விக்கல் வருவது நல்லது!!! என்று ஏன் சொன்னார்கள் என யோசித்துப் பார்த்தால் அக்காலத்தில் மருத்துவம் இல்லாத (அ) சரி ஆகாத சில பிரச்சனைகளுக்கு நல்லது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகும். இந்த வரிசையில் வருவதுதான் மாறுகண் இருந்தால் நல்லது, ஆறு விரல் அதிர்ஷ்டம், கண்ணத்தில் குழி விழுந்தால் பணக்காரன், என பழமொழிகள்
விக்கல் வருவதற்கு நிறைய காரணங்கள் ;அதைப்போல அதை சரி செய்வதற்கும் நிறைய மருத்துவச் சிகிச்சைகள் இப்படி எந்த வைக்கும் கணக்கிலடங்கா சிகிச்சைமுறைகள் இருந்தால் எந்த முறையும் 100% எல்லாருக்கும் பலனளிக்காது என்பதுதான் கண்கூடான உண்மை .

விக்கல் ஏற்படுவதற்கு மூச்சு விட உதவும் உதரவிதானம் மற்றும் தசைகளின் சுருக்கமும் அவசர அவசரமாக மூடும் குரல்வளை முகப்பும்தான் காரணம். சில நேரங்களில் இருபக்க உதரவிதானமும், மார்பிடைத்தசைகளும் சுருங்கி விக்கல் வரலாம். 48 மணி நேரத்திற்கு மேல் இருப்பின் தொடர் விக்கல் எனவும் 1 மாதத்திற்கு மாறி இருந்தால் அடங்காத விக்கல் எனவும் சொல்லப்படும்
தொண்டைக்குழாயின் கீழ்ப்பகுதி, உதரவிதானத்தின் பக்கவாட்டுப்பகுதி, இரைப்பை தசிகளின் தூண்டுதலினால் செய்தி மூளையின் மெடுல்லாவிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பறக்கிறது., அந்த தூண்டுதலை ஏற்று அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற கட்டளையினை கொண்டு வந்து சேர்க்கும் உணர்வு நரம்புகள் .உடனடியாக. மூச்சு விட உதவும் உதரவிதானத் தசைகளின் சுருக்கமும் அவசர அவசரமாக மூடும் குரல்வளை முகப்பும்தான் ஹிக் ஹிக் லிற்கு காரணம்.
நிமிடத்திற்கு 4 லிருந்து 60 முறை ஏற்படலாம்.எதனால் ஏற்பட்டது? யாருக்கு ஏற்பட்டது? என்பதைப்பொறுத்து இது மாறும். அதிக மென்பானங்கள், சூடான அல்லது குளிர்ந்தபானங்கள்,மன அழுத்தம், அதி உற்சாகம்,தொண்டையில் சிக்கிக் கொள்வது தொண்டை வறட்சி, இரைப்பை நிறைய காற்று,எதுக்களிப்பு,என சாதாரணமாக ஆரம்பித்து மாரடைப்பு, சிறுநீரகச்செயலிழப்பு ஆக பலவும் விக்கலை ஏற்படுத்தலாம்.

மருத்துவ சிகிச்சையில் பலவிதமானமருந்தில்லாச்சிகிச்சைகள் உள்ளன. அதில் வேகஸ் நரம்பினைத்தூண்டக்கூடிய, பயப்படுத்துவது, கண்மேல் அழுத்தம் தருவது,கழுத்தின் கரோட்டிட் இரத்தக்குழாய் அழுத்துவது அடங்கும். மூக்கு தொண்டைப்பகுதி ,தொண்டைக்குழாயின் கீழ்ப்பகுதியினைத்தூண்டும் செயல்களான- விரைந்து அதிகமாகத்தண்ணீர் குடிப்பது, சர்க்கரை சாப்பிடுவது, எலுமிச்சையை கடிப்பது ஆகியவை அடங்கும் .மூச்சுப்பிடிப்பது, தாள் பையினுள் சுவாசிப்பது,ஆழமாக மூச்சிழுத்து வெளிவிடாமல் அடக்கிக்கொள்வது போன்றவை கார்பன் டை ஆக்சைடின் அளவினை அதிகரித்து மூச்சு விடுதலை மாற்றும். இவைகளின் மூலம் மூச்சிழுப்பது கட்டுப்படுத்தப்படும் போது விக்கல் நிற்கலாம்.
இல்லையெனில் குளொர்புரொமசுன். பேக்குளோபென்,பெரிநார்ம் என மருந்துகளும் அதிக திமிர் பிடித்த பிரெனிக் நரம்பிற்கு ஊசியும் உண்டு
