childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையை தூங்க வைக்க தொட்டில் தூளி நல்லா? படுக்கைநல்லதா?

1 min read
தொட்டில் கட்டி ஆட்டுவது தான் சிறந்த பழக்கமா? ஏன் குழந்தையை மெத்தையிலோ அல்லது தரையிலோ படுக்கக் கூடாதா?

தொட்டில் கட்டி குழந்தைகளை ஆட்டி தூங்க வைப்பது நமது சாதாரண பழக்கம் .தூங்காத குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி தலை கிறுகிறுக்க தூங்க வைப்பது தான் சரியானது என்று சொல்பவர்கள் ஒருபுறம். மற்றொரு புறமோ தொட்டில் கட்டுவது தவறு .அதன்மூலம் ஆபத்துக்கள் விளையலாம் .ஏமாந்து குழந்தை தொட்டிலில் இருக்கிக் கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அவ்வாறு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன உலகம் முழுவதும் இவ்வாறு நடந்து இருக்கிறது என்று சொல்பவர்களும் அதிகம்

நன்றி செய்தித்தாள்கள்


இப்போது தொட்டில் கட்டி ஆட்டுவது தான் சிறந்த பழக்கமா? ஏன் குழந்தையை மெத்தையிலோ அல்லது தரையிலோ படுக்கக் கூடாதா?என்பதைப்பற்றி பார்ப்போம்.
முதலில் குழந்தையை தூங்க வைக்க எப்படி,எங்கு படுக்க வைக்க வேண்டும் என்பதையும் ஆராய்வோம்.

நன்றி தினமலர்


பல்லாண்டு காலமாக இந்தியாவில் குழந்தையைத் தொட்டிலில்படுக்க வைப்பது வழக்கமாக இருந்தது வருகிறது. இந்தப் பழக்கம் கோபால் பல்பொடி கிடைக்கும் இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட தூரக்கிழக்கு நாடுகளிலும் இருப்பது தொட்டில் பிரச்சனைகளை சொல்லும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.

ஆனால் மேலை நாடுகளில் குழந்தையை மரத்தொட்டில் அல்லது தனியே படுக்கையில் போட்டு படுக்க வைப்பது எப்படியோ வேரூன்றிவிட்டது .

நன்றி கூகுள்

அதுவும் சில இடங்களில் நேராகவும் சில இடங்களில் குப்புறப் போட்டு படுக்க வைக்கவும் செய்ய ஆரம்பித்தனர்.
(இந்த மாதிரி தலைகீழாச் செய்வதில் முதலிடம் அமெரிக்கர்களுக்கு தான். அவர்கள் தான் முதலில் இதை ஆதரித்து உலகம் முழுவதும் பரப்பினர்) மறுபடியும் சில காலத்திற்குப் பிறகு இது தவறு யாரும் செய்யக்கூடாது என்று அவர்கள் தான் எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்தனர்.ஏனெனில் குப்புறப் படுக்க வைக்கப்பட்டகுழந்தைகளுடைய மரண விகிதம் குழந்தை இறப்பு நோயினால் அதிகமாவதை அறிந்து குட்டிக்கரணம் போட்டனர்.
மறுபடியும் பழைய கதையாக மல்லாக்கப் படுத்து தான் சிறந்தது. படுக்க வைக்கும்போது அருகில் பருத்தியினாலான ஒரு மிருதுவான துணியினை அருகில் வைக்கவேண்டும். குழந்தைக்கு மூச்சுத் திணற வண்ணம் மென்மையான அல்லது புசுபுசுவென்று உள்ள பொம்மைகள் கூடாது. என எல்லாருக்கும் அறிவுரை சொல்லிவிட்டனர்.
குழந்தை தானாகவே குப்புற விழும் வரை குப்புற படுக்க வைக்க கூடாது என்று மிகப்பெரிய குழந்தைகள் நல மருத்துவர் நிறுவனமான அமெரிக்க குழந்தை நல மருத்துவ சங்கம் அறிவிக்கை வெளியிட்டது உலகிலுள்ள மற்ற முன்னேறிய நாடுகளும் அதனை ஏற்றுக்கொண்டனர்
(குப்புற விழும்வரை குப்புறப்படுக்க வைக்க கூடாது என்பது நமது பண்பாட்டில் ஒரு முக்கிய கருத்தாக இருந்து வருகிறது). குப்புற விழும் குழந்தை பால் கக்கும் .புறை ஏற வாய்ப்பு உண்டு.எனவே தலை நின்ற பின் தானாகவே குப்புற விழும் வரை குப்புறப் படுக்க வைக்க கூடாது என்பது நமது முன்னோர்களின் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி கண்டுபிடிப்பு
“தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும்”என ஆரம்பித்த பழமொழிகளிருந்து” நாகரிகத்தின் தொட்டில் “ஆக நமது தமிழ் கலாச்சாரம் இருக்கிறது என்று சொல்லும்வரை தமிழகத்திலும் தமிழிலும் தொட்டில் என்ற வார்த்தை வேரூன்றிவிட்டது .
குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைப்பது தான் மிகச் சிறந்தது அதன்மூலம் குழந்தைக்கு தலையின் வடிவம் ஒழுங்காக இருக்கும் .கோணயாக,, தட்டையாக என குழந்தையின் தலை இருந்தாலும் தூளியில் போட்டால் வட்ட வடிவமாக வந்துவிடும் என்று சொல்லும் பாட்டிகள் அதிகம்.(இவை அனைத்தும் பாரம்பரியத்தைப்பொருத்தது என்ற அறிவியல் தெளிவு வந்தது பிற்காலத்தில் தான்)
எதற்காக துளி உபயோகப்படுத்தி இருந்தார்கள் என்பதனை ஆராய்ந்து பார்ப்போம் பண்டைக்காலத்தில் காடுகளில் இருந்து நாடுகளில் வாழ ஆரம்பிக்கும் வரை ஒவ்வொரு இடத்திலும் விஷ பூச்சிகள் பாம்புகள் மிருகங்கள் இவைகளின் தொந்தரவு இருந்தது.

1.தரையில் படுக்க வைக்கும் குழந்தையின் மேல் விஷப்பூச்சிகள் தேன் மற்றும் பாம்புகள் இவர்களின் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் 2.குழந்தை புரண்டு வேறு இடத்திற்கு போகாமல் தடுக்கவும்

3.தாய் அணைத்ததுபோல் கதகதப்பை தரவும்

4.ஆடுவதன் மூலம் தலையிலுள்ள அரைவட்ட குழாய்கள் கலங்கி அரை மயக்க நிலையில் சுலபமாக குழந்தையை தூங்க வைக்கவும்

5.தொட்டிலுக்கு என்று தனி செலவு எதுவும் இல்லாமல்

அனேகமாக இவை உபயோகப்படுத்தப்பட்டு இருக்கலாம்.உபயோகப்படுத்திய தாயின் சேலை அல்லது மற்ற துணிகள் பயனாகின. சமுதாயத்தில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் குழந்தை வளர்ப்பிற்கு உதவிசெய்ய வீட்டிலும் அதிகம் பேர் இருந்தார்கள்

குடும்பமாக கூட்டமாக வாழும் சமுதாயத்தில் ஒரு குழந்தையை ஆட்டிவிட பாட்டு பாட விளையாட ஒரே குடும்பத்திலேயே நிறைய குழந்தைகள் இருந்தனர்.


ஆணும் பெண்ணுமாக வேலை செய்யும் வயல்களிலும் கலைகளிலும் இடங்களிலும் நிழல் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளில் தாயின் வாசனை மீன் துள்ள சேலையை கட்டி துளியாக போட்டு குழந்தையை படுக்க வைத்து ஆட்டி விடும்போது தூங்குவதற்கும் தூங்கும் குழந்தையின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு வேலை செய்வதற்கும் தாய்க்கும் எளிதாக இருந்தது. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவி செய்யக்கூடிய தாலாட்டுப் பாடல்கள்

“ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா… கண்ணீரு பெருக்குதடா…
யாரடிச்சி நீ அழுறா… கண்ணே நீ கண்ணுறங்கு….”தாலாட்டு-2“ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!

நன்றி கூகுள்

என தாய் பாடிக்கொண்டு ஆட்டி விட அந்த காலத்து குழந்தைகள் அரைவட்டக் குழாய்களின் கலக்கத்தில் மயக்கத்தோடும் தாயின் வாசனை நுகர்வின் நேசத்தோடு இறங்கி உறங்கின என்பது உண்மை
இன்றைய சூழலுக்கு வருவோம்.
கூட்டுக்குடும்பங்கள் குறைந்து விட்டன ஒரு வீட்டுக்கு ஒரு குழந்தைதான் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற வேண்டும் அப்போதுதான் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியும் தாத்தாவோ பாட்டியோ குழந்தையை வந்து பார்த்து வழங்குவது என்பது சிரமமான காரியம் இந்த சூழ்நிலையில் தாயின் வீட்டில் குழந்தை இருக்கும் போது தொட்டிலை போட்டு ஆட்டிவிட்டு பழகி விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம் அதிகபட்சம் 6 மாதம் விடுமுறை கழித்து தன் வீட்டிற்கு வரும்போது தொட்டிலில் தான் தூங்கி பழகிவிட்ட குழந்தையோடு வருகிறாள்.
சிலகாலம் அம்மாபாட்டி உடன் இருக்க தொட்டில் ஆடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை வேலைக்கு சென்று வரும் தந்தை தூங்கும் போது இரவு குழந்தை சினுங்கி விழித்து அழ ஆரம்பிக்கிறது ஒரு நிமிஷம் ஆட்டி விடுங்களேன் என தாய் கேட்க ஆரம்பிக்கும் புகைச்சல். உனக்கென்ன சொல்லிவிட்டாய்!ஆட்டி விட்ட நான் தூக்கம் கலைத்தால் நாளைக்கு என் அலுவலகத்தில் எப்படி வேலை செய்வது? என தந்தை சினுங்க ஆரம்பிக்கும் மூன்றாம் உலகப்போர்
எனக்கு மட்டும் அலுவலகம் இல்லையா? குழந்தை உங்களுடைய குழந்தையும் தானே ஏன் உதவி செய்ய மறுக்கிறீர்கள்? எப்போதும் பெண்கள் தான் சிரமப்பட வேண்டுமா? என்ன போராட்டம் வெடிக்கும்(. நிறைய நேரங்களில் மருத்துவ ஆலோசனையுடன் இதை தவிர்க்க குடும்ப ஆலோசனையும் தந்திருக்கிறேன்)


நன்றி கூகுள்

பண்டைக் காலத்தில் இருந்த சூழ்நிலைகள் இப்போது இல்லை நிறையப்பேருக்கு ஓரளவு போதுமான வாழும் இடம் உள்ளது (சுதந்திரம் கிடைத்து 74 ஆண்டுகளுக்குப் பிறகும் சிலருக்கு வாழ ஒரு இடமுமில்லாத சிரமமும் உள்ளது.)
இவர்கள் குழந்தையைப் படுக்க வைக்க மேலே சொன்ன காரணங்களால் துணியையோ தொட்டிலை ஒரு தேட வேண்டியது இல்லை. தாயின் அருகிலேயே தாய் படுக்கும் இடத்திலேயே குழந்தையை படுக்க வைக்கலாம் இவ்வாறு ஒரே மெத்தையில் குழந்தையை படுக்க வைப்பது தாய்ப்பாலூட்டுதலை இரண்டு வயது அல்லது அதற்கு மேலோ தொடர உதவும். குழந்தையை படுக்க வைக்க சாதாரண மரக்கட்டில் கயிற்றுக் கட்டில் அல்லது நாடாக் கட்டில்களை பயன்படுத்தலாம் தரையில் படுக்க வைக்கும்போது பாய் மெத்தைகளில் படுக்க வைக்கலாம் தேள் பாம்பு போன்ற விஷ கிருமிகள் வராமல் தடுக்க வீட்டைச்சுற்றி சுத்தமாக வைத்துவீட்டிலும் சுகாதாரத்தையும் கடைபிடிக்கலாம்
தொட்டில்களில் தனியே படுக்க வைக்கும்போது குழந்தையை தூங்க வைக்க தினம் தினம் ஆட்டிவிடும் நேரம் அதிகமாகிக் கொண்டே போகும்

உடல்நிலை சரியில்லா சிறிய குழந்தைகள் மருந்துகளை வாந்தி எடுத்தால் புரை ஏறி மூச்சு நிற்கும் வாய்ப்பும் உண்டு. குப்புற விழுந்து மறுபுறம் திரும்ப முடியவில்லை எனில் மூச்சடுத்து விடுத்.இந்தக் குழந்தைகள் காரணமின்றி இறந்து போகும் அபாயமும் உண்டு. வயதில் சிறிது பெரிய குழந்தைகள் கயிற்றில் தானே ஆடி கொள்ளும்போது கயிறு கழுத்தை சுற்றி இறுக்கி குழந்தை உயிரிழந்த சம்பவங்களையும் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருக்கிறோம் என்னதான் கழுத்தி னை சுருக்காமல் இருக்க நடுவிலே

ஒரு மரக்கட்டையை வைத்திருந்தாலும் விளையாடும் குழந்தைகள் அதனை எடுத்துவிட்டு ஆடுவதற்கும் அல்லது அது விலகிப் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். எதற்காக இவ்வளவு சிரமப்பட வேண்டும்? தூளியில் போடுவதை விட பக்கத்தில் படுக்க வைத்து அணைத்து தூங்கும் போது குழந்தைக்கும் தாய்க்கும்நல்ல தூக்கம் வரும். தாய்ப்பால் தொடர்ந்து தர ஊட்டமும் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் ஆபத்தும் வாராது அடிக்கடி குழந்தையை தாய் பார்த்துக் கொள்ளலாம்.


வசதியுள்ளவர்கள் தனித் தொட்டியில் வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டால் வேண்டாம்.அருகில் படுக்க வைத்துக் கொள்ளுங்கள் அதுதான் நல்லது குழந்தையின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என சொல்லவும். இப்போது உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும் குழந்தை தூங்குவதற்கு தனியாக எந்த ஒரு விஷயமும் வேண்டியதில்லை. குழந்தை தூங்கப் போகும் இடம் அமைதியாக இருக்கவேண்டும் அதிக ஒலி இருக்கக்கூடாது விளக்கு வெளிச்சம் குறைவாக இருக்க வேண்டும் தூங்கும் நேரத்திற்கு முன் மின்னணு சாதனங்கள் உபயோகித்தல் கூடாது மாலை வேளையில் குழந்தை ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்க வேண்டும் விளையாடி வந்த பின் குழந்தையை வெந்நீரில் குளிக்க வைக்கவும் நேரத்திலேயே உணவை தரவும் சூரியன் மறைந்த பிறகு எவ்வளவு எவ்வளவு நேரம் வயதுக்கு ஏற்றபடி குழந்தை தூங்குகிறதோ? அவ்வளவு நல்ல உடல் சீரணம் இருக்கும் .குழந்தையின் வளர்ச்சியும் வளர்ச்சிக்கு தேவையான ஊக்க நீர்களும் சுரக்கும்.
யார் ஆட்டுவது என்ற பிரச்சனை இல்லாததால் குடும்பத்தில் அமைதி நிலவும் சண்டைகள் குறையும் இல்லற வாழ்வு இனிதே இருக்கும். அருகில் படுக்க வைப்பது குழந்தைக்கும் நல்லது குடும்பத்திற்கு நல்லது

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading