ஒரு வார்த்தையில் பதில் வேண்டும் என்றால் ஆம். தேவையற்ற அதிக எடை, உடற்பருமன் உள்ள குழந்தைக்கு ஆயுள் நாட்கள் குறைவு. ஏன் எதனால் என்று தெரிந்து கொள்ள நேரம் இருப்பின் இக்காணொளியை காணுங்கள். குழந்தைகளுக்கு எடை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணங்கள்,உண்ணும் உணவு ,போதுமான உடற்பயிற்சியின்மை சரியான தூக்கம் இன்மை ஆகிவைகள் ஆகும் . எடை குறைப்பதற்கு உடனடியாகப் பலன் அளிக்கும் மந்திரமோ மாயமோ ஏதுமில்லை. தொடர்ச்சியாக உணவு பழக்கங்களி் மாற்றங்கள் மேற்கொள்வது நல்ல தொடக்கமாகும். ஏறக்குறைய அனைத்து குழந்தைகளுக்கும் போதுமான உடற்பயிற்சி கிடைப்பதில்லை. விளையாட்டு வகுப்பினைபள்ளிக்கூடங்கள் தினமும் வைப்பதில்லை .வீட்டிலோ விளையாட நேரமும் இல்லை உடற்பயிற்சியின்மை உடற்பருமனுக்கு முக்கிய காரணம். இது தவிர போதுமான உறக்கமின்மை, அதிக மின்னணுச் சாதனங்கள், எந்நேரமும் மனப்பதட்டம் என பல காரணங்கள் உடன் பருமனுக்கு ஏதுவாக அமைகின்றன. இவைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்
22;00 உங்கள் குழந்தையின் எடை அதிகமா?
01;23;00 அதிக உடல் எடையின் ஆபத்து என்ன?
02;18;15 எடை அதிகமாகக் காரணங்கள்
03;22;22 காரம் இனிப்பு தினம் தரக்கூடாதா?
04;14;00 அதிக கலோரியின் ஆபத்து
06;03;20 எடையைக்குறைக்க வழிமுறைகள்
