தாமதமான பேச்சுக்கு முக்கிய காரணம் குழந்தைக்கு தேவையான தூண்டுதல் இல்லாததுதான். மில்லியன் கணக்கில் செலவு செய்து ஹார்வார்டு யூனிவர்சிட்டி குழந்தையின் இளம் வயது மூளை வளர்ச்சியைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் அதை பற்றிய காணொளிகள் ஆங்கிலத்தில யூடியூபில் கிடைக்கின்றன .centre for developing child என்று போட்டால் மிக அருமையான அழகான ஐந்து நிமிடத்திற்கும் குறைவான காணொளிகள்( பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டியது) கிடைக்கின்றன.
மூளை வளர்ச்சிக்கு நரம்பு திசுக்களில் பெருக்கம் ,அடர்த்தி ,ஒன்றோடொன்று இணைந்து செயலாற்றுதல் ,ஒன்றுக்கொன்று இரசாயனப் பரிமாற்றம் மூலம் செய்திகளை கடத்துதல் ஆகியவை தேவை.வளரும் மூளைத் திசுக்களில் உபயோகப்படுத்தப்பட்டவை மீண்டும் வளர்ச்சி பெறும். தீண்டப்படாத வளராத திசுக்கள் நறுக்கப்பட்டு அழிக்கப்படுதல் என தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

குழந்தைக்கு நாம் செலவழிக்கும் நேரம் தான் மிக முக்கியம். மூளை வளர்ச்சி ,அறிவுத்திறன் ,மேம்படுவதற்கு குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் எதிர்வினை ஆற்றும் போது குழந்தை கற்றுக் கொள்கிறது .குழந்தை செய்ததற்கு நீங்கள் திருப்பி ஏதாவது செய்ய அதிலிருந்து கற்றல் ஆரம்பிக்கிறது. இதைச் செய்தால் இப்படி நடக்கும் என்பது புரிகிறது அதிக நேரம் வீட்டிலுள்ளவர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனிக்கும் :வார்த்தைகள் உடைய ஒலி அமைப்பை, வார்த்தைகளுக்கும் பொருட்களுக்கும் உள்ள தொடர்பை ,வாக்கியஅமைப்பினை கவனித்துக் கொண்டே இருக்கும். அதை திருப்பி சொல்ல பார்க்கும் .சொன்ன வார்த்தையை கிளிப்பிள்ளை போல குழந்தை திருப்பி சொல்லிப்பழக ஆரம்பிக்கும்.

நிறையக் குழந்தைகளுக்கு சாதாரணமான பேச்சு தாமதம் தான் இருக்கிறது .எந்நேரமும் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும்தொலைக்காட்சியும் திறன்பேசி களும்தான் முக்கிய காரணம் .நிறைய வீடுகளில் காலை எழுந்தவுடன் ராசிபலன் டிவி .பின்பு கனிவோடு கூடிய சன் டிவி மதியம் முழுவதும் சுட்டி ஆதித்யா மாலை முழுவதும்விஜய் டிவி விஜய் டிவி என முழு நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது குழந்தை பேசும் போது எதிர் பேச்சு கிடையாது .குழந்தை தொலைக்காட்சி திரையில் பேசுபவர்களை மட்டும் கவனித்துக் கொண்டே இருக்கும். இதனால் குழந்தை மறுபடியும் பேசுவதை தொடராது.

ஒருபக்கம் மூளையில் புதிய திசுக்கள் பெருகிக்கொண்டே இருக்கும் போதுமானளவு தூண்டுதல் இல்லை என்றால் திசுக்களில்கழிக்கப்பட்டு விடும் .பெரும்பாலான நேரங்களில் இதுதான் நடக்கிறது .மிக சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு மட்டும் பேச்சுப்பயிற்சி நிபுணர் ஆலோசனைகள்,தொடர் பயிற்சிகள்தேவை
என்ன செய்ய வேண்டும் ?முதலில் குழந்தை விழித்திருக்கும் நேரம் முழுவதும் யாராவது ஒருவர் கூட இருக்க வேண்டும் .வேண்டும்டும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அதிக நேரம் பேச, பேசி கவனிக்க தோன்றும்.குழந்தையினுடைய பேச்சு சரியாக வர என் நேரமும் டிவி ஆப் என்ற சின்ன மந்திரத்தை மட்டும் கடைபிடிக்கவும் குழந்தையைவீட்டுக்கு வெளியே வேடிக்கை காண்பித்த சாப்பாடு ஊட்டுவது என ஆரம்பித்து டிவி திறன்பேசி இல்லாமல் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய ஆரம்பியுங்கள் ஒரு வயது தாண்டிய குழந்தையாக இருக்கும்போதுபாட்டு போட்டா ஆடும் .அதற்குப் பிறகு படிப்படியாக கேள்விகளைக் கேட்கும்போது பதில் சொல்லுங்கள். அதை தாண்டிய குழந்தைகளுக்கு கதைகள் பிடிக்கும் .ஒன்னரை வயதிற்குள்ளாகவே குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை என்றால் குறிப்பிட்ட செயலை மட்டும் திருப்பி திருப்பி செய்துகண்டிருந்தால் மன இறுக்கம் உள்ளதா என பார்ப்பது நல்லது.
அதிகம் தொலைக்காட்சி தொலைக்கும் சொல்லாட்சி .
இறைக்க இறைக்க சுரக்கும் ஊருணி பேசப்பேச ஊரும் வார்த்தை.
.உள்ளே உறிஞ்சி, பேச்சின் மூச்சைத் திணறடிக்கும் இணையச்சுழல்கள்
தவிர்ப்போம்.தடுப்போம்
