childhealthtoday

childhealthwiki

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா?

1 min read

குறும்பு செய்யும் குழந்தையை கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் குழந்தையை அடிப்பது நிறைய பெற்றோர்களால் கடைபிடிக்கப்படும் ஒரு ஒழுங்கு நடவடிக்கையாகும். பெரும்பான்மையான பெற்றோர்கள் திட்டமிட்டு குழந்தையை அடிப்பதில்லை. குழந்தையின் குறும்புத்தனம் ஆத்திரத்தை தூண்டுகிறது. பெற்றோர் பொறுமையை இழக்கின்றனர். அப்போதுதான் அந்தக் கணத்தில் இது நடக்கிறது. பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வருகிறது போலவும் நிலைமையைச் சீராக்குவது போலவும் தோன்றுகிறது. பெற்றோர்களின் கோபத்தை குறைக்கிறது

பயனுள்ளது போல தோன்றினாலும் இதனால் பிற பாதிப்புகள் ஏற்படலாம்
குழந்தையை விளாசி அடித்துத் தீர்க்கும் பெற்றோர்களை கேட்டுப்பாருங்கள். மிகுந்த மன கஷ்டத்துடன் தான் கையை வைத்திருப்பார்கள். இதற்கு பதிலாக குழந்தையை கட்டுப்படுத்த வேறு வழி ஏதாவது இருக்கிறதா ?என்று நம்மிடையே கூட கேட்பார்கள்.


கோபத்தினால் நாம் குழந்தையை அடிக்கும்போது குழந்தை கற்றுக்கொள்ளும் விஷயம் இதுதான்.”உன் கோபம், எரிச்சல் எல்லை மீறிப் போகும் போது எந்த அநாகரிக முறைகளையும் கைக்கொள்ளலாம் என்பதுதான்.

குழந்தை கற்றுக்கொண்ட இந்த செய்தி அதன் வாழ்நாளில் வேறு பல சிக்கல்களுக்கு உள்ளாக்கும். நல்ல பழக்கங்களை சொல்லித் தர நினைக்கும் நாம் தவறான ஒரு பழக்கத்தினை குழந்தையின் மனதில் விதைத்து விடுகிறோம் இதுதான் அடிப்பதில் முதல் பெரிய பிரச்சினை.
2. எந்த குழந்தைக்கும் தவறு செய்த பிறகு குற்றவுணர்ச்சி ஏற்படும். அந்தக் குற்ற உணர்ச்சி இருக்கும் வரை திருப்பி அந்தத் தவறு செய்யாது. நமது அடித்தல் , குழந்தையின் தவறுக்கான தண்டனையாக மாறிவிடுகிறது. தவறு செய்த குற்ற உணர்ச்சியில் இருந்து குழந்தையை விடுவிக்கிறது. மறுபடியும் மறுபடியும் குழந்தை அதே தவறை திருப்பி திருப்பி செய்ய வழிகோலுகிறது.

இந்தக் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்ன செயல்களை செய்து பெற்றோர்களின் கோபத்தை விளையாட்டாக கிளறி விடுவார்கள் பிறகு தண்டனையைத் தாருங்கள் என்று கையை நீட்டியும் கேட்பார்கள் இது பெற்றோர்களை மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும்
3. நாம் செய்ய வேண்டுவதெல்லாம் குழந்தையுடன் அமர்ந்து பேச வேண்டும். அவர்கள் தங்கள் குற்ற உணர்ச்சியையும் நம் கோபத்தையும் சரிப்படித்துக்கொள்ள இந்த சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.பிரச்சனைகள் இல்லை என்றால் குழந்தைகளுடைய நல்ல விருப்பங்கள் ஒப்புக்கொள்ளப்படவேண்டும். ஆனால் குழந்தை செய்யும் காரியங்களின்எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். தவறான செய்கையில் இருந்து சரியான செய்கைகளுக்கு வழிநடத்த வேண்டும். கோபம் வந்தாலும் பெற்றோர்கள் அடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் குழந்தை தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த வேறு சில வழிமுறைகளையும் சொல்லித் தரலாம். இவை குழந்தைக்கு தரும் அடித்தல் தண்டனையை தவிர்க்கும்‌.

நன்றி: குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே புத்தகம்
தமிழில் எஸ் கே விக்னேஸ்வரன்
மூன்றாவது மனிதன் பதிப்பகம்
இலங்கை

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading