உத்தரப்பிரதேச மகராஜ்கங்ச் மாவட்ட மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களில் நேர்ந்த ஒரு மாதத்தை தாண்டாத 111 குழந்தைகள் மரணத்திற்கு குழந்தைகளில் உணவுக்குடலில் இருந்த நஞ்சுதான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. தாய்ப்பாலினைத்தவிர வேறு உட்கொள்ளாத இக்குழந்தைகளின் மரணத்திற்கு தாய்ப்பாலில் இருந்ததாகச்சொல்லப்பட்ட நஞ்சு தான் காரணம் என்று உறுதியானதா? என்ற கேள்வி குழந்தைகளின் மரணத்திற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது எனச் சிலவும் ,பல இதுதான் காரணம் என்று உறுதியாகசொல்லி இருந்தார்கள்.கடந்த 11 மாதத்தில் ஏற்பட்ட அனைத்து பச்சிளம் குழந்தைகளின் குடல் திசுக்கள், இரத்தம் மற்றும் குடல் உறுப்புகளின் பாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவைகளில் இருக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவு நச்சுத்தன்மைக்கு வழி வகுத்ததா என்பதையும் தாயின் உடலில் இருந்து வந்த அதன் மூலம் தான் மரணம் சம்பவித்தது என அப்போதுதான் நிரூபிக்க இயலும் . ஆனால் எந்தப்பரிசோதனையும் நடக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் இலக்னோ நகரில் நடந்த வேறு ஒரு ஆராய்ச்சியின் முடிவை இந்த சம்பவத்துடன் இணைத்துப் பொய்ச்செய்தி இந்தியா பரவியது என்ன நடந்தது? பின்னணியில் யார் இதனைத்தூண்டியிருப்பர்? இந்த நச்சுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து வருமா? என உங்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடை காண–
