childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குறைமாத குழந்தைக்கு மூச்சுத் திணறல்

1 min read

குறைமாத குழந்தைக்கு மூச்சுத் திணறல்

சாதாரணமாக கர்ப்ப காலம் என சொல்லப்படுவது பத்து மாதம் ஆகும் ஆனால் தாயின் வயிற்றில் இருக்கும் காலம் குறைந்தபட்சம்  270 நாட்கள் .கருவுற்ற காலத்தில் இருந்து கணக்கெடுக்கும் போது பத்து மாதமாக இது கணக்கிடப்படுகிறது 37 வாரத்திற்கு (270 நாட்கள்)முன்பாக பிறக்கும் குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் என எடுத்துக்கொள்ளப்படுகின்றன .34 வாரத்திற்கு பின்னாடி பிறக்கக்கூடிய குழந்தைகள் லேட் பிரீடோம் எனப்படுகிறார்கள்

34 வாரத்திற்கு முன்பாக பிறக்கிற குழந்தைகளுக்கு வரக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். குழந்தை பிறந்தவுடன்  நுரையீரல் விரியஆரம்பிக்கவேண்டும் விரிந்து சுருங்குதல் தொடர்ந்து நடைபெறவேண்டும் .தொடர்ந்து நடைபெறுவதற்கு நுரையீரல் மூச்சுச்சிற்றறைகளை விரிய வைக்க சர்பாக்டேண்ட் திரவ சுரப்பு நுரையீரல் செல்களில் 34 வாரத்திற்கு பிறகு தான் ஆரம்பிக்கும் எனவே 34 வாரத்திற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரலில் சர்பாக்டேண்ட் திரவ சுரப்பு இருக்காது அதனால் குழந்தை பிறந்த உடன் மூச்சு விட ஆரம்பிக்கும் போது நுரையீரல் விரியாமல்  சுருங்கிவிடும் விரிய ஆரம்பித்ததற்கு உதவி செய்ய சர்பாக்டேண்ட் இல்லாததனால் இது நடக்கிறது

RDS
Chest x y

இந்த குழந்தைகளுக்கு சர்பாக்டேண்ட் மூச்சுக்குழாய்க்குள் ஒரு குழாயினை வழியே  உள்ளே செலுத்துவது தான் சட்டென்று பலன் தரும் முறையாகும் இதன் மூலம் தேவையுள்ள செயற்கை சர்பாக்டேண்ட் குழந்தைகளின் நுரையீரல்களுக்குள் செலுத்தப்படுகிறது அதன்மூலம் நுரையீரல் விரியவும் பின்  ஒரேடியாக சுருங்கி விடாமல் தடுக்கவும் முடிகிறது. இதன் காரணமாக நுரையீரல் வேலை செய்ய ஆரம்பிக்கிறது48 மணி நேரத்திற்கு நுரையீரல் சுருங்கும் தன்மையினைக் தவிர்க்க சர்பாக்டேண்ட் தரவேண்டியிருக்கலாம்.

ELBW on cpap

உற்பத்தியாகி உள்ள  அளவைப் பொருத்து முழுநேர செயற்கை சுவாசம் தர வேண்டியிருக்கும் பிறகு படிப்படியாக செயற்கை மூச்சு கருவியின் துணயினைக் குறைத்து பபுள் சீபாப் தருவதும் உபயோகமாக இருக்கும். இந்த மருத்துவ கருவிகளை உபயோகப்படுத்தும் போது ஒரே அடியாக நுரையீரல் சுருங்கி விடாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட அளவு  ( 5லிருந்து 6 சென்டிமீட்டர் )அழுத்தத்தை இந்த கருவி மூலமாக நுரையீரலுக்கு தரும் அதனால் நுரையீரல் காற்றுச் சிற்றறைகள் ஒரேடியாக சுருங்கி விடாமல் தேவையான அளவு விரிந்து இருக்கும் அதன் மூலம் நுரையீரல் செல்கள் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். தானே சர்பாக்டேண்ட் உற்பத்தியை ஆரம்பிக்கும்.

Nasal prongs

தானே சுவாசிக்கும்போது குழந்தையின் தேவையை பொறுத்து , ஆக்சிஜன் படிப்படியாக குறைக்கப்பட்டு பிறகு பிளாஸ்டிக் கவசம் வழியாகவும் மூக்கின் ஓரமாக செல்லும் குழாய்கள் வழியாக ஆக்சின் தரப்படும் .படிப்படியாக குறைக்கப்பட்டு  அறைக்காற்றில் உள்ள ஆக்சிஜன் மூலம் போதுமான அளவு எஸ்பிஓ2 வரும் வரை தரப்பட வேண்டும்

இதே நேரத்தில் குழந்தைக்கு ஏற்படும் மற்ற உறுப்புகளின் பாதிப்புகளையும் கவனிக்கவேண்டும்..கர்ப்ப காலம் குறைவாக இருப்பதால் இருதயம், நுரையீரல் உள்பட மற்றஉறுப்புகள் முழுதாக வளர்ச்சி அடையாமல் இருக்கும் .மூளையில் ரத்தக் குழாய்கள் மெல்லியதாகவும் எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும் தன்மை உள்ளதாக இருக்கலாம்.  நோய்த்தொற்று ஏற்படலாம். இரத்தத்தில் மஞ்சள் காமாலை அளவு அதிகரிக்கலாம். மூட வேண்டிய இருதய ஓட்டை மூடாமல் இருதய பலவீனம் வயிறு வீக்கம், குடல் பாதிப்பு அடைந்து பாதிப்பது என பல பிரச்சனைகள் ஏற்படலாம் ரத்தத்தில் சர்க்கரை அளவு ,உப்புகள் கால்சியம் மெக்னீசியம் அளவு போதுமானதாக இருக்க வேண்டும் .

Retinopathy-of-Prematurity-ROP

இந்த குழந்தைகளுடைய கண் காது போன்றவற்றின் வளர்ச்சியை பார்க்கவேண்டும் மிக குறைந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் கண் விழித்திரையில் ரத்த குழாய்பெருகி ரத்த கசிவு நோய் ஏற்படலாம் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு காது குறைவாக கேட்கிறதா ? என்ற  பரிசோதனையும் தொடர்ந்து செய்யவேண்டும் இந்த குழந்தைகள் தொடர் பரிசோதனையில் இருப்பது நல்லது போதுமான அளவு எடை வரும் வரை தேவையான வைட்டமின் சத்து மருந்துகள் இரும்புச் சத்து மருந்துகள் எடை அதிகரிக்க உதவும் எண்ணெய்மற்றும் தாய்ப்பாலின் அடர்த்தியை அதிகரிக்க சேர்க்கப்படும் பால்பொடி ஆகியவை உதவும்

இந்த குழந்தைகள் தொடர் கண்காணிப்பில் இருக்கும்போது தேவைப்படின் இவர்களுக்கு மூன்று மாதத்தில் இருந்தே கூட வளர்ச்சிக்கு உதவும் பயிற்சிகளை செய்ய வேண்டியதிருக்கும் இந்த பயிற்சிகள் உடல் எடையினை அதிகரிக்கவும் உடல் தசைகளை ஊக்குவிக்கவும் தலை நேராக நிற்பதற்கும் உதவும். குழந்தையின் புரிதல் தன்மை அதிகரிப்பதற்கும் ,பேச்சு, பார்வை ,திறனையும் அளவிட உதவியாக இருக்கும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading