குழந்தைகளுக்கு மொட்டை போடுவது அறிவியல்பூர்வமானதா ?மத சம்பந்தமான நம்பிக்கையா ? எனப் பார்ப்போம்
மொட்டை அடிக்கும் பழக்கம் இந்து சமயத்தில் மட்டுமன்றி இஸ்லாமிய,சீன ,மற்றும் யூத மக்களிடையே இந்த வழக்கம் உண்டு குழந்தைக்கு முதல் முடி கொடுப்பது என்பது ஒவ்வொரு சமயத்திலும் வேறுபடுகிறது. இந்து சமுதாயத்தின் சமயக் கடமைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

முதல் மொட்டை அடிப்பது குலதெய்வம் அல்லது விருப்பமான ஆலயத்தில் நடைபெறுகிறது. இது சாதாரணமாக ஒற்றைப்படை மாதத்தில் மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு செய்யப்படுகின்றது முதல் மொட்டைக்கு ஆண் , பெண் குழந்தை எனப் பாகுபாடு இல்லை. எல்லா குழந்தைகளுக்கும் உண்டு.பெண் குழந்தைகளாக இருப்பின் தொடர்ந்து மொட்டை அடிப்பதுசிறிது காலத்திற்குப் பிறகு தவிர்க்கப்படுகிறது மொட்டை அடிப்பதன் மூலம் 84 லட்சம் முற்பிறவிகளுடான நம்முடைய தொடர்பு துண்டிக்கப்படுகிறது என்பது இந்து சமுதாயத்தின் நம்பிக்கை.அதனால் முற்பிறவிப் பாவங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாகும் என்பது நம்பிக்கை.எடுக்கப்பட்ட முடி ,கோயில்களில் வைக்கப்பட்டுள்ள முடிக் காணிக்கை செலுத்தும் இடத்தில் போடப்படுகிறது.அழகுக்கு அழகு செய்யும் தலை முடியை காணிக்கையாகத் தருவது ஆண்டவனிடம் நம்மை ஒப்படைப்பதற்கு சமம் என நம்பப்படுகிறது
மற்ற மதத்தவர்களுக்கு மொட்டை போடும் பழக்கம் உண்டா?

பர்மாவில் புத்த மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே ஆண் குழந்தைகளுக்கு எட்டு வயதில் மொட்டை அடிக்கும் பழக்கம் உள்ளது .இது ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது மொட்டையடித்த பின்சில நாட்களோ அல்லது மாதங்களோ புத்த மடாலயத்தில் தங்குவது அவசியமான சடங்காகக் கருதப்படுகிறது.

முஸ்லீம் சமூகத்தினர் சிலரிடம் பிறந்த 7 நாட்கள் ஆன குழந்தையின் தலை முடியை மழிக்கும் வழக்கமிருக்கிறது. கர்ப்பத்தில் வளர்ந்த தலைமுடியை எடுப்பது குழந்தையைச்சுத்தப்படுத்தும் சடங்காக கருதப்படுகிறது.வழக்கமாக பறிக்கப்பட்ட முடி, எடைக்கு எடை போடப்பட்டு வெள்ளிப் பொருளாக வழங்கப்படும் அல்லது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்க நிதி உதவியாக வழங்கப்படும் .எடுக்கப்பட்ட முடி ஏதாவது ஒரு நீர்நிலையில் போடப்படுகிறது
சீன சமுதாயத்தில் , குழந்தை பிறந்து 30 நாட்கள் கழித்து முதல் முடி துறக்கும் நடைபெறுகின்றது. குழந்தையின் பாட்டி சடங்குகளைச் செய்கிறார். முட்டை ,பணம் , பொருட்கள் ஆகியவற்றில் சிவப்பு நிறம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு குழந்தையின் தலையைச் சுற்றிய பின் நல்ல உடல்நலம், வலிமை மென்மையான தோல், அமைதியான மனது பெற வேண்டப்படுகிறது . உச்சியில் சிறிது முடியை குடுமிக்கு மட்டும் விட்டுவிடுகின்றனர். சிலர் சிறு கற்றை முடியை மட்டும் சிரைக்கின்றனர். நற்பேருக்காக குழந்தைக்கு சிகப்பு தொப்பி அணிவிக்கின்றனர்

யூத மக்களிடையே குழந்தையின் 3 வயதில் இந்த சடங்கு நடைபெறுகிறது. ஒவ்வொருவராகஇருக்கம் முடி யை வெட்ட யூத ஆலயத்தில் அமோகமாக குழந்தையமையின் முடிவும் கல்வியின் தொடக்கமும் ஆரம்பமாகிறது.

சரி நமது நம்பிக்கைகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது உண்டா? இனி பார்ப்போம்
1.முடிகாணிக்கை தருவதால் முடி ஒரே மாதிரி வளரும் என்ற நம்பிக்கை சரியல்ல.தலையின் வெவ்வேறு பகுதியில் உள்ள முடியின் வளர்ச்சியும் வேற்படும். முன் மண்டை சொட்டை முதலில் வரும். பின்னந்தலை , பிடரி கடைசியில்தான் மணிமகுடம் இழக்கும்.
2.வெயில் காலத்தில் மொட்டை போடுவதால் தலை மண்டை குளிர்ச்சியாக இருக்கும் என்பது தவறு. மே மாத விடுமுறையில் மொட்டை என்பது மண்டை காய வைக்கும் என்பதை இந்த சொலவடையைப் பார்த்தாலே புரிந்து விடும்.( சந்தனம் மட்டும் குளு குளு வென்று ஆறுதல் தரும்)
3.மூளையும் நரம்புகளும் நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை பயணம், அனுபவங்கள், புதிய கற்றல் என்பதனால் நடக்கலாம்.மொட்டை போடுவதால் அல்ல
4. தலைப்புண்கள் நோயிலிருந்து குழந்தை விடுதலை பெறும்
5.மொட்டை மண்டை வேண்டுமென்றால் விட்டமின் டி உற்பத்திக்கு உதவியாகஇருக்கலாம்
அறிவியல் ரீதியாக இல்லையென்றாலும் ஒவ்வொரு சமுதாயத்திலும் முக்கிய இடம்பெற்றுவிட்ட மொட்டை அடிப்பது.சந்தனம் பூசி, தொப்பி போட்டு ஒளிப்படம் எடுக்கும் பழக்கத்தை நோய்த்தொற்று ஏற்படாமல் செய்வோம். மொட்டையடிக்க பயன்படுத்தும் கத்தியின் பிளேடு புதிதாக இருக்க வேண்டும். துண்டு துணி ஆகியவைகளைப் புதிதாக உபயோகப்படுத்திக்கொள்ளவும். சரியான சமூக இடைவெளி, முகத்திரை அணிந்த முடி திருத்துநர், கொரானா பரவலைத் தடுக்க உதவுவர்.
மொட்டை அடித்து நிதி சேகரித்தல், புற்று நோய் பாதித்தவர்க்கு ஆதரவாக மொட்டை போடுதல், புது நாகரீகமாக தலையை மழித்தல் என பெரியவர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாக உள்ளது
