childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

முன்தோல் குறுக்கம்சுன்னத் என்றால் என்ன?

1 min read

ஆணுறுப்பின் முன் தோலினை அறுவை சிகிச்சை அல்லது சமயச் சடங்கு மூலம் நீக்குவது சுன்னத் அல்லது விருத்தசேதனம் எனப்படும். சமய ,கலாச்சார, சுகாதார ரீதியில் இவை செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30% ஆண்களுக்கு வெளித் தோல் நீக்கப்பட்டு உள்ளது.கிமு 2350 காண்டு என கணக்கிடப்பட்ட எகிப்து குகை ஓவியங்களில் முதன்முதலாக இது காணப்படுகிறது. யூதர்கள் பார்சிகள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தில் இது கடைபிடிக்கப்படுகிறது.


சுன்னத் செய்யும் போது முன்னே மூடி இருக்கக்கூடிய தோலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுவர்.
இந்த முன்தோல் குறைந்தபட்சம் மொட்டு பகுதியை தாண்டி ஒரு சென்டிமீட்டர் இருக்கும். சிறுநீர் வரும் துவாரத்தையும் ஆண்குறியின் மொட்டுப்பகுதியையும் பாதுகாக்கும்.. பிறந்த குழந்தைகளில் முன்தோல் 4 சதவீதம் பேருக்கு மட்டும் பின்னே விலக்கக்கூடியதாக இருக்கும் ஆண்குறி வளர வளர முன்தோலானது தானே விலக ஆரம்பிக்கும்..
சில குழந்தைகளுக்கு விடலைப் பருவம் வரைக்கும் கூட தோல் விலகாது. இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை!!!!

நிறைய பெற்றோருக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. குளிக்கும் போது ஒவ்வொரு முறையும் தோலைப் பின் இழுக்க வேண்டுமா? குழந்தையின் பிறப்பு உறுப்பை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? இதைப் பற்றி இப்போது பார்ப்போம்
குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை தயவுசெய்து ஆண்குறியின் முன் தோலை பின்னே இழுக்க முயற்சி செய்ய வேண்டாம் .அதற்கு பதிலாக குளிக்கும்போது மென்மையான அலர்ஜி உண்டாக்காத சோப்பின் மூலம் கழுவ வேண்டும். டயபர் உபயோகிக்கும் குழந்தையாக இருப்பின் டயப்பர் நோய்த்தொற்று / அலர்ஜி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


உங்கள் குழந்தைக்கு ஆறு மாதம் தாண்டிய பின் குழந்தையின் ஆண்குறியை சுத்தம் செய்யும் போது மெதுவாக தோலினை பின்னே இழுக்க முயற்சிக்கலாம். எவ்வளவு தூரம் தோல் உள் நோக்கி வருகிறதோ அவ்வளவு தூரம் மட்டும் மென்மையாக இழுத்தால் போதும். வலிக்க வலிக்க,புண் ஆகும் வரை பின்னே இழுப்பது கூடாது. தெரியும் பகுதியை சுத்தமாக தண்ணீர் மூலம் கழுவணும் .அதற்குப் பின் தோல் முன்னே வரும்படி விட்டு விட வேண்டும் அப்போதுதான் அது ஆண்குறியின்
நுனிப்பகுதியை மூடி இருக்கும்..
சிறுநீர் வெளிவரும் துவாரம் புண் இல்லாமல் இருக்கும். பிரச்சனையுள்ள மேல்தோல் எனில் சிறுநீர் துவாரத்தில் நோய்த் தொற்றினால் புண் ஏற்பட்டு வெளுத்திருக்கும்.
பச்சிளம் குழந்தைக்கு என்று தனியே எதுவும் செய்ய வேண்டியது இல்லை . குளிக்கும்போது ஆண்குறியையும் கழுவிவிட வேண்டும் மேலுக்கு போடும் சோப் பையே போடலாம் தோல் அலர்ஜி ஏற்படாமல் தடுக்க அடிக்கடி டயப்பர் மாற்ற வேண்டும்.வழிந்து முன் தோலை பின்னே இழுப்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் புண் ஏற்பட்டு காயமாகி ரத்தம் கசிந்து மீண்டும் ஆறும்போது நுனி சுருங்கிவிடும். முன்தோல் வெளிவருவதற்கு பிரச்சனை ஏற்படும்.குளிக்கும் போது எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் மட்டுமே முன் தோலை மெதுவாக பின்னே எடுக்க வேண்டும் .குளித்தபின் திரும்பவும் ஆண்குறியின் முன்பகுதியை மூடும்படி விட்டுவிட வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் முன் தோல் குறுக்கம் ஏற்படும்
குழந்தைக்கு வயது ஏற ஏற தோல் பின்னே செல்லும் .மெதுவாக முன்தோலை எவ்வாறு இழுப்பது ?என்பதை சொல்லித் தரவேண்டும். குளிக்கும்போது கழுவி விட்டு ஈரம் காய்ந்தவுடன் திருப்பி பழையபடி இழுத்து விட பழக்க வேண்டும்.
சிறுநீர் வேகமாக வருகிறதா? நேராக வருகிறதா? சொட்டுசொட்டாக வருகிறதா? சுற்றி ச்சிதறி அடிக்கிறதா? சிறுநீர் கழிக்கும் போது சிரமம் இல்லாமல் போகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். ஏதாவது பிரச்சனை எனில் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
சில குழந்தைகளுக்கு தோலினை பின்னே இழுக்க முடியாது நாலு அல்லது எட்டு வாரம் ஸ்டீராய்டு களிம்பினை தினம் இருமுறை போட்டால் சரியாகும்.சிறுநீர் கழிக்கும் போது நுனித்தோல் புடைப்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை நுனித்தோல் பின்னே போகும் போது இது சரியாகி விடும்.. சுன்னத் செய்யவேண்டிய சூழ்நிலைகள் என்னவென்று இனி பார்ப்போம்.

1.முதலில் சரியாக இருந்து இப்போது இழுக்க முடியாத முன்தோல்
2. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
3. நுனியில் அடிக்கடி நோய்த்தொற்று
களிம்பினை மேலே தடவுவது, உடன் முன்தோலை இழுத்து விடுவது நிறைய குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.

உதவி:விருத்த சேதனம் – தமிழ் விக்கிப்பீடியா

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading