பூக்கள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது அதிலும் வழிபாடுகளில் அதற்கென்று தனியிடம் இருக்கிறது பலவித பூக்களில் சில பூக்களைப் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்த பால்வடியும்.
சில செடிகளின் இலைகள் உடைந்தால் அதிலும் பால் போன்ற திரவம் வடிவதை பார்த்திருக்கலாம் .


நந்தவனத்தில் பூப்பறித்து அவர்கள் பூத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் மாலை தொடுப்பவர்கள் என பலருடைய கண்களில் வெள்ளை நிற பால் போன்ற திரவம் படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது கோயில்கள் வழிபாட்டிற்குப் பிறகு பிரசாதமாக தரப்படும் பூக்களைகூந்தலில் அல்லது காதுமடல்களில் சொருகி வைத்துக் கொள்வோம.ஏமாந்துபோனால் சில வேளைகளில் காம்பு ஒடிந்து பால் பட்டால் கண் விழிப்படலம் பாதிக்கப்படலாம் என்பது நாம் அறியாத செய்தி. தலைப்பொடுகு க்காக சீதாப்பழ கொட்டைகளை அரைத்து தலைக்குப் பூசும்போது வழயும் திரவம் ஏமாந்து கண்ணில்படும் . எருக்கம் பூவில் இருந்து வடியும் பால் என இவை அனைத்தும் கண்ணின் கருவிழியை பாதிக்கின்றன.

கண்கள் பாதிப்படையும் போது முதலில் கண் சிவக்கும் .கண்வலி ஆரம்பிக்கும் .கண்பார்வையில் சிறிது குறைபாடு தோன்றும். வலி காரணமாக கண் மருத்துவமனைக்கு வரும் போது பரிசோதித்தால் கருவிழியில் வீக்கம் தெரியும்.
உடனடியாக அதற்குரிய மருந்துகளைத் தரவேண்டும். இல்லை என்றால் செடியில் இருந்து வடியும் பாலின் அமிலத் தன்மை காரணமாக கருவிழி னுடைய திசுக்கள் பாதிக்கப்படும். ஒவ்வொன்றாக திசுக்கள் அழியும் அதன் காரணமாக கருவிழியில் புண் ஏற்படும் கருவிழிப் புண் ஏற்படும் போது கண் வலி மிக அதிகமாக இருக்கும். ஆனால் பால் போன்ற திரவம் பட்டவுடன் உடனடியாக தண்ணீர் சுத்தமாக கழுவிவிட்டு மருத்துவ உதவியைப் பெற்றால் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கருவிழி வீக்கம் கட்டுப்படுத்தப்படும் தொடர்ந்து மருந்து உபயோகப்படுத்தும் போது பார்வை குறைபாடு சிறிது சிறிதாக சரியாகிவிடும்

