childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

10 மாத குழந்தையின் தொப்புள் குழந்தை அழும் போதும் உணவு உண்டபின்னும் புடைத்து வெளியே வரலாம். அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக தூங்கும் போது உள்ளே சென்றுவிடும். தொப்புளின் மேல் கைவைத்து அழுத்தினால் புளக் என்ற சத்தத்துடன் ஏதோ வயிற்றுக்குள் செல்வதைப் போல இருக்கும் இதுதான் உங்களுக்கு கவலை தருகிறது .

சரி, வெளியே புடைத்து நிற்கும் தொப்புள் என்னரபிரச்சனை தரும் என இனி பார்ப்போம் இதுதான் வாய்ப்பு என்று உங்கள் அத்தையோ அல்லது நாத்தனாரோ தொப்புளைச்சரியாக கட்டி வைக்காமல் விட்டு விட்டாய் !!காற்றுப் புகுந்து விட்டது எனஉங்களை கடிந்து கொள்வதற்கு இந்த புடைக்கும் தொப்புளைஉபயோகப்படுத்தலாம். நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் தொப்புள் மேலே ஒரு துணியை இறுக்கமாக்க் கட்டி வைத்திருப்போம் அந்த தொப்புள் புடைக்காது !!என்று கூட சொல்வார்கள் இது உண்மையா?

இன்னும் சிலரோ இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை ஒரு ரூபாய் காசினை தொப்புளில் வைத்து இறுக்கி கட்டிவிட்டால் நாளாவட்டத்தில் தொப்புள் உள்ளே போய்விடும் .எந்த பிரச்சனையும் வராது. நாங்கள் நிறைய பேருக்கு இந்த மாதிரி சரியானதை பார்த்திருக்கிறோம் என்று ‘காசு வைத்தியம்’ சொல்வார்கள்.

இணையம் ஏதாவது சொல்லுகிறதா? எனப் பார்த்தால் தொப்புளை புடைக்காமல் இறுக்கிக் கட்ட தனியாக ஒரு கச்சை ,பட்டை விற்கிறோம் என கூவும் விற்பனை இணையதளங்கள் .இதில் எது உண்மை? எது பொய் ?என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதனை இப்போது பார்ப்போம்

குழந்தைக்கும் தாய்க்கும் உறவாக நாம் சொல்லுவது தொப்புள்கொடி இந்த தொப்புளுக்குள்ளே 2 நல்ல ரத்தம் கொண்டு செல்லும் தமனியும் ஒன்றும் அசுத்த ரத்தத்தை கொண்டு வரும் சிரையும் பார்க்கலாம். . குழந்தை பிறந்த பின் ஒரு நிமிடம் பொறுத்திருந்து தொப்புள் கொடிக்கு ஒரு சுத்தமான நூலைக் கட்டியோ அல்லது கிளிப்பை போட்டோ பிறகு வெட்டிவிடுவர். 5 நாட்களில் இருந்து 7 நாட்களுக்குள் தொப்புள்கொடி விழுந்து தொப்புள்கொடி இருந்த இடம் காய்ந்து சுருங்குகிறது.குழந்தையின் தொப்புள் பகுதி சதை வளர்ச்சி எல்லா குழந்தைகளுக்கும் சாதாரணமாகவே இருக்கும் எனவே குழந்தைகளும் அழும் போதோ அல்லது உணவு உண்ட பிறகோ அது புடைக்காது

ஆனால் குறைமாத குழந்தைகள் எடை குறைவாக (2.5 கிலோ )கீழே உள்ள குழந்தைகளின் வயிறு தசை வளர்ச்சி வழக்கமாக இருக்காது அதனால் தொப்புள் கொடி குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற இடம் முழுவதுமாக தசையினால் மூடப்பட்டிருக்காமு. அந்த இடத்தில் இடைவெளி இருக்கும் . நான் முதலில் சொன்னபடி கைவிரலை வைத்து அழுத்தி பார்த்தால் க்ளக் என்ற சத்தத்தோடு,அந்த துவாரத்தின் வழியாக விரல் உள்ளே செல்லும். குழந்தை அழுகை, முக்கல்,இருமல் , உணவு உண்ட பின்னும் தொப்புள்வெளியே வரும் அதுதான் நமக்கு தொப்புள் குடல் இறக்கம் (umbilical hernia) ஆகிறது.

சாதாரணமாக குழந்தையின்் வயிற்றுத் தசை வளரும் போது இந்த இடைவெளி மூடப்பட்டு விடும் எனவே எந்த அறுவைச்சிகிச்சையும் மருந்தும் இல்லாமலே இது தானே சரியாகும் குழந்தை மருத்துவர்கள் குழந்தை குப்புறப்படுக்கும் போதுசரியாகிவிடும் என பெற்றோர்களுக்கு பயமுறுத்த வண்ணம் சொல்லி அனுப்புவார்கள் .குழந்தை சாதாரணமாக திலிருந்து 1-2 வயதுக்குள் தானே சரியாகிவிடும்

சரி அப்படி என்றால் இதற்கு எந்த ஒரு கவலையும் வேண்டியது இல்லையா? சில நேரங்களில் உடல் வலி வரும். இடைவெளி 3 சென்டி மீட்டருக்கு அதிகமாக இருப்பின் தானே மூடுவதற்கு உரிய வாய்ப்பு மிகக்குறைவு இதைத்தவிர தொப்புளுக்கு மேலே குடலிறக்கம் வேறு சில பிரச்சினைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.அந்த இடைவெளியி துவாரத்தை சரி செய்ய வேண்டியிருக்கும்

துணி வைத்து கட்டினால் இதுமாதிரி ஆகாதா ?என்ற கேள்விக்கு என்ன பதில் ?என்று நீங்கள் கேட்க ஆரம்பிக்கிறது தெரிகிறது.தலையில் ஒரு கொட்டு வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள் . வெளியில் சரியாக மூடாத்த துணியினால் காற்று உள்ளே புகுந்து விட்டது -எவ்வளவு தவறான அறிவியல் செய்திகள் என்பது உங்களுக்கே புரியும் ழகாற்று உள்ளே போகும் அளவுக்கு இடைவெளி இருப்பின் உள்ளே இருந்த குடல் எப்போதோ வெளியே வந்து தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு துவாரத்தை காற்று புகாமல் துணியினால் அடைக்க முடியுமா? தொப்புளின்மேல் காசு வைத்து கட்டுவது நோய்த் தொற்றினை அழுத்தத்தின் காரணமாக ஏற்படுத்தும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் வயிற்றுக்குள் உள்ள உறுப்புகளுக்கும் பிரச்சனை அதிகமாகும் எனவே காசு வைத்து கட்டுவதுகூடாது.

கடைசியாக தடுக்கும் பட்டைகள் உபயோகம் ஆகுமா ?

இந்த கேள்வியின் விடை உங்களுக்கே தெரிந்திருக்கும் விற்பவருக்கு மட்டும்தான் பட்டைகள் உபயோகமாகும் குழந்தைக்கோ , வாங்கி பயன்படுத்தும் பெற்றோர்களுக்கோ அல்லவழக்கமாக வரக்கூடிய தொப்புள் பிரச்சனை . 95 சதவீதத்திற்கும் மேலாக தானே சரியாக போகிவிடும் எனவே கவலைப்பட வேண்டாம்

தொப்புள் வீக்கம் அழும்போது அதிகமாகிக் கொண்டே இருந்த ல் வெளியே புடைத்து வந்த வீக்கம், உள்ளே மறுபடியும் செல்லாமல் அடைத்துக் கொண்டால் குழந்தை விடாமல் அழுது வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால் வயிறு வீக்கம் வயிறு வலி இருந்தால் ,பிரச்சனை அதிகமாகி விட்டது !!என்பது புரிந்திருக்கும் உடனே குழந்தை மருத்துவர் அல்லது குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading