நீங்க அடிக்கடி பார்த்திருப்பீங்க உங்க குழந்தையோ அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்க குழந்தையோ திடீரென்று ஏதோ கேட்டு தரலைன்னா கீழே விழுந்து உருண்டு புரண்டு களேபரம் பண்ணும். இந்த மாதிரியான அதிக கோபமும் அதுக்கப்புறமான நடத்தையையும் தான் உச்சகட்டச்சினம்அப்படின்னு சொல்றோம்

மூச்சை நிறுத்தி விடும். உடம்பு நீல நிறத்தில் கூட மாறிவிடும் கை கால் லேசாக வெட்டலாம்.. நிறைய குழந்தைகள் இப்படி இல்லாம அழுது புரண்டு கடித்து விட்டு தலையை எடுத்துவிட்டு தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தலாம் இது ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் ஏற்படவில்லை சற்றேறக்குறைய எல்லா குழந்தைகளுமே ஏதாவது ஒரு தடவை உச்சகட்ட கோபத்தினைக் காண்பிக்கிறார்கள்

ஒன்றரை வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளில் 70 சதவீதமும் மூன்றிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளில் 7 சதவீதமும் பாதிக்கப்படலாம் இதில் சரி பாதிக்கு மேல், நடத்தை மற்றும் உளவியல் கோளாறுகள் அவர்களுக்கு கூடவே இருக்கலாம் சற்றேறக்குறைய எல்லா குழந்தைகளுமே ஏதாவது ஒரு தடவை உச்சநிலை கோபத்தினைக் காண்பிக்கிறார்கள்
அதிக களைப்பு. உடல் வலி அந்தப் பயத்தினால் கட்டுப்பாடு இழக்கிறார்கள். அதனால் தொடர்ந்த அழுகை, அடம்பிடித்தல், மூச்சுப் பிடித்தல் அல்லது முரட்டுத்தனமாக நடக்கிறார்கள்
இதற்கு குழந்தையின் நடத்தை மற்றும் மன அழுத்தம் கூட காரண மாக இருக்கலாம் .இவர்களைப் பற்றிய விசயங்களைக்கேட்கும் போது மன வளர்ச்சி பற்றியும் குடும்ப நி லை பற்றியும் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ,அடிதடி உள்ளதா? என்பதையும் கேட்க வேண்டும்

குழந்தையை பார்த்துக் கொள்பவர் களுக்கு இது குழந்தைப் பருவத்தின் ஒரு சாதாரணமான மறுபக்கம் என்பதைச் சொல்ல வேண்டும் .பசி, சோர்வு ஆகியவைகளால் நாள் பட் ட உச்சகட்ட சினம் வந்தால் அதை தவிர்க்கவும் மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்
அடிக்கடி உச்சகட்ட சினம் ஏற்பட் டால் கண்டு கொள்ள வேண்டாம் குழந்தையை அந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு கூட்டி செல்லவும். தனியே வெளியே உட்கார வைக்கவும் ஒரு வயதுக்கு ஒரு நிமிடம் என கணக் கிட்டுக் கொள்ளவும். ஐந்து வயது என்றால் ஐந்து நிமிடம்
குழந்தை அமைதியாகும் வரை அரவணைத்துக் கொள்ளவும் அல்லது பிடித்து வைத்துக் கொள்ளவும்.குழ ந்தைக்கு ஒரே மாதிரியான ஒழுங்கான குழப்பமில்லாத கட்டளைகளை மட்டும் சொல்லித்தரவேண்டும். அதைப்போலவே கட்டளைக்குக் கீழ்ப்படியும் தன்மைக்கு பழக போதுமான கால இடைவெளி தர வேண்டும்
உணவு பழக்கங்களில் சத்துள்ள உணவுகளை தர வேண்டும்,அதிக சர்க்கரை அதிக உப்பு மற்றும் காபின் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவுகள் தரப்படும்போது இக்குழந்தைகளுக்கு பிரச்சினைகள் குறையலாம்
படங்கள் நன்றி குகூள்
