பெரியவர்களுக்கு காமாலை என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான்.பிறந்த குழந்தைக்குக் காமாலை என்பது நாம் எப்போதாவது கேள்விப்படும் விஷயம். பெரியவர்களுக்கு வரும் காமாலைக்கும் பிறந்த குழந்தைகளுக்கு வரும் காமாலைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?என்ன காரணங்களினால் வருகிறது? இந்தக் காமாலை பிரச்சினையை உண்டு பண்ணுமா? காமாலை வராமல் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா?காமாலை வந்த பின் என்ன செய்ய வேண்டும்? மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் எப்படி குழந்தையைப் பார்த்துக் கொள்வது? எல்லாக் குழந்தைகளுக்கும் இது வருமா ?எந்தக் குழந்தைகளைக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதனை பார்ப்போம். இதனை சாதாரனக்காமாலை மற்றும் பிரச்சினையுள்ள காமாலை என இரண்டாகப் பிரிக்கலாம்.

முதலில் சாதாரணக் காமாலையை பார்ப்போம்
பிறந்த குழந்தைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேருக்கு மூன்றாவது நாளுக்குள் லேசாக துளி மஞ்சள் குழந்தையின் தோலிலும் கண்களிலும் தெரிய ஆரம்பிக்கும். நான்கு ஐந்தாவது நாளில் மேலும்அதிகமாகும்முதல் வாரம் முடிந்தவுடன் அது தானே குறைந்துவிடும் சில நேரங்களில் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் சாதாரணமாக புதிதாக எந்த ஒரு பிரச்சினையும் குழந்தை இருக்காது சில நேரங்களில் பால் குடிப்பது குறைந்து இருக்கலாம் அதிக நேரம் தூங்கிக்கொண்டிருக்கும் சிறுநீர் மஞ்சளாக வெளியே போகலாம்
சாதாரணமாக பச்சிளம் குழந்தையின் இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் சிதையும் போது பிலிருபின் நிறமிகள் உற்பத்தியாகும்.இவைதான் தோல் மற்றும் கண்களுக்கு மஞ்சள் நிறத்தை தரும் . இவை ஈரலில் கழிவாக பிரிக்கப்பட்டு மலத்தில் இந்த நிறமி வெளியேற்றப்படும். முழுப்பளுவையும் ஏற்றுக்கொள்ளும் தயார் நிலையில் குழந்தையின் ஈரல் இராது.ஆதலால் பச்சிளங்குழந்தைக்கு காமாலை ஏற்படுகிறது
பிலிருபின் நிறமிகளின் அளவு அதிகமாகி மூன்று நான்காவது நாளில் உச்சத்தைத் தொடுகிறது. பெரும்பான்மையான குழந்தைகளுக்கு எந்தச் சிகிச்சையும் கண்காணிப்பும் தேவையில்லை சில குழந்தைக்கு பிலிருபின்மிக அதிக அளவினை எட்டலாம். அதற்குரிய சிகிச்சை செய்யாவிடில் பாதிப்பினை ஏற்படுத்தும். அபூர்வமாக வலிப்பு,மூளை பாதிப்பு கூட ஏற்படலாம்.
எவ்வாறு காமாலை இருக்கிறது என்பதை அறியவேண்டும் காமாலை இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?குழந்தையின் சிறுநீரையும் மலத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் .முதல் 24 மணி நேரத்தில் காமாலை வந்தால் என்ன காரணத்திற்காக ஏற்பட்டது எனப் பார்ப்பது முக்கியம்
உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால் தொடர்ந்து நிறுத்தாமல் தரவும். குழந்தைஅதிக நேரம் தூங்கினால் எழுப்பிவிட்டு பால் தரவும் . போதுமான நீர்ச்சத்து காமாலையின் தீவிரத்தைக்குறைக்கும்
1.குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்
2.கூடப்பிறந்த சகோதர சகோதரிக்கு காமாலை இருந்து மருத்துவம் செய்திருந்தால்
3.முதல் 24 மணி நேரத்தில் காமாலை இருந்தால்
காமாலை இருக்கிறதா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
முதல் மூன்று நாட்களில் நல்ல வெளிச்சத்தில் குழந்தையை பார்க்க வேண்டும். தோலில் மஞ்சள் நிறம் இருக்கிறதா ?எனப் பார்க்க விரலை வைத்து அழுத்தினால் சுலபமாக கண்டறிய இயலும் .கூடவே கண்கள் , உள்ளங்கை , பாதம் மற்றும் பல் ஈறுகளில் மஞ்சள் தெரிகிறதா? என்பதையும் பார்க்கலாம் உங்கள் மருத்துவர் குழந்தையின் காமாலை அளவை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிவார் .எவ்வளவு பிலிருபின் அளவு அதிகரித்திருக்கிறது என்பது தெரிந்து கொள்வது மிக முக்கியம்
முதல் 24 மணி நேரத்தில் உங்கள் குழந்தைக்கு காமாலை பாதித்திருக்கிறது என்ன சந்தேகப்பட்டால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் காமாலை அளவு எவ்வளவு?வேறுஏதாவது காரணத்தினால் காமாலை ஏற்பட்டதா? என்பதை அறிய மற்ற பரிசோதனைகளும் முக்கியம்
தைராய்டு சுரப்புக் குறைவின் முதல் அறிகுறியாக கூட இது இருக்கலாம் .முதல்நாளிலேயே குழந்தைக்கு காமாலை இருந்தால் அல்லது தாயின் ரத்த வகை மற்றும் குழந்தையின் ரத்த வகைகளில் ஆர்.எச்.நெகடிவ் இருந்தாலும் அல்லது ABO சம்பந்தமான பிரச்சனை இருந்தாலும் பரிசோதனைகளை செய்துஅறியவேண்டும். அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை மாறுபடும்.

காமாலை அதிகம் உள்ள குழந்தையை அல்ட்ரா வயலட் வெளிச்சத்திற்கு கீழே படுக்க வைக்கும் போது ரத்தத்தின் நிறமிகள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் இதற்கு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது போட்டோதெரபி எனப்படும். இதில் குறிப்பிட்ட அலைவரிசையில் வெளிவரும் வெளிச்சம் மட்டுமே காமாலையை சிறுநீரில் கரையும் வண்ணம் மாற்றுகிறது. குழந்தையின் கண்களையும் பிறப்புறுப்பின் பகுதிகளையும் வெளிச்சம் படாத வண்ணம் துணியினால் மறைக்கப்பட்டிருக்கும்.தோலில் சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம். அடிக்கடி மலம் கழியலாம்.குழந்தையின் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படும். தேவையான அளவு நீர்ச்சத்து குழந்தைக்கு கிடைத்திருக்கிறதா? சிறுநீர் போகிறதா? குழந்தையின் எடை குறைகிறதா? என்பதனையும் பார்ப்பார்கள் குழந்தையை எடுக்க, அரவணைக்க, பால் தர ,இடுப்புத் துணியை மாற்ற 30நிமிடம் இடையே எடுத்துக் கொள்ளலாம் தொடர்ந்து தாய்ப்பாலை நிறுத்தாமல் தர வேண்டியிருக்கும்

பிலிரூபின் அளவு மிக அதிகமாக போய்க் கொண்டிருந்தாலும் போட்டோகிரபி க்கு பிறகும் குறையவில்லை என்றாலோ மருத்துவ சிகிச்சை அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டும் இதில் போட்டோ தெரபியின் தீவிரத்தை அதிகப்படுத்த வார்கள் மேலும் கீழுமாக அல்ட்ரா வயலெட் வெளிச்சத்தை தரக்கூடிய போட்டோ தெரபி OED விளக்குகள் உபயோகப்படுத்தப்படும் இந்த நேரங்களில் அதிக நேரம் குழந்தையை போட்டோ தெரபி தருவதிலிருந்து எடுத்து வெளியேவைத்திருக்க முடியாது . நேரடியாகத் தாய்ப்பால் கொடுப்பதை விட கறந்துஎடுத்து குழந்தைக்கு வாய் வழியாகவோ அல்லது குழாய் வழியாகவும் வரலாம் தீவிர போட்டோ தெரபி முடிந்த பின் பழையபடி தாய்ப்பாலைத் தர ஆரம்பிக்கலாம் .போட்டோ தெரபி ஆரம்பித்தவுடன் 6 மணி நேரம் கழித்து அளவு குறைகிறது என்பதைப் பார்ப்பார்கள் அதற்குப் பிறகு 12 மணிநேரத்திற்கு ஒரு முறை மறு பரிசோதனை செய்வார்கள் போட்டோ தெரபி அளவிற்குக் கீழே பிலிருபின் வந்தவுடன் சிகிச்சையும் நிறுத்திவிட்டு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை பரிசோதிப்பார்கள் இதன் மூலம் மறுபடியும் அதிகரிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்

மிக அதிகளவு காமாலை இருந்தால் குழந்தையின் உடைய ரத்தம் முழுவதும் தொப்புள்கொடி வழியாக மாற்ற வேண்டியதிருக்கும் இதன் மூலம் வெகு சுலபமாக வெகு சீக்கிரத்தில் அளவைக் குறைக்கலாம் இதற்காக குழந்தையை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் ரத்த மாற்று செய்த பின்னர் 2 மணி நேரம் கழித்து மறுபடியும் அளவினை கணக்கிட வேண்டும் சிவப்பணுக்கள் அழியக்கூடிய நோய் இருப்பின் (தாயின் ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு பொருட்கள் குழந்தையின் சிவப்புஅணுக்களைப்பாதித்தால்) நோயின் தீவிரம் மிக அதிகமாகும் .கூடவே IVIG இம்முநோகுளோபுளின் தரப்படும் இது ரத்தக் குழாய்களின் வழியே ஊசி மருந்தாக செலுத்தப்படும்
இது தவிர மற்ற மருந்துகள் ,சிகிச்சை முறைகள் பெரிதும் பலனளிக்காது .மேற்கொண்டு குழந்தைக்கு காமாலை சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
ரத்த சிவப்பனுக்கள் சிதைவிலிருந்து காமாலை ஏற்படுவதை தவிர்த்து தாய் மற்றும் குழந்தையின் இரத் ததிற்கும் வித்தியாசம் இருப்பின், நோய்த்தொற்று ,பித்தநீர் வெளிவருவதில் தடை ,,ஈரல் சம்பந்தமான பிரச்சினைகள், ரத்த அணுக்கள் உரச்சினைகள் இருப்பின் பிலிருபின் அதிகமாகும்

உங்கள் குழந்தையின் காமாலை இரண்டு மூன்று வாரத்திற்குள் குறையவில்லை என்றாலும் அல்லது மறுபடியும் அதிகரித்தாலும் வேறு பிரச்சினைகள் இருக்கிறதா என்பதனைப் பார்க்க வேண்டியது இருக்கும்குழந்தையின் சிறுநீர் மற்றும் மலம் வழக்கம்போல இருந்தால் கவலைப்பட வேண்டியது இல்லை அதற்கு பதிலாக மலம் வெளிறியோ ,சிறுநீர் நல்லெண்ணை போல் கெட்டி மஞ்சளாகவோ போனால் குழந்தையின் ஈரல் பாதிப்படைந்து இருக்கலாம். ஈரலில் அடைப்பு பித்தப்பையில் பிரச்சனைகள் என்று ஏதாவது இருக்கலாம்
நோயின் தன்மையைப்பொறுத்து சிகிச்சைமுறை மாறும்
