Blog Stats

  • 128,337 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

மருத்துவர் .ஜாக் நியூமன் மற்றும் திருமதி.லினோர் கோல்டு பார்ப் இணைந்து உருவாக்கியது. மருத்துவர் .ஜாக் நியூமன் அவர்களின் தாய்ப்பால் ஊட்ட உதவும் கையேட்டில் இருந்து உருவாக்கப்பட்டது

தூண்டிப் பாலூட்டுதல் என்பது ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் அல்ல .உலகமெங்கும் பல்வேறு சமூகங்களில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்ட ஒன்றுதான். குழந்தையைப்பெற்றெடுத்த தாய்க்குப் பால் ஊறவில்லை என்றால் பாட்டி பால் கொடுப்பது என்பது புது விஷயம் அல்ல. நம் இந்திய ,தமிழர் சமுதாயத்திலும் இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது.
இம்முறை, குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட அல்லது தத்து எடுத்த தாய்க்கு உதவியாக இருக்கும். மேலும் மூன்றாம் பாலினத்தவர்,ஒரே பாலினத்தம்பதியினர், திருமணமாகாத தனிப்பெண் எனப்பலருக்கும் குழந்தைவரத்தோடு தாய்ப்பாலூட்டும் திறனையும் வழங்குகிறது.

தூண்டிப் பாலூட்டுதல் மூலம் எவ்வளவு குறைவாக பால் கிடைத்தாலும் அது குழந்தைக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும்.. கர்ப்பம் தரிக்காமல் தாய்ப்பால் தரத் தாயின் ஒத்துழைப்பும் தீவிரமான முயற்சியும் தான்தேவை,.இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது லெனோவா மற்றும் நியூமன் ஆகியோர் குறைந்தபட்சம் 500 க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு உபயோகப்படுத்திய முறை ..உங்களுடைய குழந்தை/பாலூட்ட உதவும் ஆலோசகர்ழமகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு இம்முறையைக்கடைபிடிப்பது உங்களுக்கு நல்லது. தொடர்ந்த கண்காணிப்பு ,மருத்துவ மற்றும் தொழில்நுட்பஉதவி தேவைப்படுவதால் குழந்தை எங்கு பிறக்கிறதோ அந்த மருத்துவமனைக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் தூண்டிப்பாலூட்டும் விருப்பத்தினை தெரிவித்துவிட வேண்டும். இந்த விளக்கவுரையை பல படிகள் எடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தருவது தேவையில்லாத கேள்விகளைக் குறைக்கும். நெருங்கியவர்களின் அறிவுரைகளினால் தாய் குழம்பிப் போகாமலிருக்கலாம்


சாதாரணமாக கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் புரோஜெஸ்டிரோன் ,ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோலேக்டின் இயக்குநீர்கள் (ஹார்மோன்கள்) சுரக்கின்றன புரோஜெஸ்டிரோன் ,ஈஸ்ட்ரோஜன் கர்ப்ப ப் பையினுள்ள நஞ்சிலிருந்தும் புரோலாக்டின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்தும் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கின்றன .தாய்ப்பால் ஊட்டுவதற்கு தாயின் மார்பகங்களை புரோஜெஸ்டிரோன் ,ஈஸ்ட்ரோஜன் தயார் செய்கின்றன .பிரசவித்த பின் நஞ்சு கொடியோடு வெளியேறிவிடுவதால் புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது புரோலாக்டினுடைய அளவு அதிகமாகிறது எனவே தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கிறது

தூண்டித் தாய்ப்பாலூட்டுதல் முறையில் இயற்கை கர்ப்பத்தின் போது தாயின் உடலில் இயக்கு நீர்கள்களான் அளவினைப் போல சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்தவுடன் குழந்தைக்கு தேவையான அளவு உற்பத்தியாகிறது உற்பத்தி தொடர குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தால் அல்லது பால் கறந்து விடுதல்இரண்டும் முக்கியம்


தாய்ப்பாலூட்டுதல் நிகழ்வு ஏற்படும் போது நரம்புத் தூண்டுதல் மூலம் முன்பகுதி பிட்யூட்டரியிலிருந்து ஆக்சிடோசின் இயக்குநீர் சுரக்கிறது. அதன் மூலம் தாய்ப்பால் வெளியேற ஆரம்பிக்கிறது எவ்வளவு பால்வெளி வருகிறதோ அதை பொறுத்து தான் உற்பத்தியும் இருக்கும்.வழக்கமான மற்றும்தூண்டித் தாய்ப்பாலூட்டு தாயின் பாலிற்கி டையே வித்தியாசம் எதுவும் இல்லை .

.இந்த முறையில் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளும் அல்லது குழந்தையை வளர்க்க போகும் தாயின் மார்பகங்களை தாய்ப்பால் உற்பத்தி செய்வதற்கு தயார் செய்ய புரோஜெஸ்டிரோன் ,ஈஸ்ட்ரோஜன்அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் கருத்தடை மாத்திரைகள் என்றாலே நிறைய பேருக்கு பயம். புரோஜெஸ்டிரோன் ,ஈஸ்ட்ரோஜன் அளவு மாற்றம் என்றால் இன்னும் பயம்

சாதாரணமான கருத்தடை மாத்திரைகளில் புரோஜெஸ்டிரோன் 200 மில்லி கிராம் என்றால் நாம் உபயோகப்படுத்தும் மாத்திரைகளில் 1மில்லி கிராம் மட்டும் இருக்கும் .மிக அதிக நாட்களுக்கு தரவேண்டியதில்லை . முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாதவிலக்கு நிற்கும் வயதில் உள்ள தாய்மார்களுக்கு வேறுவிதமான மாத்திரைகளைத் தர வேண்டியிருக்கும் .உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசித்து அவைகளைப் பெற்றுக் கொள்ளவும்.கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தில் சில மாற்றங்கள் தெரியும். கனமாகும்.பெரிதானது போல் இருக்கும். லேசாக வலிக்கவும் செய்யலாம். ஆனால் பால் உற்பத்தி ஆகாது

.டாம்ப்பெரிடோன் மாத்திரை பால் உற்பத்தி செய்யக்கூடிய புரோலாக்டினை அதிகரிக்கும். கூடவே ஊறும் பாலைக் எடுக்க பால் கறக்கும் கருவியை அல்லது குழந்தையை சப்ப விடுவது மிக நல்லது .இயற்கை மருந்துகளான வெந்தயம், பால் நெருஞ்சில் சாப்பிடச்சொல்லவும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு2.5லிருந்து 3 லிட்டர் திரவஉணவம் 4 வேளை உணவும் தாய்க்கு தேவை.வெகு சீக்கிரமாக நமக்கு வெற்றி கிடைக்கும்

டாம்ப்பெரிடோன் மாத்திரை நாளொன்றுக்கு ஒரு மாத்திரை மூன்று வேளை என தரலாம் அதிகபட்சமாக பால் கொடுக்க ஆரம்பிக்கும் நாளிலிருந்து இணை உணவு சேர்க்கும் வரை தொடரலாம் .நன்கு குழந்தை பால் குடித்த ஆரம்பித்தவுடன் டாம்ப்பெரிடோன் மாத்திரை கொடுப்பதை நிறுத்துவது பற்றி தாய் முடிவெடுக்கலாம்


குழந்தையை தத்தெடுக்கும் தாய் குழந்தை பிறப்பதற்கு ஆறு மாதம் முன்னரே கருத்தடை மாத்திரைகளையும் சாப்பிட ஆரம்பிக்கவேண்டும் கூடவே டாம்ப்பெரிடோன் மாத்திரையை ஆரம்பித்து ஆலோசனையின் பேரில் படிப்படியாக அதிகப்படுத்தலாம். குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்து எடுப்பதற்கு ஆறுமாதம் முன்பு வரை பால் கறக்கும் கருவியையோ மற்ற இயற்கை மருந்துகளையோ உபயோகிக்க வேண்டாம் .

குழந்தை பிறப்பதற்கு 6 வாரத்திற்கு முன் கருத்தடை மாத்திரைகளை நிறுத்த வேண்டும் டாம்ப்பெரிடோன் மாத்திரையினை தொடர வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறைந்தபட்சம் 100 லிருந்து 150 நிமிடம் தினமும் மார்பிலிருந்து கை அல்லது கருவியினால் பால் கறக்க வேண்டும். மார்பினை அழுத்துதல், தடவுதல் மற்றும் பிசைதல் என அடுத்து தொடர்ந்து மறுபடியும் பால் கறக்கும் கருவிஅல்லது கைகளால் கறந்து விட வேண்டும் .அடிக்கடி பால் கறந்து விடுவது , பால் குடிக்கும் தடவைகளை அதிகரிப்பதை விட சுரப்பினை ஊக்குவிக்கும்

குறைந்தபட்சம் இரவு வேளையில் ஒரு முறை பால் கறந்து விட வேண்டும் ஏனெனில் இரவு நேரத்தில் 1-5 மணிக்குள் புரோலாக்டின் அதிகமாக சுரக்கும். இந்த நேரத்தில் கறந்து விடுவது பால் சுரப்பு அதிகமாக்க உதவும். எவ்வளவு முறை பால் முழுவதும் மார்பிலிருந்து எடுக்கப்படுகிறதோ அவ்வளவு பால் உற்பத்திக்கு அதிக உதவி செய்யும்

பால் உற்பத்தி ஆரம்பித்தவுடன் பால்நெருஞ்சில் மற்றும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம் . பாரம்பரிய உணவுகளான பருப்பு ,கீரை வகைகள், கால்சியம் சத்து நிறைந்த கருவாடு மீன் வகைகளையும் அசைவ உணவுகளையும் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினை எதுவுமில்லை. குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில்தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் .ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 10 லிருந்து 12 முறை பால் தரலாம் ஒவ்வொருமுறையும் 10 நிமிடமாவது பால் கொடுத்த பின் கறந்துவிட முயற்சி செய்ய வேண்டும் அது பாலின் உற்பத்தியை அதிகரிக்கும்.. அதிக நாட்கள் இல்லை குழந்தை வரப்போகிறது என்றால் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கருத்தடை மாத்திரை மற்றும் டாம்ப்பெரிடோன் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்எவ்வளவு அதிக நாட்கள் மருந்து உட்கொள்ளமுடியுமோ அவ்வளவு நல்லது

பால் கொடுக்க ஆரம்பிக்கும் போது மார்க்காம்பின் மேல் சொட்டு சொட்டாகத் தருவது அல்லது சிறுகுழாய் வழியாக மார்க்காம்பருகில் பால் வருமாறு செய்ய வேண்டும். இதன் மூலம் நன்கு கவ்விச்சப்ப பழக்க வேண்டும் .அப்புறம் வெகு சுலபமாக குழந்தைக்கு பால் குடிப்பது எப்படி என்பது புரிய ஆரம்பிக்கும். குழந்தை நன்றாகக்குடிக்கிறதா? குடித்த பின்னர் தூங்குகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும் ஒரு மார்பகத்தில் குடித்து முடிந்ததும் பசி இருந்தால் அடுத்த மார்பகத்தில் தரலாம் ஒவ்வொரு முறையும் இரண்டு பக்கமும் தர வேண்டிய அவசியமில்லை.

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading