childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குடற்புழு க்கள்

1 min read

hookworm

குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பை உண்டுபண்ணும் பெரியவர்களைநும் பாதிக்கக்கூடிய தன்மைஉண்டு .குடல் புழுக்கள் என்று ஒரு வார்த்தையில் சொன்னாலும் அதில் மனிதனை பாதிக்கக்கூடிய குடல் புழுக்கள்நிறைய இருக்கின்றன.அவைகளில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்ப்போம்

round worm

சாதாரணமாக குழந்தைகளுக்கு முகத்தோல் வெள்ளையாக இருந்தால் அனைவரும் சொல்லக்கூடிய ஒரே மருந்து குடல் புழு மருந்து.  இது திரவ மருந்தாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது .கிராம சுகாதார செவிலியர் முதல் குழந்தை நல மருத்துவர் வரை அனைவரும் தருகிறார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மருந்து கடைகளிலும் சுலபமாக கிடைக்கக்கூடிய மருந்து அல்பெண்டசோல் என்ற குடல்புழு மருந்து.

பழைய மருந்தான மெபெண்டசோலிலிருந்து வேறுபட்டு ஒருவேளை உட்கொண்டாலே மரங்களிலேயே குடல் புழுக்கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை உடையது . எனவே பூச்சி மருந்து என்று  பேசிவது அல்பெண்டசோல் க்கு மட்டும் பொருந்தும் மற்ற குடற்புழு மருந்துகளைப்(mebendazole, piprazine citrate , pyrante pamoate, Praziquintal and ivermectin)  பற்றி நான் பேசப்போவதில்லை ஏனென்றால் ஒவ்வொரு மருந்தின் அளவும் எவ்வளவு நாள்  தரப்பட வேண்டும்? எப்படி தரப்பட வேண்டும் ?என்பதும் வேறுபடும்,

அல்பெண்டசோல் மருந்தாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாத்திரையில் பாதி அல்லது மருந்தாக இருந்தால் ஐந்து மில்லி தரப்படும் .இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு முழு மாத்திரை இதனுடைய அளவு ஆகும் உணவிற்கு  முன்பே அல்லது பின்போ எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் மென்று சாப்பிட முடிந்தால் நல்லது

பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடவை 15 நாட்கள் கழித்து மறுபடியும் தரப்பட வேண்டும் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் தர வேண்டும் இல்லை என்றால் மற்றவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மறுபடியும் குடல்புழுத் தொல்லை வந்துவிடும் குடல் புழுக்கள் முட்டை மற்றும் வளர்ந்த லார்வாக்கள் மூலம் தோலைத் துளைத்துக்கொண்டு உள்நுழைந்து குடலுக்கு வந்து சேரும்

home_page_image_pinworm

இந்த குடல் புழுக்களில் முக்கியமானது கொக்கிபுழு. வளரும் குழந்தைகள் விடலைப் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு இரத்தசோகையை உண்டாக்குவதில் இதன் பங்கு அதிகம் சிறுகுடற் பகுதியில் இருக்கும் இந்தப் புழு ரத்தக் கசிவினை ஏற்படுத்துகிறது சத்துக்கள் உறிஞ்சப்படாமல் தடுக்கிறது

pinworm 1

அடுத்தது ஊசிப் புழு. உலகத்தின் எந்த மூலையிலும் ஏழை  பணக்காரன் என்ற  வேறுபாடின்றி எளிதில் பரவக்கூடிய தன்மை உடையது இதன் முட்டை மலக்குடலின் ஆசன வாய்ப்பகுதியில் இருக்கும்.  ஊசிப் புழு இரவு நேரத்தில் வெளியே வரும் போது ஆசன வாய்ப்பகுதியில்அரிப்பு ஏற்படுவதால் குழந்தை  கையை வைத்து சொரிந்து பின் அதே கையை சரியாக க் கழுவாமல் , உண்ணும்் போது மறுபடியும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஊசிப் புழுக்களுடைய முட்டைகள் விழுங்கப்பட்ட பின்  உணவுக்குழாயில்  குஞ்சாகப் பொரிந்து மறுபடியும் புழுக்களாக மாறுகின்றன

Round_worm)
அடுத்தது ஒரு உருண்டைப் புழு. இதன் முட்டை     அசுத்தம் கலந்த உணவின்ன் மூலமாக குடலை அடைகிறது. சில வேளைகளில் இரைப்பையிலிருந்து மேலே ஊர்ந்து வந்து நுரையீரலுக்கும் வந்து சேருகிறது அந்த நேரங்களில் இருமல் நுரையீரல் பிரச்சனை சுவாசக்கோளாறு வாந்தியில் புழுக்களாக வருதல் ஆகியவைகளை உருண்டைப் புழு ஏற்படுத்துகிறது. பந்துபோல சுருண்டு குடல் அடைப்பை யும்  ஏற்படுத்தும் வயிற்று வலியும் விடாமல் வரலாம்.

hookworm-parasite

கொக்கி புழு வெறும் காலில் நடந்து செல்லும்போது மண்ணில் இருந்த முட்டை பொரிந்து லார்வாக்கள் மூலமாக தோலைத் துளைத்து உடலில் புகுகிறது. படிப்படியாக முன்னேறி பின்னர் வயிற்றுப்பகுதியினை அடைகிறது
பொதுவான இந்தப் புழுக்களை மட்டும் தெரிந்து கொண்டு விட்டோம்.

hookworm 2
புழுக்கள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது வெளியே செல்லும்போது குழந்தைகள் கால்களில் காலணி அணிந்து செல்லவேண்டும் நகங்களைச் சுத்தமாக வெட்டி எடுக்கவேண்டும் நக இடுக்குகளில் அழுக்கு சேராமல் பார்க்கவேண்டும் குடல் புழு குழந்தைக்கு இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நாளில் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் குடல்புழு மரிந்தினை மீண்டும் 15 நாட்கள் கழித்து மறுமுறை தரவேண்டும் குடல்புழு பிரச்சனை தீரவில்லை? எனில் என்ன காரணத்தினால் என்பதனை கண்டறிய உங்கள் மருத்துவரை அணுகவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading