
குழந்தை பிறந்து சில நாட்களுக்குப்பின் கண் ஓரத்தில் மஞ்சள் நிற பூளை தேங்கி வருவதைப் பார்க்கலாம் .எவ்வளவு துடைத்தாலும் மறுபடியும் வரும். அடுத்த நாளும் தொடர்ந்து இருக்கும் கண் மருந்துகளை உபயோகப்படுத்தினால் ஐந்து நாட்கள் சரியானது போல் தோன்றும். மறுபடியும் பழைய கதைதான் .
இது எதனால் வருகிறது? நோய் தொற்றினால் தானா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதனை இப்போது பார்ப்போம் கண்ணீர்சுரப்பிகள் கண்ணீரை உற்பத்தி செய்கின்றன உற்பத்தியாகும் கண்ணீர் ஒரு வழுவழுப்பான தளத்தை தருகிறது கண்ணில் தூசி படாமல் தூசிகளை வெளித்தள்ளும் .கண் ஈரம் காயாமல் பார்த்துக் கொள்ளவும், இமைகளை திறந்து மூடவும் உதவுகிறது .

கண்ணீர் அதிகமாக வரும்போது மூக்கிற்கும் கண்ணிற்கும் இடையிலுள்ள நாளக்குழாய் வழியாக சென்று வடிந்துவிடும். இதை எப்படி தெரிந்துகொள்ளலாம் தெரியுமா? துக்க வீடுகளில் வெகுநேரம் அழுபவர்கள் கண்ணீர் பெருகி சிறிது நேரம் கழித்த பின்னர் மூக்கை சிந்தித் துடைப்பதை பார்த்திருப்போம் .குழந்தைகள் குளிக்க வைக்கும்போது கண்ணில் சோப்பும் தண்ணீரும் பட்டுவிட்டால் அழும் .பிறகு மூக்கில் தண்ணீர்போல் வரும் நமது பாட்டி தாத்தாக்கள் அதை குழந்தைக்கு சளி பிடித்து இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள்

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நடப்பதுகண்ணீர் நாளக்குழாய் வழியாக கண்ணீர் பெருகி வருவது தான் காரணம். சரி இந்த கண்ணீர் நாளக்குழாய்க்கும் குழந்தையின் கண்ணில் பூளை ஏற்படுவதற்கும் என்ன தொடர்பு ?என்பதை இனி பார்ப்போம் இயற்கையாகவே பெரும்பான்மையான குழந்தைகளுக்கு இந்த குழாய் எந்த அடைப்பும் இன்றி நல்ல முறையில் செயல்படும் ஆனால் 100 இல் 4 குழந்தைகளுக்கு கண்ணில் இருந்து மூக்குக்கு வரும் இதன் கீழ் பகுதியில் ஒரு மெல்லிய சவ்வினால் அடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் கண்ணீர் வெளியேறாமல் தேங்கும்
இதனால் கண்ணீர் சுரப்பி நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு .அந்த நோய்த்தொற்றின் காரணமாக மஞ்சள் நிற பூளை தோன்றுகிறது.இமைகள் ஒட்டிக்கொள்ளலாம்.கண் எரிச்சல்,வலி ஏற்படலாம்.
நோய்த் தொற்று சரிசெய்வதற்கு மருந்துகள் அவசியம்.கண்ணீர் நாளக்குழாயின் அடைப்பைை நீக்க மசாஜ் மிக முக்கியம் மசாஜ் எவ்வாறு செய்வது என்பது அதைவிட முக்கியம் கீழே காணப்படும் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காண்பிக்கப்பட்ட படி தொடர்ந்து மசாஜ் செய்யவேண்டும்
கண்ணீர் பையினை முதலில் அழுத்தி அதற்குப் பிறகு கீழ்நோக்கி மசாஜ் செய்யும்போது இது மிகச் சுலபமாக நீங்க ஆரம்பிக்கிறது பெரும்பான்மையான குழந்தைகளுக்கு ஒரு சில வாரங்களில் சரியாகி விடும் சில குழந்தைகளுக்கு மாதக்கணக்கில் இது தொடரலாம் தொடர்ந்து கண்ணில் பூளை கட்டியிருந்தாலும் அல்லது வீக்கம் கண்ணீர் சுரப்பி உள்ள இடத்தில் இருந்தாலும் அடைப்பு முழுவதுமாக நீங்க வில்லை என்று பொருள். காலம் தாழ்த்தாமல் அப்போது கண் மருத்துவரை பார்ப்பது நல்லது

அதிக பாதிப்பு இருப்பின் அறுவைச்சிகிச்சை கருவிகள் மூலம் மூடப்பட்டுள்ள நாளஅடைப்பு திறந்து விடுப்படும். இது அநேகமாக வெகு அபூர்வமாகத்தான் தேவைப்படுகிறது மற்றபடி பெரும்பான்மையான குழந்தைகள் மசாஜ் மூலமே சரியாகி விடுவார்கள் உங்கள் குழந்தைக்கு பிரச்சனை இருப்பின் செய்து பாருங்கள் ஒரு வாரத்திற்குள் வித்தியாசம் வரவில்லை என்றாலோ அல்லது மிக அதிகமாக இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் உங்கள் கண் மருத்துவரை அணுகுங்கள்
