- வயிற்றுப்போக்கு,பேதி என்பது என்ன?
- எது வயிற்றுப்போக்கு இல்லை?
. உங்கள் குழந்தைக்கு ஏன் வயிற்றுப்போக்கு வருகிறது?
4 வயிற்றுப்போக்கு உள்ள உங்கள் குழந்தைக்கு என்ன திரவ உணவுகளைத்
தர வேண்டும்?
- வயிற்றுப் போக்கு நோயிலிருந்து குணம் பெற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் தரவேண்டுமா?
- வயிற்றுப்போக்கினால் உங்கள் குழந்தையின் உடல் நலிவடையாமல் தடுப்பது எப்படி?
- உங்கள் குழந்தைக்கு அவ்வப்போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
- சிகிச்சைக்குப் பிறகும் உங்கள்குழந்தையின் வயிற்றுப்போக்கு குறையவில்லை என்ன செய்ய வேண்டும்?
- வயிற்றுப்போக்கு இருக்கும்போது எந்த உணவுகளையும் திரவங்களையும் குழந்தைக்கு தருவதைத் தவிர்க்க வேண்டும் ?
10 உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும்போது பால் தருவதைநிறுத்த வேண்டுமா ?அல்லது பாலை மாற்ற வேண்டுமா?
- உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கிறது என்பதை எப்படி சந்தேகிப்பது?
A.வழக்கத்துக்கு மாறாக மலம் இளகியோ அல்லது நீர் மலமாகவோ 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று முறைக்குமேல் போனால் வயிற்றுப் போக்கு என அழைக்கலாம். மலத்தின் தன்மையில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் வயிற்றுப்போக்கின் அடையாளக் குறியீடு ஆகும்.
- மலத்தின் தன்மை என எதைச் சொல்கிறீர்கள்?
இது மலத்தின் கடினத்தன்மையை குறிப்பது சாதாரண மலம் மிருதுவாக இருக்கும் .வயிற்றுப்போக்கு உள்ளபோது ,மலம் இளகியோ அல்லது நீர்மலமாகவோ இருக்கும். கொள்கலனின் வடிவத்தில் இருக்கும். மலத்தில் நீர் அதிகமாக வரும்போது உடலில் நீர் இழப்பு ஏற்படும்
- வயிற்றுப்போக்கு ஆபத்தானதா?
வயிற்றுப்போக்கினுடைய பயம்தரக்கூடிய சிக்கல் உடலின்நீர் இழப்புஆகும். உடலின் தாது உப்புக்களின் ( சோடியம் பொட்டாசியம் )அளவுகளில் மாற்றம் ஏற்படும். காலரா நோய்த் தொற்றில் ஒரு முறை அதிக மலம் கழிப்பதுகூட அதிக நீர்இழப்பினை ஏற்படுத்தும்
2.. எது வயிற்றுப்போக்கு இல்லை?
குழந்தையின் வயது மற்றும் உண்ணும் உணவைப் பொறுத்து எவ்வளவு முறை மலம் கழிக்கும் என்பது வேறுபடும் ( பார்க்க அட்டவணை 1)
இளம் குழந்தைகள் அடிக்கடி மலம் கழிக்கும்.முதல் மூன்று மாதங்களில் மலம் கழிப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். வழக்கமாக கழிக்கும் மலத்தின் தன்மையும் போகும்
தடவைகளும் மாறுபட்டால் வயிற்றுப்போக்கு என்பதனைக் கண்டுபிடிக்கலாம்
இந்தியக் குழந்தை , சாதாரணமாக மலம் கழிக்கும் தடவைகள்/ஒரு நாளைக்கு எவ்வளவு முறை?
0-1 மாதம் – 5-6 முறை
1-3 மாதம்-3-4 முறை
4-6 மாதம்-2 முறை
7-24 மாதம்-1-2 முறை
2-18 வயது -1 முறை
இவை வழக்கமாக இந்திய குழந்தைகள் ஒரு நாளைக்கு மலம் கழிக்கும் தடவை என ஆராய்ச்சிகள் கணித்துள்ளன. இதைவிட உங்கள் குழந்தை குறைவாகவோ அதிகமாகவோ கழிக்கலாம். அது இயல்பாகக் கூட இருக்கலாம்
கீழே உள்ளவைகளை வயிற்றுப்போக்கு என எடுத்துக்கொள்ளக்கூடாது
பிறந்த குழந்தைகளுக்கு:
.மகப்பேறுக்குப்பிறகு குழந்தை முதல் 24 -48 மணி நேரத்திற்குள் கெட்டியான துணியில் ஒட்டும் கருப்பு /கரும்பச்சைமலத்தை கழிக்கும் இது மிகோணியம் எனப்படும். பிறந்த மூன்றிலிருந்து ஆறு நாட்களுக்கும் மலம் இளகியோ அல்லது பச்சை மஞ்சள்/பச்சை பழுப்பு நிறத்தில் நீர்மலமாகவோ போகும். இது ,நிலைமாறுகின்ற மலம் எனப்படும். முதல் இரண்டு மூன்று மாதங்களில் ஒவ்வொரு முறை பால் குடித்தவுடன் மலம் கழிக்கலாம் அடிக்கடி கிடைக்கும் தாய்பாலினை.ச் சீரணிக்க குடலின் இயக்கம் அதிகமாக இருப்பதால் இது நடக்கும். இரைப்பையுனுள் தாய்ப்பால் போனவுடன் மலக்குடலின் நரம்பு தூண்டப்பட்டு மலம் கழிக்கும். அடுத்த முறை குடிக்கும் பாலுக்காக குடலை காலியாக வைத்திருக்க இது நடக்கும். இதனால் தான் பால் குடிக்கும் போதோ அல்லது பால் குடித்தவுடன் குழந்தை மலம் கழிப்பதை பார்க்கிறோம். மலம் இளகியிருப்பினும் இது வயிற்றுப்போக்குஅன்று. நாட்கள் செல்லச் செல்ல பால் குடிக்கும் போது மலம் போவதும் குறைந்து விடும்
உருவான மலத்தினை அடிக்கடி கழிப்பது வயிற்றுப்போக்கு இல்லைமுதலில் சொன்ன மாதிரி சில குழந்தைகள் மற்றவர்களைவிட அடிக்கடி மலம் கழிப்பர் .இது இயல்பான ஒன்று. உட்கொள்ளும் உணவைப் பொறுத்து தடவைகள் மாறுபடும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ,அதிக பழங்கள் ,காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் உண்பவர்கள் அல்லதுஅதிக அளவு சர்க்கரை, காபி மற்றும் கொழுப்பு உணவுகளை உண்பவர்கள் நார்ச்சத்து குறைந்த உணவு உண்ணும் குழந்தைகளைவிட அதிக தடவை மலம் கழிப்பர்
இருப்பினும் மலம் கழிக்கும் போது வயிற்று வலி இருந்தாலோ வயிறு வீக்கம் /உப்பி இருந்தாலோ உங்கள் குழந்தை நல மருத்துவரை சந்தித்து நோய்த்தொற்று, ஒவ்வாமை அல்லது குடல் அழற்சி உள்ளதா? என்பதனைத் தெரிந்து கொள்ளவும்
3.உங்கள் குழந்தைக்கு ஏன் வயிற்றுப்போக்கு வருகிறது?
வயிற்றுப் போக்கு பல காரணங்களால் வரக்கூடும். வைரஸ் தொற்றால் குறிப்பாக இரண்டு வயதுக்கு உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ரோட்டா வைரஸ்களால் வரும். இது வயிற்றுப்போக்கு வகை வைரஸ்களில் ஒன்று பாக்டீரியா தொற்று, ஒட்டுண்ணி புழுக்கள், மருந்துகளின் பக்கவிளைவு, ஒவ்வாமை ,சில குறிப்பிட்ட உணவு ஒவ்வாமை ,உடல் பாதிப்பு என பல காரணங்களால் வயிற்றுப்போக்கு வரலாம் .
நோய்க்காரணிகளால் பாதிக்கப்படும்முக்கிய உறுப்பு உணவு மண்டலமாக இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதும் வாய் வழியாகத்தான். எனவே அசுத்தமான இடம், போதுமான சுகாதாரமின்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காதது, கை சுத்தம் இல்லாதது, சமைத்த பாத்திரத்தை மூடாமல் வைப்பது, பாத்திரங்கள் சுத்தமில்லாமல் இருப்பது, பால் புட்டி உபயோகிப்பது, கொதிக்க வைக்காத பாலினை உபயோகப்படுத்துவது, தெருவில் கிடைக்கும் உணவை உண்பது,மலக் கழிவுகளை சரியாக அகற்றாதது, ஆகிய சூழல்களில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
அதிச சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள் சர்க்கரை அல்லது கார்பன்-டை-ஆக்சைடு சேர்த்த மென்பானங்கள் வயிற்றுப்போக்கினை அதிகப்படுத்தும் . இவைகளிலுள்ள அதிக சர்க்கரை குடலில் இருந்து சவ்வூடு பரவுதல் மூலம் நீர் இழப்பைஏற்படுத்தி விடும். நாம் சரியான சுத்தம், சுற்றுப்புற சுகாதார முறைகளை கைக்கொண்டு வயிற்றுப்போக்கு வரும் ஆபத்தினை குறைக்கலாம். ஆயினும் சில நேரங்களில் வயிற்றுப்போக்கு இவைகளையும் மீறி வரலாம்
- வயிற்றுப்போக்கு உள்ள உங்கள் குழந்தைக்கு என்ன திரவ உணவு தரவேண்டும்?
உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருப்பின் நிறைய நீர் மற்றும் தாதுஉப்புக்கள் இழப்பும் மலம் கழிப்பதில் ஏற்படும். இது உடலில் நீர் மற்றும் உப்புச் சத்துக் குறைவினை ஏற்படுத்தும் உடனடியாக இது சரி செய்யப்படவில்லை என்றால் தீவிர பாதிப்பினை ஏற்படுத்தும். சொல்லப்போனால் .வயிற்றுப் போக்கினை விட நீர்ச்சத்துக்குறைவு தான் கவலை தரும் விஷயமாகும். எனவே வயிற்றுப்போக்கு ஆரம்பித்தவுடன் உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் திரவ உணவுகளை வாய்வழியாக முதலில் தரவேண்டும் . மலம் வழியே இழந்த நீர் ,தாது உப்புக்களை இவை குழந்தைக்கு தரும்.
ஓஆர்எஸ்-ஓரல் ரிஹைட்ரேஷன் சொலியூசன் உயிர்காக்கும் திரவம். குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள் இதில் குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளன .வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் ஏற்படும் நீர் மற்றும் தாது உப்பு இழப்பினை ஈடு கட்டும் இது பாதுகாப்பானது. எளிதில் தயாரித்து உபயோகிக்க முடியும் .அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும் அல்லது அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவருடைய பரிந்துரையின்றி வாங்கமுடியும்
- ஓஆர்எஸ் ஸை எவ்வாறு நான்தயாரிக்க வேண்டும்?
முழு பயன் அளிக்க ஓஆர்எஸ் தயாரிப்பு பாக்கெட்டில் குறிப்பிட்டதுபோல செய்யப்பட வேண்டும் ஒரு பாக்கெட் மூலம் ஒரு லிட்டர் ஓ ஆர் எஸ் தயாரிக்கலாம். சிலநேரங்களில் 200ml ஓ ஆர் எஸ் தயாரிக்க பாக்கெட்டுகளும் கிடைக்கின்றன. ஒரே தடவையில் ஒரு பாக்கெட்டில் உள்ளதைத் தயாரித்து பயன் படுத்த வேண்டும். ஒரு போதும் பிரித்து பிரித்து தயாரிக்கக் கூடாது உதாரணமாக ஒரு தேக்கரண்டி ஒரு சிறிய
தம்ளரில் கலந்து தயாரிப்பது ஓ ஆர் எஸ் திரவத்தில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை மாற்றிவிடும் இது உடல்நிலையைப் பாதிக்கும். உடனடி ஓ ஆர்எஸ் திரவ தயாரிப்புகளை தவிர்த்து விடுதல் நல்லது. ஏனெனில் அவைகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவு தாதுஉப்புகளும் சர்க்கரையும் இருக்காது.
ஒவ்வொரு தடவை வயிற்றுப் போக்கு போனபின் ஓ ஆர் எஸ் ஐ ,குழந்தையின் வயதுக்கு ஏற்ப அட்டவணையில் 2. குறிப்பிட்டுள்ள படி தரவேண்டும்
- ஓ ஆர் எஸ் உப்பு சர்க்கரை திரவத்தை தேக்கரண்டி மூலம் மெதுவாக அல்லது சிறிது சிறிதாக தரவேண்டும். ஒரேடியாக தம்ளர் அல்லது கோப்பை மூலம் தருவது வாந்தியினை ஏற்படுத்தலாம். குடித்தவுடன் வாந்தி எடுத்தால் பத்து நிமிடம் பொறுத்து இருக்கவும் அதற்குப் பிறகு இன்னும் மெதுவாக 1-2 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு தேக்கரண்டி எனத் தரலாம். ஒருமுறை தயாரித்த கலவையை 24 மணி நேரத்திற்குள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்
மிகுந்ததை கழித்து கட்டவும் அடுத்த முறை உபயோகத்திற்கு புதிதாக தயாரிக்கவும். ஓ ஆர் எஸ் ஆல் வயிற்றுப்போக்கு குணமாகாது அது மூன்று அல்லது ஏழு நாட்களில் தானே குணமடையும் எனினும் நீரிழப்பைத் தவிர்க்கவும் சரிப்படுத்தவும் ஓஆர்எஸ் உதவும்
- ஓஆர்எஸ் தவிர்த்து வேறு திரவங்களைத் தரலாமா?
ஓஆர்எஸ் ஆரம்பித்தபின் அடுத்துதரவேண்டிய முக்கிய திரவ உணவு தாய்ப்பால்.ஏனெனில்நீர்ச்சத்து,மற்றும் வெப்பசக்தி- கலோரி தருவதுடன்உடலின் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கும்காரணிகளையும்தன்னுள் கொண்டது.எனவே வயிற்றுப்போக்குநாளடைவில் குணமடைகிறது.இதைத்தவிர எளிதில் கிடைக்கும் தன்மையையும்குழந்தையின் விருப்பத்திற்தினையும் பொறுத்து கீழ்க்கண்ட வைகளைத்தரலாம்.
அ.தானிய பருப்பு திரவங்கள்(அரிசிக்கஞ்சி,பருப்புக்கஞ்சி)
ஆ.காய்கறி சூப்
இ.உப்பிட்ட தயிர்
ஈ.எலுமிச்சை பழச்சாறு(குறைந்த சர்க்கரை,போதுமான உப்பு சேர்த்து)
உ.இளநீர்
ஊ. குடிநீரினை இடைஇடையே தரலாம்
D)
ஓஆர்ஸ் தவிர வேறு ஏதாவது மருந்தினை நான் தர வேண்டுமா?
ஆம்.துத்தநாகச் சத்து-ஜிங்க்
மருத்துவ ஊழியரின் பரிந்துரைக்குப் பிறகு துத்தநாக சத்து எடுத்துக்கொள்ள வேண்டும் ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 20 மில்லிகிராம் என 14 நாட்களுக்கு தரவேண்டும் இரண்டிலிருந்து ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 10 மில்லி கிராம் என 14 நாட்களுக்கு தரவேண்டும் வயிற்றுப்போக்கின் கால அளவையும் தீவிரத் தன்மையையும் குறைக்க இது உதவுகிறது அடுத்த மூன்று மாதங்களுக்கு
வயிற்றுப்போக்கு வருவதை தவிர்க்கவும் உதவுகிறது
- e) அபாய அறிகுறிக்களுக்காக எவ்வாறு என் குழந்தையை கண்காணிப்பது?
வயிற்றுப்போக்கு உள்ள உங்கள் குழந்தைக்கு அபாய அறிகுறிகள்.
குறைந்த தடவை அல்லது அளவு சிறுநீர் கழிப்பது,
அதிகத் தாகத்தோடு இருப்பது
அமைதியின்றி இருப்பது
மோசமான உடல் தோற்றம்,
உண்ணும் அனைத்தையும் வாந்தி எடுப்பது,
மலத்தில் ரத்தம் கழிவது ,
தாய்ப்பால் குடிக்கவும் திரவ உணவை அருந்தவோ முடியாதது,
கை கால்கள் குளிர்ச்சியாக இருப்பது சோர்வாகவோ அல்லதுபடுத்தோ கிடப்பது.
இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை கண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்
ஓஆர்எஸ் தயாரிக்கும் முறை
இந்த செய்முறைக் குறிப்புகள் வழக்கமான ஓஆர்எஸ் பாக்கெட்டிலிருந்து எவ்வாறு உப்பு சர்க்கரை கரைசலை தவிர்ப்பது என்பதனை விளக்குகிறது சிறிய சாஷேகளில் உள்ள ஓஆர்எஸ் உப்பை 200 மில்லி குடிநீரில் கலந்து தரலாம்
- சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்குகழுவுவோம்
- ஓஆர்எஸ் பாக்கெட்டில் உள்ள உப்பினை சுத்தமான பாத்திரத்தில் கொட்டவும்
- ஒரு லிட்டர் குடிநீரினை அளந்து எடுத்து பாத்திரத்தில் ஊற்றவும். 200 மில்லி பாக்கெட்களுக்கு அதற்கு ஏற்ப நீரினை அளந்து எடுக்கவும்
- பாத்திரத்தில் உள்ள உப்பு அனைத்தும் கரையும் வரை நன்கு கலக்கவும் பாத்திரத்தின் அடியில் உப்பு மீதம் இருக்கக்கூடாது
- ஓ ஆர் எஸ் உப்பு கரைசலை குழந்தைக்கு தருமுன் சுவைத்து பார்க்கவும் கண்ணீரினைப் போல சுவை இருக்க வேண்டும் அதிகமாக இனிப்பதோ, உப்புக்கரிப்பதோ கூடாது அதிக உப்பாகவோ அதிக இனிப்பாகவோ இருந்தால் அதை உபயோகிக்க வேண்டாம் புதிதாக மீண்டும் தயாரிக்கவும்.
அட்டவணை 2 வயதுக்கு ஏற்ப தரவேண்டியது ஆர்எஸ் உப்பு கரைசல்\ ஒவ்வொரு வயிற்றுப்போக்குக்கு பிறகு:
- இரண்டு மாதம் வரை-5 தேக்கரண்டி
- இரண்டு மாதம் முதல் 2 வயது வரை ஐம்பதிலிருந்து நூறு மில்லி
- 2 வயதிலிருந்து 10 வயது வரை 100லிருந்து 200 மில்லி
- 10 வயதுக்கு மேல்-எவ்வளவு தேவையோ அவ்வளவு, இரண்டு லிட்டர் வரை
இரண்டு மாதத்திற்கு குறைந்த குழந்தைகளின் வயிற்றுப்போக்கு தீவிர உடல் நோயினை குறிக்கலாம் எனவே குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனையை உடனடியாக பெறவும் ஓஆர்எஸ் மற்றும் தாய்ப்பால் தொடரவும்
- வயிற்றுப் போக்கில் இருந்து குணமடைய என் குழந்தைக்குஆன்டிபயாடிக்- நுண்ணுயிர்க் கொல்லி மருந்து தேவையா?
பெரும்பாலான வயிற்றுப்போக்கு கள் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன . நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் வைரஸ்களை அழிக்காது. எனவே இம்மருந்துகள் பெரும்பாலான நேரங்களில் தேவைப்படாது. ஈ கோ லை… பாதித்த குழந்தைகளுக்கு கூட பல சமயங்களில் ஆன்ட்டி பாயாட்டிக் தேவைப்படுவதில்லை .அநேக வயிற்றுப்போக்கு எந்த காரணத்தினால் ஏற்பட்டிருந்தாலும் தானே நின்று விடும்
தேவையின்றி தரப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் நோயின் தீவிரத் தன்மையையும் குறைக்காது. நோயின் காலத்தையும் மாற்றாது ,உண்மையாகவே பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கினை அதிக நாள் தொடரச் செய்யும் .நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு தன்மை தோன்ற ஏதுவாகும்.
.
எப்போது ஆன்டிபயாட்டிக் தரவேண்டும்?
மலத்தில் இரத்தம் கலந்து சீதபேதி ஆகப் போகும் போதும் அல்லது குழந்தைக்கு வயிற்றுப் போக்குடன் வேறு நோய் இருந்தாலும் (நுரையீரல் நிமோனியா காது சீழ் சிறுநீரக நோய்த்தொற்று), நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, சரியான உடல் வளர்ச்சி இன்மை போன்ற சூழ்நிலைகளில் தர வேண்டியிருக்கும். தொடர்ந்த காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் காதுவலி சிறுநீர் கழிக்கும் போது வலி ஆகியவை மற்ற நோய்த் தொற்றுகளைக் குறிப்பனவாக இருக்கலாம். இவைகளுக்கு ஆன்டிபயாடிக் மற்றும் மருந்துகள் தேவைப்படலாம். மருத்துவர்/ மருத்துவ ஊழியர் மட்டுமே இவை தேவையா? எந்தவிதமான மருந்து? எவ்வளவு நாட்கள்? என்பதை முடிவு செய்வாகள். உடல்நலம் பற்றி சந்தேகம் இருப்பின் உங்கள் குழந்தை நல மருத்துவரை பார்க்கவும்ர்
- வயிற்றுப் போக்கினால் உங்கள் குழந்தை உடல்நிலை நலிவடையாமல் எப்படி பார்த்துக் கொள்வது?
வயிற்றுப்போக்கின் முக்கிய பாதிப்பு குழந்தையின் உடல் வளர்ச்சிக் குறைவு ஏற்படுவதாகும் பசி குறைவாக இருப்பது, உணவு சத்துக்கள் குறைவாக உறிஞ்சப்படுவது, உடலுக்கு நோய் தொற்றினால் அதிக உணவு தேவை இருப்பது ஆகியவைகளால் இது நிகழ்கிறது. வழக்கமான ஆனால் தீங்கான நம் பழக்கமான,உணவை தராமல் நிறுத்துவது, நீர்த்துப்போனஉணவைத்தருவது , குழந்தைக்கு வெறும்திரவ உணவு மட்டும் தருவது ,ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
வயிற்றுப்போக்குள்ள உங்கள் குழந்தைக்கு என்ன உணவு தரவேண்டும்?
தேவையின்றி குழந்தையின் உணவினை குறைப்பது போதுமான உணவும் சத்துக்களும் கிடைக்காமல் செய்யும். இதனால் குழந்தையின் வளர்ச்சி குறையும் .குழந்தையின் உடல் நலிவடையும் .வயிற்றுப்போக்கு இருக்கும்போதும் பிறகும் பால் மற்ற உணவுகளை தடை செய்யக்கூடாது. வயிற்றுப்போக்கு இருக்கும்போது உணவு உண்ணும் குழந்தைகள் வேகமாக குணமடைகிறார்கள் இழந்த எடையை மறுபடியும் திரும்ப அடைகிறார்கள்.
எளிதில் சீரணம் அடைய அடிக்கடி, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு உணவினை தர வேண்டும் இது வாந்தி ஏற்படுவதையும் தவிர்க்கும்
தாய்ப்பாலூட்டலைக் குழந்தைக்கு தொடரவேண்டும்
அரிசி ,பருப்பு மற்றம் சிறுதானியக் கஞ்சி களை சுலபமாக வீட்டில் தயாரிக்க முடியும். எளிதாகவும் கிடைக்கும்.இவை தாய்ப்பால் தவிர ,தரக்கூடிய மிகச்சிறந்த திரவ உணவுகள்
வயிற்றுப்போக்கு வந்த பிறகு,ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு/ முதலிலிருந்தஎடை வரும் வரை வழக்கமான உணவின் அளவைவிட சிறிது அதிகமாகத் தர வேண்டும்
ஓ ஆர் எஸ் சுடன் வழக்கமாக அருந்தும் திரவ உணவுகளையும் தாய்ப்பாலையும் தர வேண்டும்
- குழந்தைக்கு அவ்வப்போது ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கு என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கினைத் தடுக்க சில நடவடிக்கைகள் தேவைப்படும். கீழ்கண்டவை உபயோகமாக இருக்கலாம்.
- உணவுச்சத்தில் கவனம். அடிக்கடி வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க சத்துள்ள உணவு குழந்தைக்கு கிடைப்பதை உறுதி செய்வது முக்கியமாகும். பிறந்த குழந்தையின் முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தருவது, சுத்தமான பாதுகாப்பான போதுமான சத்துக்களை குழந்தையின் தேவைக்கேற்ப தரும். தாய்ப்பால் ஊட்டுதல் நோயிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் .ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் வயதுக்கு ஏற்ப சத்துள்ள உணவுகளை தர வேண்டும். கடைகளில் விற்கும் பழச்சாறுகள் உள்பட இனிப்புள்ள பானங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்
- b) துத்தநாகச் சத்தினை குறிப்பிட்ட நாட்கள் தரவேண்டும
வயிற்றுப்போக்கு நின்று விட்டாலும் கூட மருத்துவர் அறிவுரையின் படி 14 நாட்களுக்கு துத்தநாகச் சத்து குழந்தைக்கு தர வேண்டும் அடுத்த மூன்று மாதங்களில் வயிற்றுப்போக்கு வருவதினை துத்தநாகச் சத்து தடுக்கிறது
- தன் சுத்தம் மற்றும் உணவு தயாரிப்பில் சுத்தம்
அடிக்கடி வயிற்றுப்போக்கு வருவதற்கான காரணங்களில் முக்கியமானது தன் சுத்தம் மற்றும் உணவு தயாரிப்பில்
கவனமில்லாமல் அலட்சியமாக இருப்பது. . எனவே வயிற்றுப்போக்கினை தடுப்பதற்கு இவைகளில் கவனம் செலுத்த வேண்டும்
குழந்தையின் அரையாடை, டயாபர் மாற்றிய பிறகும் , குழந்தையின் மலத்தைகழிவறையில் போட்ட பின்னும் நாம் கழிவறைக்குச் சென்று வந்த பின்னும் உணவு தயாரிப்பதற்கு முன்னும் குழந்தைக்கு உணவு ஊட்டும் முன்னும் தத்தம் கைகளைச் சோப்புத் தண்ணீரால் கழுவுவதன் மூலம் அடிக்கடி வயிற்றுப்போக்கு வருவதனை தடுக்கலாம்.
பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துங்கள்
உணவினைத் தயாரிக்க, சேமிக்க, பரிமாற சுத்தமான வழிமுறைகளைக் கையாளுங்கள் .சுத்தமான சமையல் பாத்திரங்கள் ,சமைத்த உணவை மூடிவைப்பது, புதிதாக உணவுகளை சமைத்து உண்பது ஆகியவையும் முக்கியம்.
அசுத்தமான குட்டைகளில் குழந்தையை நீச்சலடிக்க அனுமதிக்காதீர்கள்
வெட்ட வெளியில் மலம் கழிக்க வேண்டாம் கழிவறையைப் பயன்படுத்துங்கள்
- d) தடுப்புமருந்து. வயதுக்கு ஏற்ப தடுப்பு மருந்து ஊசி போடுதல் (முக்கியமாக ரோட்டா வைரஸ் தட்டம்மை ஆகியவைகளுக்கு எதிராக) வயிற்றுப் போக்கினை தடுக்க உதவும்.
- மருந்துகள்,சுய வைத்தியத்தை தவிர்க்கவும். முக்கியமாக ஆன்டிபயாடிக்
மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கு பின்பே உட்கொள்ள வேண்டாம்
f, ஜீரண மண்டல உணவுப்பொருள் அழற்சி, குடல் அழற்சி நோய் ஆகியவை அடிக்கடி வயிற்றுப்போக்கினை தரும் மருத்துவரின் பரிசோதனை மற்றும் மதிப்பிடல் தேவைப்படும்
சுருங்கச் சொன்னால் வயிற்றுப்போக்கினைத்
தடுப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறைகள் தாய்ப்பாலூட்டுதல், சரியாக கைகழுவுதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் தடுப்பு மருந்து போடுதல்
வயிற்றுப்போக்கினை தடுத்தல்=
*உணவை தயாரிப்பதற்கு முன்னும் உணவு ஊட்டும் போதும் மலம் கழித்த பிறகும் குழந்தையின் மலத்தினைசுத்தம் செய்த பிறகும் இரு கைகளையும் சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவவும்
*சுத்தமான குடிநீரை ,மூடியுள்ள பாத்திரத்தில் சேமிக்கவும்
* குழந்தையின் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி குழந்தையின் கைகளை கழுவவு ம்
*எப்போதும் கழிவறையை பயன்படுத்தவும் .திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டாம். குழந்தையின் மலத்தினை பாதுகாப்பாக அகற்றவும்.
கேள்வி எண் 8
சிகிச்சைக்குப் பிறகும குழந்தையின் வயிற்றுப்போக்கு குறையவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?
- a) தொடர்ந்த வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
வயிற்றுப்போக்கின் கால அளவு ஐந்தில் இருந்து ஏழு நாட்கள். அனேகமாக இதற்குள் வயிற்றுப்போக்குநின்றுவிடும். இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு, சத்துணவு குறைபாடு இருப்பின் இரண்டு வாரங்களுக்கு மேலும் வயிற்றுப் போக்கு நீடிக்கலாம் அப்போது இது நீடித்த வயிற்று போக்கு என கூறப்படும். 10% பேர்களுக்கு வரக்கூடிய இது குறிப்பிடத்தக்க சத்துக்குறைபாட்டுப் பிரச்சனைகளை உருவாக்கும்.
B). நீடித்த வயிற்றுப்போக்கிற்கான காரணங்கள் எவை?
அசாதாரண நோய்க்கிருமியின் காரணத்தினாலோ அல்லது குடலின் மெல்லிய சவ்வுப் படலத்தில் வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட பாதிப்பினாலோ இது ஏற்படலாம். அதிக அளவு பழச்சாறுகள், மாவுச்சத்து நிறைந்த இனிப்பான திரவ பானங்கள், மருந்துகள், மற்றும் உடலின் வேறுபட்ட எதிர்ப்பு சக்தி ஆகியவை மற்ற காரணங்கள் ஆகும்
- c) ஒவ்வாமை, நீடித்த வயிற்றுப்போக்கினை உண்டாக்குமா?
ஒவ்வாமை மற்றும் சில உணவுப் பொருட்கள் சேராதது நீடித்த வயிற்றுப்போக்கினை ஏற்படுத்தலாம். பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கோ நீடிக்கலாம். இதனால் சத்துக்கள் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது பிரச்சனை ஆகலாம்
இது உணவுச்சத்து உறிஞ்சுதல் பிரச்சனை மால்அப்ஸ்சார்ப்சன்எனப்படும். சத்துக்கள் சரியாக உறிஞ்சப்பட வில்லையென்றால் சத்துக்குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படும் இதனை சரிசெய்ய ஒவ்வாமை/ சேராததிற்கு காரணமாக உள்ள உணவினை குழந்தையின் உணவுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். உதாரணமாக சீலியக் நோய் உள்ளவர்கள் கோதுமையில் உள்ள குளூட்டன் புரதத்தை சீரணிக்க இயலாது. இந்த நோயை கண்டு பிடித்தபின் குளூட்டன் இல்லாத உணவை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோயின் அறிகுறிகள் இருக்காது. மற்றுமொரு உதாரணம் பால் பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் சேராமல் இருப்பது. இவைகளை தரும்போது வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்குலேக்டோஸை ஜீரணிக்க தேவையான அளவுநொதிகளை குடலில் சுரக்காது..
ஒவ்வாமை உண்டாக்கும் மற்ற உணவுப்பொருட்கள்/ பால் சோயா முட்டை
மற்றும் கடல் உணவுகள் ஆகும்.உணவு பற்றிய அறிவுரைகளுக்கு மருத்துவப்பணியாளர்களை அணுகவும்.
இந்த நாள்பட்ட வயிற்றுப்போக்கிற்கு நோய்க்கிருமி மற்றும் உணவின் மாற்றம் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்பட்ட வயிற்றுப் போக்குள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் குறைபாடு இருக்கலாம். இவை ஆராயப்பட வேண்டும். நீண்ட நாள் வயிற்றுப் போக்கினை சரி செய்வதற்கு குழந்தை நல மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்
கேள்வி எண் 9 வயிற்றுப்போக்கு இருக்கும்போது எந்த வகை உணவுகளையும் திரவங் களையும் குழந்தைக்கு தருவதைத் தவிர்க்க வேண்டும்?
அ. அதிகளவு இனிப்பு சேர்க்கப்பட்ட கார்பன்டை ஆக்சைடு கலந்த பானங்கள்
பழரசங்கள் பழம் சேர்ந்த பானங்கள், சாதாரண குளுக்கோஸ் ஆகியவைகளை வயிற்றுப்போக்கு இருக்கும்போது தரக்கூடாது. அதிக சர்க்கரை மற்றும்சார்பிட்டால் இந்த பானங்களில் உள்ளது. சவ்வூடு பரவுதல் மூலம் வயிற்றுப்போக்கினை இவை அதிகரிக்கும். தாது உப்புக்களின்சீரற்ற ரத்த அளவினையும் அதிகரிக்கும் ஏனெனில் இவைகளில் குளுக்கோஸ் தேவையான விகிதத்தில் இல்லை.
ஆ. காபின் கலந்த பானங்களான டீ காபி அல்லது மென்பானங்களை வயிற்றுப் போக்கின் போது தவிர்க்கவும். குடலின் இயக்கத்தை அதிகப்படுத்தி அதிக தடவை மலம் கழிக்கத் தூண்டும் மேலும் சிறுநீர் பிரிதலை அதிகரித்து நீரிழப்பு நிலையை இன்னும் கூட்டும்
இ. தெருவோரக் கடைகளில் விற்கும் சுகாதாரமற்ற உணவுகளைத்தவிர்க்கவும்.இவைகளினால் மேலும் நோய்த்தொற்றும் குடல் புழுக்களும் ஏற்பட வாய்ப்புண்டு
ஈ. இதைப் போலவே அதிக உப்பு சர்க்கரை கலந்த சக்கை உணவுகளையும் தவிர்க்கவும் ஏனெனில் இவை உடலின் தாது உப்புகள் சமநிலையைக் கலைத்து நீரிழப்பு நிலையை இன்னும் மோசமாக்கி விடும்
கேள்வி எண் 10
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும்போது பால் தருவதை நிறுத்த வேண்டுமா? அல்லது வேறு பால் தர வேண்டுமா?
குழந்தையின் வயிற்றுப் போக்கின் மிகமுக்கிய பின்விளைவு சத்துக் குறைபாடு. ஆகவே தொடர்ந்து உணவு தருவது தேவையான சத்துக்களைத்தருவது சத்து குறைபாடுகளையும் தவிர்க்கும். முன்னரே அடிக்கடி வலியுறுத்தியதைப்போலவே தேவையான சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் தாய்ப்பாலூட்டுதல் ஆகியவற்றினை வயிற்றுப்போக்கின் போது ஒருபோதும் நிறுத்தக்கூடாது. நேரடியான கண்காணிக்கும் போது பால் சேர்க்காத உணவு உண்ட குழந்தைகளை விட பால் சேர்த்த உணவு உண்ட குழந்தைகள்
விரைவில் குணமடைகிறாகள்.அவர்களுக்கு வயிற்றுப்போக்கின் காலமும் மறு வயிற்றுப்போக்கும் அதிகமாக இல்லை. எனவே வழக்கமாகப் பாலை நிறுத்துவதும் தந்துகொண்டிருக்கும் தயாரிப்பினை மாற்றுவதும் தேவையற்றது. தாய்ப்பால் ஊட்டுதல் தொடரவேண்டும் குழந்தையின்வயது ஆறு மாதத்திற்கு மேலே இருந்தால் பாலுடன் தானியஉணவினைச்சேர்த்து தரலாம். அது உணவின்வெப்பசக்தியை அதிகரிக்கும் உறிஞ்சப்படும் சத்துக்களின் அளவினைமேம்படுத்தும்.
எனினும் நீடித்த நாள்பட்ட வயிற்றுப்போக்கு -14 நாட்களுக்கு மேல் இருப்பின் சில உணவு மாறுதல்கள் தேவைப்படும். பாலின் அளவை குறைக்க வேண்டியது இருக்கலாம். ஆனால் இதுஉங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் செய்யப்பட வேண்டும்
வயிற்றுப்போக்கு இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
*நீரிழப்பு தவிர்க்க விரைவில் ஓஆர்எஸ் அல்லதுமற்ற திரவ உணவுகளைத்தரவும்
*வயிற்றுப்போக்கின்போது தாய்ப்பால் மற்றும் வழக்கமான உணவினைத்தொடர்ந்துதரவும்.
*குழந்தை மற்றும் பெற்றோர் கை கழுவுதல் உள்ளிட்ட சுத்தம் சுகாதாரம் பேணுதலைக்கடைப்பிடிக்க வேண்டும்
*மருத்துவர் பரிந்துரைத்த 14 நாட்களுக்கான நாட்களுக்கான துத்தநாகம் -ஜின்க் மருந்தினை தொடர்ந்து தரவும்
*மலம் இரத்தம் சேர்ந்து வந்தாலோ குழந்தை சோர்வாகவும்நீர் இழப்பு அதிகமாகவும் இருந்தால்மருத்துவரை சந்திக்கவும்
வயிற்றுப்போக்கின் போது என்னென்ன செய்யக்கூடாது?
*குழந்தையை பட்டினி போடக்கூடாது வீட்டில் சுத்தமாக தயாரித்த உணவினை
அடிக்கடி சிறிது சிறிதாகத் தரவும்
*ஆன்ட்டிபயாட்டிக் அல்லது மற்ற மருந்துகளை சுயமாக தர வேண்டாம் ஓ ஆர் எஸ் தவிர்த்து மற்ற மருந்துகளை மருத்துவ ஊழியர் பரிந்துரை செய்யாமல் தரவேண்டாம்
*சர்க்கரை குளுக்கோஸ் சேர்ந்த திரவங்கள் பழச்சாறுகள் கார்பன்-டை-ஆக்சைடை சேர்ந்த பானங்களை ஆகியவைகளைநீர் இழப்பை சரிசெய்ய தர வேண்டாம்
*எப்போதும் தாய்ப்பாலூட்டுதலை தொடரவும்.. மற்ற பால்களை வழக்கமாக நிறுத்த வேண்டாம்
*குழந்தையின் உடல் நிலை மேம்படவில்லை என்றாலும், மோசமாக இருந்தாலும் நீர்ச்சத்து குறைந்து இருந்தாலும் குழந்தைநலமருத்துவரை உடனடியாக அணுகவும்
