childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய உடல் பரிசோதனை

1 min read

பிறந்தக் குழந்தைக்குச் செய்யப்படும் உடல் பரிசோதனைகளைப் பற்றிப் பார்ப்போம். குழந்தைப் பிறந்தவுடன் நல்ல சத்தம்போட்டு அழுவுது, மூச்சு நல்லா இழுத்து விடுத்து, நிறம் நல்ல சிவப்பாக இருக்கு, கை, கால் நல்லா ஆட்டுதுனாவே எல்லாருக்கும் நல்ல சந்தோஷம். ஆனால் குழந்தை மருத்துவர்க் கொஞ்ச நேரம் எடுத்துத் தான் குழந்தை நன்றாக உள்ளது எனச் சொல்வார். அந்த நேரத்தில் எந்த மாதரி எல்லாம் பரிசோதனைச் செய்யவார் என்பதைப் பார்க்கலாம். முதலில் குழந்தையின் தலையில் இருந்து கால் வரை உற்றுப் பார்ப்பார். குழந்தையின் அமைப்பில் ஏதாவது வேறுபாடு இருக்கா? முக அமைப்பில் ஆரம்பித்து, கைக் கால் அமைப்பு வரை ஏதாவது மாறுபாடு இருக்கா? அதுக்கப்பறம் குழந்தையின் கண்ணைப் பார்ப்பார். கண்ணில் லென்ஸ் இருக்கர இடத்தில் நல்ல வெள்ளையா தெரியுதா? இல்லை வேறு ஏதாவது இரத்த கசிவு இருக்கா? சிகப்பா இருக்கா பார்த்து, கண்ணுக்கு அடுத்து வாயைத் திறந்து பார்ப்பார்க் குழந்தைகளுக்கு (Cleft Palate) அப்படினு சொல்லக் கூடிய அதாவது மேல் அன்னத்தில் ஒரு ஓட்டை இருக்கும் அப்படி இருந்தால் குழந்தைச் சாப்பிடுவதில் ஆராம்பித்து, பேசுவது வரைப் பிரச்சினை இருக்கும் அதைப் பார்ப்பார்கள். தாய் கர்ப்பமாக இருக்கும் போது பணிக்குட நீர் இருந்துச்சுனா குழந்தைக்குக் குடல் பகுதியில் ஏதாவது பிரச்சினை இருக்கும்னு சந்தேகம் இருக்கும். அதனால் ஒரு மெல்லிய இரப்பர்க் குழாயை வாய் அல்லது மூக்கு வழியாக விட்டு இரப்பைப் பகுதி வரைப் போகுதா அப்படிங்கரதப் பார்ப்பார்கள். இரப்பைக்குச் சென்றுவிட்டால் தொண்டைப் பகுதியில் பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதி செய்வார்கள். ஆசனவாய் பகுதி முழுவதும் திறந்து இருக்கா? மலம் வெளிவரத்துக் கூடிய அறிகுறி இருக்கா? அப்படிங்கரதச் சிறிய இரப்பர்க் குழாயை விட்டு பரிசோதனைச் செய்வார்கள். நூற்றுக்கு ஒரு குழந்தைக்கு இருதயப் பிரச்சினை வரலாம். அதில் நான்கில் ஒரு குழந்தைக்குத் தீவிரமான இருதயப் பிரச்சினை இருக்கலாம். இந்தக் குழந்தைகளுக்கு உடனடியாகவோ அல்லது சிறிது நாட்கள் கழித்தோ இருதயச் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் அநேக நேரங்களில் சுறு சுறுப்பு இல்லாமல், பிறந்த சில் மணி நேரத்திலேயே நீலநிறமாக மாறிவிடும், மூச்சுவிட சிரமம் இருக்கும். குழந்தைப் பிறந்து பார்த்தவுடன், 24 மணி நேரம் கழித்து மறுபடியும் ஒரு முறை வலது கை, இடது காலில் பல்ஷ் ஆக்கிசி மீட்டர் வைத்துப் பார்ப்பார்கள். இரண்டு பகுதியிலும் உள்ள வித்தியாசம் 3 மேல் இருந்தாலோ, இரத்தில் ஆக்சிஜன் செறிவு 95 குறைவாகவோ இருந்தால். வேறு சில பரிசோதனைகளும் செய்யப்படும். இடுப்பு பகுதியில் எலும்புகள் சரியாக இருக்குதா எனப் பார்ப்பார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு பக்கம் உள்ள விதைப்பைகள் சரியாக இல்லாமல் மேல்பகுதியில் இருந்துச்சுனா, ஆறு மாத்திற்குப் பிறகு கீழே இரக்கிவைத்து அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டி இருக்கும். சிறுநீர்ப் போகும வழிச் சரியாக இருக்கா? துவாரம் நுனியில் இருக்கா? கிழே அல்லது மேல் பகுதியில் இருக்கா எனப் பார்ப்பார்கள். குழந்தைப் பிறந்த 24 மணி நேரத்தில் குழந்தை மருத்துவரைப் பார்த்து உறுதி செய்து விட்டால் நலம்.

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading