Blog Stats

  • 128,340 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

சொறி சிரங்கு

1 min read

சொறி சிரங்கு பல்லாண்டு காலமாக மனித குலத்திலிருந்து வரும் நோய்.சொரி சிரங்கு பல்லாண்டு காலமாக மனித குலத்திலிருந்து வரும் நோய். அதிகம் முக்கியத்துவம் பெரும்வயது பள்ளிக்கூடம் செல்லும் சிறு குழந்தைகள் தான் ஆனால் பெரியவர்கள் முதல் அனைவருக்கும் பரவும். ஏழை பணக்காரன் சுத்தம் அசுத்தம் என வேறுபாடு எதுவுமில்லை


அதிக கூட்டம் உள்ள கல்லூரி விடுதிகள்,வகுப்பறை கள்,முகாம் மற்றும் சிறு குழந்தை காப்பகங்கலி ல் ஒருவரின் தோலிலிருந்து நெருக்கமாக அமரும்போது அடுத்தவருக்கும் பரவுகிறது.
வெகு அபூர்வமாக அவர்கள் பயன்படுத்திய துணி ,துண்டு, படுக்கை விரிப்பு மூலமாகவும் பரவுகிறது

இதை உருவாக்கும் ஒட்டுண்ணிக் கிருமி சர்கோப்டிஸ் ஸ்கேபி. அரக்னிட்(சிலந்தி மற்றும் உண்ணி கூடப்பிறந்தவர்கள்). 8 கால்களையும் வட்டமான உடலையும் சிரமத்தோடு தான் பார்க்கவேண்டும் குடும்பத்தைச் சார்ந்தது. நன்கு வளர்ந்த சிரங்கு பூச்சியின் அளவு ஒரு குண்டு ஊசியின் தலை அளவுக்குத்தான் இருக்கும்.முக்கியமாக விரல் இடுக்குகளிலும் மடிப்புகளிலும் அதிக ஈரமான இடங்களிலும் இந்த கிருமி தன்னுடைய இருப்பிடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது . பெண் சிரங்கு பூச்சி முட்டையிட்டு பின் ஒரு மாதத்திற்குள் இறந்து விடுகிறது. இடப்பட்ட முட்டைகள் பொரிந்து புதிய சிரங்கு பூச்சிகள் வரும்.அவை வளர்ந்து தோலின் மேல் பகுதிக்கு வருகின்றன. பெண் மற்றும் ஆண் பூச்சிகள் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது ஆண் பூச்சிகள் இறக்க பெண் பூச்சிகள் மீண்டும் தோலுக்கு அடியில் சென்று புதியதாக முட்டைகளை இடுகின்றன. ஒவ்வொரு சுழற்சிக்கும் இரண்டு மூன்று வாரம் பிடிக்கும்.


நோய்த் தொ ற்றுஅரிப்பினை உண்டு பண்ணும் .உங்கள் உடம்பின் தோலில் அவை குடிவந்த பிறகு வறண்டு அரிக்கும் .தடிப்பான சிகப்பு தோல் புள்ளிகள் தோன்றலாம்.அரிப்பு இரவில் அதிகமாக இருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து ஆறு வாரங்களில் இவை தோன்றும் உங்கள் .மருத்துவர் உடல் பரிசோதனை செய்த பி ன் பின்பு தேவைப்படின் தோலைச் சுரண்டி எடுத்து நு ண் நோக்கி மூலம் பார்த்து சொறி சிரங்கு என கண்டுபிடிப்பார்
நல்ல மருந்து உடல்முழுவதும் முக்கியமான பாதிப்புகள் உள்ள இடங்கள், பிறப்புறுப்புப் பகுதிகளில் நன்றாக தேய்க்கவும். இரவு மருந்தினைத்தடவி காலையில் குளித்துக் கொள்ளலாம். பூச்சி எங்கு இருக்கிறது என்று சந்தேகப்படுகிறோமோ அனைத்து இடங்களிலும் களி ம்பு மருந் திி னை போடவேண்டும் .

வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நாளி ல் மருந்தினை உபயோகிக்க வேண்டும் .தேவைப்படின் மீண்டும் ஒருமுறை இந்த மருந்து போட்டுக் கொள்ளலாம். நோய்க்கிருமி அழிந்த பின்னாலும் அரிப்பு பல வாரங்களுக்கு இருக்கும் .அதைவைத்து நோய்த்தொற்று சரியாகவில்லை என்று பயப்படவேண்டாம் .விட் டுப் போகாத பூச்சியை சரி செய்ய சுடுதண்ணீரில் துணியையும் துண்டையும் போட்டு து வைக்கவும். தற்போது பெர்மெத்திரின், பென்சைல் பென்சோவேட், சல்பர், லிண்டேன் ஆகியவை நல்ல பலன் தரும்

Skin crust with scabies mites (Sarcoptes scabiei) Movie courtesy of Charlene Willis (former PhD student in the Queensland Institute of Medical Research Scabies Laboratory 2007)

This is a video of the human itch mite taken from Animal Planet’s “Monsters Inside Me” documentary series.

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading