childhealthtoday

childhealthwiki

குழந்தையின் செவித்திறனை எப்படி பரிசோதிப்பது?

1 min read

சரியாக காது கேட்கும் திறன் உள்ள குழந்தை கீழ்கண்டவற்றை செய்யும்:
உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ப குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை செய்கிறதா? என்பதை பரிசோதிக்கவும். செயல்களை சரியாக செய்யவில்லை என்றாலும் , செய்வதில் தடுமாற்றம் தாமதம் இருந்தாலோ உங்கள் குழந்தையின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்


முதல் மூன்று மாதங்கள்.
மிக அதிக ஒலிக்கு குழந்தை திடுக்கிடும் .வேகமாகக் கண் சிமிட்டும் விழிக்கும் அல்லது ஆரம்பிக்கும் அல்லது அழுவதை நிறுத்தம். குழந்தையின் எதிர்வினைகள்

மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்.
தாயின் குரலை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் பெற்றிருக்கும் அல்லது தாயின் குரல் கேட்கும் திசையை நோக்கி தலையைத் திருப்பும் புதிய ஒலிகளுக்கு தன்னுடைய ஆர்வத்தை காண்பிக்கும்


6 முதல் 9 மாதங்கள்
உங்கள் குழந்தை தன்னுடைய மழலை பேச்சைத் தொடங்க வேண்டும் .பொம்மைகள் மீது ஆர்வம் காட்ட வேண்டும்.


9-ல் இருந்து 12 மாதங்கள்
தன்னுடைய பெயர் அழைக்கப்படும் போது அதற்கேற்ப செயல்பட வேண்டும்.தன் சொல்லை பேசவேண்டும்
”வா” டாட்டா” அல்லது ”பை ,பை” போன்ற சிறிய சொற்களைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்

12லிருந்து 18 மாதங்கள்
‘மாமா ‘அப்பா’ போன்ற சிறிய சொற்களைப் பேசத் தொடங்கும்
கேட்கும் சொற்களைத் திருப்பி சொல்ல முயற்சிக்கும்

18 இருந்து 24 மாதங்கள்
”மூக்கைத் தொடு’ ”உன்னுடைய வயிற்றை காட்டு” போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
இரண்டு ,மூன்று சிறிய சொற்கள் உள்ள வாக்கியங்களை பேசத் தொடங்கும் .உ. ம்.”கையை எடு’ தலையைஅசைத்துக் காட்டு
இந்த வயதுக்கு ஏற்ப முடியவில்லை என்றாலோ காலதாமதம் ஆனாலோ காது மூக்கு தொண்டை மருத்துவர் மற்றும் செவித்திறன் வல்லுனரிடம் செவியின் திறனை பரிசோதிக்கவும்

குழந்தைகளுக்கு உள்ள செவித்திறன் இழப்பை கண்டுபிடிக்க
செவித்திறன் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்


செவித்திறன் கண்டறியும் கருவி ஆடியோ மீட்டர் எனப்படும் இந்த பரிசோதனை கருவி ஒலி நுழையாத அறையில் வைத்து செய்யப்படும் .செவித்திறன் கண்டறிய பரிசோதனை செய்யும் போது எந்த வலியும் இருக்காது .விரைவாக செய்து விடலாம் இதன்மூலம் செவித்திறன் பாதிப்பை துல்லியமாக கணக்கிட முடியும். இந்த சோதனையின் மூலம் செவித்திறன் கோளாறு நரம்பு பாதிப்பினால் ஏற்பட்டதா? அல்லது எலும்பு மற்றும் காதின் செவிப்பறையில் பாதிப்பினால்ஏற்பட்டதா? என கண்டறிய முடியும்.
காதில் எந்த இடத்தில் மற்றும் எந்த அளவுக்கு குறைபாடு உள்ளதோ அதை பொருத்துதான் அதனைச் சரிசெய்ய இயலும் புறச்செ வி அல்லது நடுச்செவியில் பிரச்சனை இருந்தால் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் காது மூக்கு தொண்டை மருத்துவர், சரி செய்வார்.
மருந்து அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இல்லாவிட்டால் அல்லது கேட்கும் குறைபாடுகள் உட்செவியில் இருந்தால் செவிக்கருவிகள், கேள்வித் திறன் உதவிக் கருவிகள், நத்தை வடிவ சுருள் குழாய் கருவி பயன்படுத்துதல் உதவும்.
ஒருவேளை பிறவியிலேயே செவித்திறன் இழப்பு இருந்தால் அந்த குழந்தைகளுக்கு பொருத்தமான செவிக் கருவிகளின் உதவியுடன் கேள்வி மற்றும் பேச்சுமொழி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்


செவித்திறன் பரிசோதனை ஹைரிஸ்க் ரெஜிிஸ்டர் கேட்கும் திறன் இழப்பு ஏற்படுத்தும் காரணிகளை கொண்ட அட்டவணை(HRR) மற்் றும் ஓட்டோ அக்வாஸ்டிக் எமிஷன் (OAE)
3. உட் செவியிலுள்ள உயிர் செ ல்களின் செயல்களை கண்டுபிடிக்கும் கருவி(AABR)
4.புறச்செவியிலிருந்து மூளைத்தண்டு வரை ஏதேனும் பாகத்தில் ஏற்படுகின்ற செவித்திறன் அளவைக் கண்டுபிடிக்கும் இயந்திரம் மற்றும் பிஹேவியர் அப்சர்வேஷன் ஆடியோ மெட்ரி(BOA)
5. உரத்த ஒலிக்கு குழந்தையின் நடத்தையின் மூலம் செவித்திறனை பரிசோதித்தல்


செவித்திறன் இழப்பின் சா தா ரணஅறிகுறிகள்
1.கேட்பதில் சிரமம்
2.திரும்ப சொல்லுமாறு கேட்டல்
3.உரையாடலினை ப் புரிந்துகொள்வதில் சிரமம். இரைச்சலில் இருக்கும்போது பேச்சைப் புரிந்து கொள்வதில் சிரமம்
4.காது வலி அல்லது காதில் சீழ் வடிதல்
5.மணி ஒலி அல்லது தேனீக்கள் ரீங்காரமிடும் சத்தம் போல் காதில் கேட்டல்
6.தன்னை சுற்றியுள்ள மக்கள் தெளிவாகப் பேசவில்லை என்ற உணர்வு
7.ஒலிவரும் திசையை கண்டுபிடிப்பதில் சிரமம்
8.தலைச்சுற்றல் மற்றும் சமநிலை பிரச்சனைகள்


செவித்திறன் இழப்பை தடுக்க என்ன செய்யலாம்?


1.குறிப்பிட்ட நோய்த் தொற்றுக்களை தடுக்க கூடிய தடுப்பூசிகள் உதாரணமாக ஹிப்,மற் றும்பி.சி.வி
2.இரைச்சலான சூழலில் செவித்திறனை பாதுகாக்கும் கருவிகளை பயன்படுத்துதல்
3.மூக்கு தொண்டை மற்றும் காது ஏற்படும் நோய்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை
4.நீச்சல் அடிக்கும் போதும் குளிக்கும் போதும் காதிலும் நீரோ எண்ணையோ புகாமல் பார்த்துக் கொள்ளுதல்
5.காதுகளை சுத்தம் செய்ய கொண்டை ஊசி தீக்குச்சி போன்ற கூறிய பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல்


நன்றி காதுகேளாமை விழிப்புணர்வுக் கையேடு .ஈரோடு காது பரிசோதனை மற்றும் பேச்சு பயிற்சி மையம்;

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading