தேர்வு நெருங்கி விட்டால் படபடப்பு பயம் அதிகமாகும். அதுவும் முதலில் இருந்தே சரியாக படித்திருக்காவிட்டால் தூக்கமே வராது வெறுமனே படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டே இருப்போம் .நம் நண்பர்கள் சிலர் நான் ஒவ்வொரு தேர்வுக்கு முன்னரும் முழு இரவு விழித்திருந்து படித்து எழுதுவேன் என்பார்கள்.அது தான் சிறந்தது . படித்தது அனைத்தும் அப்படியேநினைவிலிருக்கும் .நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பார்கள் .சிலர் அன்றாடம் நடத்துவதை படித்து முதலிலிருந்தே படிப்ஸ் ஆக இருப்பார்கள் .தினசரி குறிப்பிட்ட நேரம் படித்து நன்கு தூங்கி எழுந்து தேர்வுக்கு வருவது நல்லதா ?அல்லது பரிட்சைக்கு முந்தைய தினம் முழு இரவு விழித்திருந்து படித்து எழுதி முடித்து விடலாமா என்பதனை இன்று பார்ப்போம்.
தேர்வுக்கு தயாராவது என்பது வகுப்பின் முதல் நாளிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது .ஆனால் நம்முடைய சோம்பேறித்தனத்தினால் அன்றைக்கன்று பாடங்களைப் படிக்காமல் விட்டு விடுவோம். பிறகு படிக்கும் விடுமுறையில் கடைசித் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கும். நம் கல்வி முறையினைப் புருத்தவரை பிளஸ் டூ வரைக்கும் எந்தப் பள்ளிக்கூடத்திலும் நம்மை விட்டு விடமாட்டார் தினசரி பரிட்சைகள் வைத்து நம்மை எப்படியாவது தயார்படுத்தி விடுவார்கள் பரீட்சைகளும் எண்ணிக்கை இரட்டைப்படை எண்களை எப்போதோ தாண்டி இருக்கும்
சில கல்விக்கூடங்களில் நிலைமை வேறு .நாம் தான் நம் நேரத்தையும் காலத்தையும் சரியாக கணித்து வீணாக்காமல் படிக்க வேண்டும் நிறைய நேரங்களில் இங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கும் கடைசி நிமிடத்தில் படிப்பதற்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுவதும் முழு இரவு விழித்தெழுந்து படித்து அடுத்த நாள் எழுதுவதும் மிக சுலபமாகத் தெரியும்
முழு இரவு விழித்திடும் போது என்ன பிரச்சனை என்பதை இப்போது பார்ப்போம்
நமது உடல் நேரக் கடிகாரத்தினால் வழிநடத்தப்படுகிறது. தூங்குதல் விழித்தல் எழுதல் உணவு ஜீரணம் ஆதல் கழிவகற்றுதல் மூச்சு விடுதல் இருதயம், நுரையீரல் செயல்பாடு ஆகியவை ஒரு குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பாக இருக்கும் நாம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே மூளையின் சூப்பராகையாஸ்மாட்டிக் பகுதியில் உள்ள நேரக் கட்டுப்பாட்டு மையம், உயிரிக் கடிகாரம் வழியாக நம்முடைய பீனியல் சுரப்பிக்கு செய்தி அனுப்பும்.’ தம்பி இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்கப் போகிறார் அதற்காக தேவையானமெலடோனின் இயக்குநீரை சுரக்கவும் உடலின் வெப்பத்தையும் குளிர்விக்கவும்.’ என்று.உடனே உடம்பு தயாராகிவிடும் .மூளையின் ஹ்ப்போதாலாமஸ் மற்றும் பிரெய்ன் ஸ்டெம் பகுதியிலிருந்து காபா சுரக்கும்.சுறுசுறுப்பு குறைந்து உடல் சோர்வடைய ஆரம்பிக்கும்காலையிலிருந்து நம்முடைய கற்றல் வேலைகளினால் மூளையில் திசுக்கள் எல்லாம் அதிகமாக உழைத்து அடினோஸின் என்ற கழிவுப் பொருளை உற்பத்தி செய்திருக்கும். அதுவும் ஒத்துழைப்புத் தர தூக்க கச்சேரி களை கட்ட ஆரம்பிக்கும்
மெலடோனின் சுரப்பினால் ,சூரிய வெளிச்சம் குறைய ஆரம்பித்து இருள் மூட ஆரம்பித்த உடன் கண் மூட முயற்சிக்கும். அப்போது முழு இரவுக் குழுவினரான, நாம் முகத்தைத் கழுவி வெளிச்சத்தை அதிகப்படுத்தி உட்காருவோம். மூளையில் கழிவாக சேர்ந்த அடினோஸின் வெளியேறாமல் இருக்கும் போது சிறிது நேரம் கழித்து றுபடியும் தூக்கம் சுழட்டும் உடனே அண்ணே வாங்கண்ணே என்று கபின் உள்ள காப்பி,டீ, கோக்கோ , மென் பானங்களைப் பருகுவோம்.கபினின் கூட்டணியால் இந்தத் தேர்தவில் வெற்றிபெற படிக்க ஆரம்பிப்போம். ஆனால் பாழய்ப்போன தூக்கம் நடுவே வர , இடையிடையே சில நொடிக்கு நம் கட்டுப்பாட்டை மீறி கண்ணயரும்(மைக்குரோ உறக்கம்)
இப்போ படிக்கும் பாடவிசயம் எல்லாம் நேரடியாக ஹிப்போகாம்பஸ் பகுதியில் சும்மா மேலாப்பிடி ஒட்டிக்கிட்டு மட்டும் இருக்கும். பசு மரத்தாணி போலப்பதிய மூளையின் மடிப்புகளில் போய்ச் சேராது.அட , சூரிய வெளிச்சம் வர மெலடோனின் சுரப்பு நிற்கும். உடம்பு கொஞ்சம் சுறுசுறுப்பாகும். தேர்வுத்தாளினை வாங்கி எம் சி க்யூ கேள்விகளை கடகடவென அடித்து நொறுக்குவோம். ஐந்து மதிப்பெண்,பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு பழைய விசயங்களை சேர்த்து புரிந்து கட்டுரை எழும வேண்டியிருக்கும்.இப்போது வச்சாம் பாரு வேட்டுங்கிற மாதிரி எல்லாம் மறந்திருக்கும் . பூந்தப்பேந்த ஆந்தை முழியுடன் வெள்ளைத்தாளினை வெறுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். ஏனெனில் பழைய படித்த விசயங்கள் மூளையின் ஆழத்திலிருந்து எழுதுவதற்கு நமக்கு வந்து சேராது.
ஒருநாள் ஓய்வெடுத்தால் மூளை பழைய படி கற்றுக் கொள்ளப் பழகி விடும் .எனவே முழு இரவு படிப்பு வேண்டாம். பிரார்த்தனை, விழித்து கோவிலுக்குச் செல்லுதல் ஆகியவை வேண்டுமானால் கட்டுரை எழுதும் வேலை இல்லையென்றால் செய்யலாம்
