு அங்கத்தையும் பெற்றுள்ளன உணவே இல்லாத பட்டினியால் வாடும் மக்களுக்கு முதலில் இலவசமாக உடனடி தயாரிப்பு உணவுகளை வழங்குவது, சத்துணவு மாவு உருண்டை என சர்க்கரையும் உப்பும் சேர்ந்ததைத்தருவது ஆப்பிரிக்க நாடுகளில் நடந்ததைப் போல இந்த திட்டத்திலிருந்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறுவது அதன் பிறகு இதற்கு பழக்கமான குழந்தைகளுக்கு அந்த சத்துணவு மாவுகள் உடனடி சத்துப் பொருட்களை மானிய விலையில் முதலிலும் பின்பு முழுவதையும் விற்பது என்ற திட்டத்தோடு இந்தியாவிலும் ஆரம்பித்தனர் தன்னார்வலர்கள் மற்றும் சமூக நீதிக்கான போராட்டம் மருத்துவர்களின் உடைய உதவியுடன் தற்போதைக்கு இந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
  2. முக்கியமான பால் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே உணவுச் சத்துக்கள் பற்றிய சொல்லித் தரும் நிறுவனத்தை நிறுவி உள்ளது இதன் மூலம் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கூட்டங்கள் நடத்துதல் விளக்கப்படங்கள் காண்பித்தல் விருந்து அளித்தல் என பலவகைகளில் அவர்களுடைய பரிந்துரைக்கும்  பழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறது
  3. எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எதிராக சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறோமோ அந்த நிறுவனத்தில் சம்பளத்தை வாங்கும் ஒருவர் கொள்கை முடிவுகளை எடுக்கும் குழுவில் இருப்பதற்கோ அல்லது திட்ட வரைவு அறிக்கையை தயாரிப்பதற்கும் தடை செய்யும் தனிநபர் சட்ட முயற்சி பாராளுமன்றத்தில் தோல்வியடைந்து விட்டது
  4. சமீப காலம் வரை சமுதாய நலத் திட்டங்களை செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நெஸ்லே பஞ்சாப் மாநில விவசாய கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவப் பல்கலைக்கழகம் பெங்களூர் உள்பட பல மகளிர் கல்லூரிகளையிம் தங்களோடு இணைத்து மறைமுகமாக தங்கள் நிறுவனத்தின் செல்வாக்கினை வளர்த்து வருகிறது. நல்ல உணவுப் பழக்கத்தை சொல்லித்தருகிறேன் என்று சாக்லேட் நொறுக்குத்தீனிகள் ஆகியவை தயாரிக்கும் கம்பெனி முன்வந்திருப்பது எவ்வளவு வித்தியாசமான நகைமுரண். சுத்தமான குடிதண்ணீரை தருகிறேன், சுத்தமான வீதி உணவுக் கடைகளை உருவாக்க உதவுகிறேன் மந்திர பஸ் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உதவுகிறேன் என்று இவர்கள் செய்த லீலா வினோதங்கள் எக்கச்சக்கம்

5 நொறுக்குத்தீனிகள் குறைக்கவேண்டும் பள்ளிக்கூடங்களில் அருகில் நொறுக்குத்தீனிகள் கூடாது இனிப்பு பானங்கள் சக்தி பானங்கள் பிரயோஜனமில்லை உப்பும் சர்க்கரையும் கொழுப்பும் எண்ணெயும் நிறைந்த உணவுப்பொருட்கள் இந்தியர்களுக்கு மிகக் கெடுதல் என்ற இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கத்தின் அறிக்கை அரசினால் பயன்படுத்தப்படாமல் உள்ளது தவறான விளம்பரத்தின் மூலம் தங்கள் பொருட்களை விற்கும் 45 லிருந்து 50 வகையான கம்பெனிகள் மேல் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் வாய்தா வாங்கப்பட்டு தள்ளிப் போடப்பட்டு கொண்டே இருக்கின்றன

ims-act-92-modified-in2003-23-728

யார் இந்த பூனைக்கு மணி கட்டுவது? மக்களின் நலனை விட பன்னாட்டு நிறுவனங்களின் அசுர பசி தான் முக்கியமா நாட்டு மக்களுக்கு? நல்ல உணவுப் பழக்கங்களை சொல்லித்தர வேண்டிய அரசு இயந்திரங்கள் செய்வது என்ன என்ன? கொரானா காலத்திலேயே தன் வேலையை காட்டும் இவர்கள் மற்ற நேரங்களில் சும்மா இருப்பார்களா?

சரி இதற்கு என்ன மாற்று வழி என்று பார்ப்போம்

1.. conflict of interest , பற்றிய உலகளாவிய சட்டங்கள் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்

  1. குழந்தைகள் மற்றும் விடலைகள் ஹீரோக்களாக நினைக்கும் புகழ்பெற்ற மனிதர்கள் மென்பானங்கள் தீனி பண்டங்கள் குப்பை உணவுகளை விற்க எடுக்கப்படும் விளம்பரப் படங்களில் நடிக்கக்கூடாது சிகரெட் பீடி இருப்பதுபோல அந்த உணவு பண்டங்கள் நோயை உண்டாக்கும் என எச்சரிக்கை தாள்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்
  2. அறிவியல் பத்திரிக்கைகள் அனைத்தும் தங்களுடைய தரத்தினை மேம்படுத்த வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் உணவுப்பொருட்கள் நிறுவனத்தோடு தொடர்பு உள்ளவர்களை கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அல்லது அறிவுரைகளையும் பிரசுரிக்க கூடாது
  3. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உணவுசத்துப் பற்றாக்குறையை சரி செய்ய அறிவுரை தருகிறேன் என்று சொல்லி கைக்கெட்டாத உப்பும் சர்க்கரையும் நிறைந்த சத்தில்லாத சரியான குப்பை உணவு பொருட்களை பரிந்துரைக்கக்கூடாது

5.தானமாகக் கிடைத்தாலும் வாஙுகும்முன் ஆராய்ந்து பெற வேண்டும்

 

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading