childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

புத்திசாலியாக குழந்தையை வளர்ப்பது எப்படி ?

1 min read

புத்திசாலியாக குழந்தையை வளர்ப்பது எப்படி ?என்ற புத்தகத்தை நீங்கள் இன்று எழுதினாலும் கூட எக்கச்சக்கமான பேர் வாங்குவதற்கு வரிசையில் இருப்பார்கள்

ஒவ்வொரு பெற்றோரின் தன் குழந்தை தன்னை விட சிறப்பான புத்திசாலியாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.அதனால் தான் கரு ஆனமுதல் ஆரம்பித்துகுழந்தை பிறந்த பிறகும் பல வழிகளை முயற்சிக்கின்றனர்.

எல்லாக் காலத்திலும் மூளை வளர்ச்சிக்கு, ஊக்கப்படுத்த வைக்கிறேன் பேர்வழி என்று சொல்ல விளையாட்டுக்கள் .செயலிகள் ,பயிற்சி முறைகள் என சந்தை நிறைந்து விளங்குகின்றது.இந்த குறிப்பிட்ட வழி முறைதான் சிறந்தது என்று இதுவரை எந்த முறையையும் குழந்தை வளர்ச்சி வல்லுநர்கள்சொல்வது இல்லை

குழந்தை வளர்ப்பில் கடைபிடிக்க வேண்டிய வளர்ப்பு முறை இதுதான் சரியானது என்று சொல்லுவதும் இயலாது .ஆராய்ச்சிகளைலும் இப்படிக் குழந்தையை வளர்த்தால் குழந்தை சிறப்பாக வளரும் என்று உறுதியாக சொல்லக்கூடிய முறை என்று எதுவுமிலலை

.சரி !குழந்தை வளர்ப்பில் என்னென்ன விஷயங்களை செய்யலாம் செய்யக்கூடாது? என்பதை மட்டும் மேலோட்டமாகப் பார்ப்போம். கூடாது என்று நாம் இப் போது சொல்வது ஒரு காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டும் இன்று இருந்திருக்கும்

முதலில் எது கூடாது என்பதைப் பார்ப்போம்

குழந்தைகளை அடிக்க கூடாது .மிரட்டக் கூடாது .கேலி செய்யக்கூடாது .பயமுறுத்தக் கூடாது .அதிகச் செல்லம் தரக்கூடாது . மிகவும் கண்டிப்பாகவும் இருக்க கூடாது .படிப்பு படிப்பு என்றும் இருக்கக் கூடாது என்னேரமும் விளையாடவும் விடக்கூடாது .கம்ப்யூட்டர் என்று கண்ணை கெடுக்க கூடாது . அதிக நேரம் தனிமையில் விடக்கூடாது .மனதை பாதிக்கும் திரைப்படங்கள் காட்சிகளை காண்பிக்க கூடாது. குழந்தை முன் சண்டைஇடக்கூடாது.

பெரிய பொம்மைகள் தேவைப்படாதுவீட்டில் 24 மணி நேரமும் தொலைக்காட்சிஓடக்கூடாது. அழும் குழந்தையை சமாதானப்படுத்த மொபைலை தரக்கூடாது. தீனியை வாங்கித் தந்து லஞ்சம் தரக்கடாது. நல்ல மதிப்பெண் வரவில்லை என்றால் மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க கூடாது . தவறு செய்தால் எடுத்துச் சொல்ல வேண்டும் .தண்டிக்கக் கூடாது .சிறு சிறு தவறுகளை செய்தாலும் கற்றுக்கொள்ளும் பாடத்தைச் சொல்லித் தரவேண்டும் குழந்தையை என்நேரமும் கைக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது .பருவ வயதில் உள்ள குழந்தையை என்நேரமும் தொல்லை செய்து கொண்டிருக்கக் கூடாது. நண்பர்களைப் பற்றி அதிகம் குடையக்கூடாது .நண்பர்களைப்பற்றி தினமும் நம்அறிவுரைகளைச் சொல்லக்கூடாது . எத்தனை விஷயங்கள் பார்த்தீர்களா !!

என்ன விஷயங்களைச் செய்யலாம் ?என்பதை அடுத்து பார்ப்போம். கலில் கிப்ரான் சொன்னதுபோல் குழந்தைகள் உங்கள் வழியாக உங்கள் இல்லத்துக்கு வந்தவர்கள். அவர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை நீங்கள் தருகிறீர்கள். உங்கள் எண்ணம்போல் தான் என கொடுமைப்படுத்தக்கூடாது.(கையில் கிடைத்ததை எடுத்து சாத்தி விடலாம் என்று தோன்றும் ).அத்தனையும் கட்டுப்படுத்தி உச்சகட்ட சினத்தில் அழும் குழந்தையை சமாதானப்படுத்த வேண்டும். கேட்கும் பொருளை எல்லாம் வாங்கித் தராமல் பொறுத்து பெற்றுக்கொள்ளும் தன்மையை விளக்க வேண்டும் .மற்றவர்களுக்கு மரியாதை தரச்சொல்லித்தர வேண்டும் ..குழந்தை எப்படி வளர வேண்டும் என நினைக்கும் அதே போன்ற பண்புகளை நாம் வீட்டில் கடைபிடிக்க வேண்டும் .நாணயமாக இருக்கவேண்டும். நேரத்தில் உறங்க வேண்டும் .நல்ல உணவுகளை உண்ணவேண்டும் தீனிப்பொருட்களை தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி வேண்டும் .குழந்தைக்குபிடித்த விஷயங்களை செய்ய வேண்டும் .ஓய்வு நேர பொழுதுபோக்கு ஒன்றினை மேற்கொள்ள உதவவேண்டும் .விளையாட்டு நுண்கலை மற்றும் படிப்பில் போதுமான ஆர்வத்தினை தொடரச் செய்ய வேண்டும். குழந்தையின் வளர்ச்சிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் .ஏதாவது புதிய மாற்றம் ஏற்பட்டால் என்ன காரணம் ?என்பதனை கண்டு கொள்ள வேண்டும் தர வேண்டிய தடுப்பூசிகளை தர வேண்டும் குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டும் பொறுப்பாசிரியர் உடன்தொடர்பில் இருக்க வேண்டும்

இத்தனைக்கும் மேலே பாரம்பரியம்.சூழல்,நண்பர் குழாம் எல்லாம் உதவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading