childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

செவித்திறன் இழப்பு

1 min read

இன்று நாம் செவித்திறன் இழப்பை பற்றி பார்ப்போம் அதன் முதற்படியாக காதின் பல்வேறு பாகங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்
நம்முடைய காது மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது புறச்செவி , நடுச்செவி,உ ட் செவி என ஒவ்வொரு பகுதியும் செவித்திறனை நாம் பெறுவதற்கு குறிப்பிட்ட செயல்களைச் செய்கின்றன.

நன்றி. சிக் கிட்ஸ்


புறச்செெ வி காதுமடலை கொண்டுள்ளது .ஒலி அலைகளைத் திரட்டவும் குறுகிய குழாய் வழியே செலுத்த உதவுகிறது.நடுச் செவியில் செவிப்பறையும் மூன்று சிறு எலும்புகளும் உள்ளன
உட்செவி கேட்பதற்கான நத்தை வடிவில் சுருள் குழாயையும் மூன்று சிறு குழாய்களையும் செவித்திறன் நரம்பையும் கொண்டுள்ளது
கேட்கும் திறனை அளிக்கும்செவித்திறன் நரம்புப் பாதையானது நத்தை வடிவ சுருள் குழாயில் இருந்து செவித்திறன் கட்டுப்பாட்டு மூளைபகுதிக்குச் செல்கிறது.


செவித்திறன் இழப்பின் இரு வகைகள்


இரண்டு வகையான செவித்திறன் இழப்புகள் உள்ளன

1.கடத்து வகை செவித்திறன் இழப்பு

இது புறச்செவி மற்றும் நடுச்செவியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும்.கடத்து வகை செவித்திறன் இழப்புஏற்பட கடினமான நிலைத்துள்ள காதுக் குரும்பி, செவிப்பறையில் துளை ,நடுச் செவியில் தொற்று சீழ் ஆகியவை சில காரணங்கள் ஆகும்,
இவ்வகை திறன் இழப்பை மருந்துகளை கொண்டோ, அறுவை சிகிச்சை மூலமாகமாகவோ குணப்படுத்தலாம்.


2. உணர்வு நரம்பு செவித்திறன் இழப்பு
இது உட்செவியில் இருக்கும் பிரச்சனைகளை அல்லது உட்செவிக்கும் மூளைக்கும் நடுவில் உள்ள நரம்புப் பிரச்சினையைக் குறிக்கும்.
இது பொதுவாக நிரந்தரமானது. மருந்துகளினாலும் அறுவை சிகிச்சைகளி னாலு ம் குணப்படுத்த முடியாதது, காது கே ட்பு கருவியை பயன்படுத்துவன் மூலம் சமாளிக்கலாம்


3.கலப்பு செவித்திறன் இழப்பு
இது கடத்து வகை செவித்திறன் இழப்பும். நரம்பு செவித்திறன் ஒரே நேரத்தில் ஏற்படுவதாகும்.
உட்செவியுடன் புறச்செவியில் இருக்கும் பிரச்சனை அல்லது உட்செவியுடன் நடுச்செவி அல்லது எல்லா பாகங்களையும் உள்ளட க்கிய பிரச்சனை.

செவித்திறன் இழப்பின் அளவு டெசிபெல் அளவீட்டால் அளவிடப்படுகிறது.
மைனஸ் பத்திலிருந்து பதினைந்து டெசிபல்- சரியான செவித்திறன்
16 லிருந்து 25டெசிபல்
குறைந்த அளவு செவித்திறன் இழப்புு-
26 லிருந்து 40 டெசிபல்
இளநிலை செவித்திறன் இழப்பு-
41 லிருந்து 55 டெசிபல்
மிதமான செவித்திறன் இழப்பு-
56 இல் இருந்து 70 டெசிபெல்
மிகுநிலைசெவித்திறன் இழப்பு-
71 லிருந்து 90 டெசிபல்
மிகையான செவித்திறன் இழப்பு-
90க்கு மேல்-ஆழ்ந்த செவித்திறன் இழப்பு


பொதுவான சில காரணங்கள்
செவித் தொற்று , குடும்ப மரபுவழி நிகழ்வு, காயம் ,விபத்து ,அடிபடுதல் மூலமாக காதுப் பறைகளில் காயம் ஏற்படுவதால்,
குழந்தை பிறக்கும் முன்பும் ,பிறக்கும் போதும் ,பிறப்பிற்குப் பிறகு ஏற்படும் நோய்த்தொற்றுகள்
கொ ண்டை ஊசி ,பென்சில் முனை, கற்கள். தீக்குச்சிகள் போன்றவற்றை காதில் செருகுவது
காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய குறிப்பிட்ட மருந்துகளைப் பயன்படுத்துதல்
அறிய முடியாத சில காரணங்களால்
நீண்ட காலம் உரத்த இரைச்சலை கேட்டுக்கொண்டு இருப்பதன் மூலம் செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது தொழிற்சாலை இரைச்சல் உரத்த போக்குவரத்து சத்தம் திடீரென்று காதில் விழுந்து பெரும் சத்தம், துப்பாக்கி சத்தம் ,வெடிகுண்டு ச்சத்தம்


நன்றி காதுகேளாமை விழிப்புணர்வுக் கையேடு

ஈரோடு காது பரிசோதனை மற்றும் பேச்சு பயிற்சி மையம்;

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading