childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

உங்கள் குழந்தை கல்,மண்சாப்பிடுகிறதா?

1 min read

ஒரு வயது தாண்டிய சில  குழந்தைகள் உணவு கொடுக்கிற போது  சாப்பிட மாட்டாங்க ஆனால்  சுவரில் இருக்கிற சுண்ணாம்பு,தரையில் கிடக்கும் பேப்பர் ,பென்சில்,  குப்பை  இதை டபக்குனு எடுத்து  வாயில போட்டுப்பாங்க.அப்புறம் உப்பு ,சக்கரை, மண்  குளிக்கப்போன சோப் னு  பலவித வேறுபட்ட பொருட்களையும் விடமாட்டாங்க. வேண்டாம்னு தடுத்தம்னா  ஒரே அழுகையா இருக்கும்

eating-dirt

இந்த குழந்தைகளுக்கு சத்துக் குறைச்சல் அப்படினு எல்லாரும் முடிவு செஞ்சு சத்துமருந்து வேணும் அப்படின்னு மருத்துவரை பார்ப்பாங்க. மருத்துவர் முதல் வேலையா பூச்சிமருந்து சாப்பிட்டாச்சா  கேட்பார் .அதுக்கப்புறம் சத்து குறைச்சலா ? என ப்  பார்ப்பார். சாப்பிடும் உணவுகள் எவை என கேட்டறிவார்.ஒரு குறிப்பிட்ட உணவை மட்டும் அதிகமாக குழந்தை சாப்பிடும்.சில குழந்தைகள் இனிப்பு உப்பு மட்டும் சாப்பிடும்  அப்படிங்கிற மாதிரி ஏதாவது குணம் இருக்கா இதெல்லாம் கேட்பார் ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்குன்னு? பார்க்க சொல்வார்

சுவரை சுரண்டி சாப்பிட்டால் கால்சியம் சத்துக் குறைச்சல் அப்படிங்கறது நம்ம மக்களின் நம்பிக்கை. அது உண்மையல்ல.  கால்சியம் சத்து ,அல்கலைன் பாஸ்பரஸ் ரத்தத்தில் எவ்வளவு இருக்கிறது பார்ப்பாங்க அதுக்கப்புறம் உணவு பழக்கத்தை பற்றி கேட்ட பின்னர்தான் என்ன காரணத்தினாலோ சத்துக் குறைச்சல் ஏற்பட்டது அப்படிங்கறது புரியும். இந்தக் குழந்தைகள் எதையுமே சாப்பிடாமல் வெறும் பால் மட்டும் குடிச்சிட்டு இருக்கும் .இரும்பு சத்து உள்ள கீரை காய்கறிகள் சிறுதானியங்கள் ஈரல் கிடைக்கவே கிடையாது

 

white-dirt-1

நொறுக்குத்தீனி மட்டும் வாய் நிறைய சாப்பிடும். இதுல வேற ,பிஸ்கட் முறுக்கு மிக்சர் ஊட்ல செஞ்சது.   முறுக்கு மிக்சர் போண்டா பஜ்ஜி காரச்சேவு இனிப்பு பணியாரம்  மைசூர்பாகு ஜோரா செய்வாங்க வீட்ல என பெருமையா சொல்லுவாங்க வீட்ல செஞ்சாலும் கடையில் வாங்கினாலும் எண்ணெயில் அதிக நேரம் பொரித்தது, நெய் சர்க்கரை அதிகம் சேர்ந்தது, உப்பு புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்டது. மாவுப்பொருளினால் ஆன இனிப்பு என அனைத்துமே  வெறும் வெற்றுக் கலோரிகள் தான்.எதையுமே கடையில் வாங்குவது இல்லைங்க என்றாலும் உடலுக்கு தேவையான சத்துக்களை தராது என்பது அவர்களுக்கு  புரியவதில்லை

pica
இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப் பால்.. வீட்டிலேயே மாடுஇருக்குங்க இல்லேன்னா பக்கத்துல   பால் வாங்கி வந்து தண்ணி ஊத்தாம காய்ச்சி அரை லிட்டர் இருந்து முக்கால் லிட்டர் கொடுப்போம் என சொல்வாங்க

 

கீரை எவ்வளவு கொடுத்தீங்க ?அப்படின்னு கேட்டா வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாலில் இருக்கும் கால்சியம் விட  ரத்த சோகையை ஊக்குவிக்கிறது கீரையில் இருக்கும் கால்சியம் உடலில் சேர்வது குறைவாக இருந்தாலும்  அதிகமாக உட்கொண்டால் தேவையை பூர்த்தி செய்யும் ராகி மிகச்சிறந்த கால்சியம் இரும்புச் சத்து தரும் உணவு மீன் கருவாடு வெந்தயம் ,எள் ஆகியவை ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியவை. முளைக்கட்டிய பயிறு தானியங்கள்,வறுத்து அரைத்த கொட்டைகள் விதைகள் தாது உப்புகள் தரும். வீட்டு உணவினை அனைத்து சத்துக்களும் கிடைக்கும்படி தந்தாலே போதும்.கீரை, காய், மற்றும் பழங்கள் வைட்டமின் தாதுப் பொருட்களைத் தந்து விடும்

குடல் புழு சிகிச்சை, வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து மருந்துகள் தரப்படும்.உணவினை ஊட்டச்சத்து இருக்கும்படி மாற்றித் தர வேண்டும்காலணி அணிந்து செல்ல வேண்டும்.உணவுத்தயாரிப்பினை மாற்றி ருசிக்க செய்ய வேண்டும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading