பண்டைய தமிழர் பாரம்பரியத்தில் சில உணவுகளை சூட்டை கிளப்பும் உணவுகள் என்றும் சில உணவுகளை குளிர்ச்சியான உணவுகள் என்றும் பாகுபாடு செய்திருக்கிறார்கள் .பருவ காலங்களுக்கு ஏற்ப குளிர்காலத்தில் குளிர்ந்த உணவுகளை வெயில் காலத்தில் சூட்டு உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்பது நம் கிராமத்து பெரியவர்களும் பாட்டிமார்களும் சொல்லும் அறிவுரை.பழங்களில் சூட்டை கிளப்பும் பழப் இருக்கிறதா? அதன் சூட்டினால் கொப்புளம் வருமஅ? வயிற்றுப்போக்கு ஏற்படுமா? என இனி பார்ப்போம்

,முதலில் மாம்பழத்தை எடுத்துக்கொள்வோம்.வழக்கமாக மாம்பழம் வெயில் காலத்தில் கிடைக்கக்கூடிய நமது நாட்டு கனி பண்டைக் காலத்தில் இருந்தே நம் பாரம்பரியத்தோடு கலந்து நாம் உண்டகண்ணி . மாம்பழம் மிகவும் இனிப்பு நிறைந்தது அதிகபட்சம் பிரக்டோஸ் இனிப்பு சத்து சேர்ந்தது எனவே குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாம்பழத்தை உண்டால் குடலுக்குள்ளே சர்க்கரை சத்து அதிகமாகும்.அனைத்துயும் உள்கிரகிக்க முடியாமல் பெருங்குடலுக்கு செல்ல விட்டுவிடும் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை லாக்டிக் அமிலமாக மாற்றி வெளியே தள்ளும்போது வயிற்றுப்போக்கு ஏற்படலாம் சர்க்கரை சத்து அதிகமாக உள்ள பழங்களையோ அல்லது ஜிலேபி அதிகமாக சாப்பிட்டாலும் இதுதான் நடக்கும் இதற்கும் மாம்பழத்தில் உள்ள மக்களால் நம்பப்படுகிற சூட்டு குணம் காரணம் கிடையாது. யோசனை செய்து பாருங்கள் ?குறைவாக சாப்பிட்டவர்களுக்கு எப்போதாவது வயிற்றுப்போக்கு வந்திருக்கிறதா ?அதிகபட்சமாக மாம்பழத்தை குழந்தைகள் உண்ணும் போதுதான் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது எனவே அதிக கலோரி இனிப்பு சத்து உள்ள மாம்பழத்தை அளவோடு உண்போம்

இயற்கையிலேயே ஒவ்வொரு பருவகாலத்திலும் கிடைக்கும் பழங்களை தவிர்க்காமல் சாப்பிடலாம். பேர் கெட்டுப்போன இன்னுமொரு பழம் பப்பாளி.இதில் உள்ள பப்பாயின் என்ற நொதிப்பொருள் ஜீரணத்திற்கு உதவும் பப்பாளி காய்களில் உள்ள சில வேதிப்பொருட்கள் கருப்பையை சுருக்கி விரியவிடக்கூடிய தன்மை கொண்டவை . குறைந்த விலையில் சுலபமாக கிடைக்கக்கூடிய பப்பாளியில் வைட்டமின் ஏ சத்துக்களில் ஆரம்பித்து எதிர்ப்பு சக்தி தரக்கூடிய தாது உப்புகள் உள்படஎக்கச்சக்கமாக உள்ளன. நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கும். சத்துக்களை தரும் விலை குறைந்த பப்பாளியை ஒதுக்காமல் உண்போம் பப்பாளிக்காயை கட்டாயம் உணவில் தவிர்ப்போம்
பேர் கெட்டுப்போன ஆன இன்னொன்று கொய்யாப்பழம். இதுவும் வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்ககூடிய பழங்களில் ஒன்று .ஆப்பிளில் இருப்பதைவிட அதிக அளவு வைட்டமின் சி சத்துக்களையும் மற்றும் உடலுக்குத் தேவையான ஜிங்க் மற்றும் பாலி பீனால்களையும் தன்னுள்ளே கொண்டது.. நல்ல சரியான அளவில் பழுத்த கொய்யா பலத்தினால் போதுமான அளவு உட்கொள்ளும் போது பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது எனவே தயவு செய்து கொய்யாப்பழத்தை தவறாமல் உண்ணுங்கள் ஆப்பிளை சாப்பிடுவதை விட அதிக சத்து நார்சத்து உள்ளது. நல்ல நன்மை தரக்கூடியது கர்ப்பிணிகளுக்கு உதவக்கூடிய போலிக் அமிலப் ,பி-9 வைட்டமின் இதில் உள்ளது..அதிகமாக கொய்யாப் பழத்தை சாப்பிடும் போது அதன் விதைகள் குடல் இயக்கத்தை அதிகப்படுத்தக்கூடும் கெட்டுப்போன கொய்யாப்பழம் புழுக்கள் உள்ள கொய்யாப்பழம் மேலும் தூண்டலாம்
பிஞ்சு கொய்யாவில் உள்ள மாவுச்சத்து மலத்தினை கெட்டிப் படுத்தக்கூடியது ஆனால் அது வயிற்றுப்போக்கு மருந்தல்ல வயிற்றுப்போக்கிற்கு மருந்து உப்பு கரைசல் திரவம்தான் .மலத்தின் திடத்தன்மையைஅதிகரிப்பது பலனளிக்காது உடம்பிலிருந்து வெளியேறும் உப்பு மற்றும் சர்க்கரை நீர் சத்துகளை போதுமான அளவில் தரக்கூடிய உப்பு சர்க்கரை கரைசல் தான் வைத்தியமாகும்
பழங்களைத் தாய் சாப்பிட்டால் குழந்தைக்கு மாந்தம் ஏற்படும் என்பது பாட்டிகளின் பலமான நம்பிக்கை, மாந்தம் என்பது வயிற்றில் ஜீரண சக்திக் குறைபாடு வயிறு மந்தமாகி குழந்தைக்கு வயிற்றுவலி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்
இது உண்மைதானா ?தாய் சாப்பிடும் பழங்களினால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா ?என்பதை பார்ப்போம்.தாயின் உணவிலிருந்து ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ள வேதிப்பொருட்கள் தாய்ப்பாலை வெளிவருகின்றன அந்த வேதிப்பொருட்களையும் குழந்தையின் இரைப்பைசீரண நீர்கள் சமணப் படுத்தப்படும் அதனால் தாய்எந்த உணவை உண்டாலும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது
