childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

அழும் குழந்தைக்கு கிரைப் வாட்டரைத் தரலாமா?

1 min read

51dcdbf+YELஅழும் குழந்தைக்கு கிரைப் வாட்டர தரலாமா?
குழந்தை அழுதுச்சின்னா உடனே என்ன தரலாம்? அப்படின்னு ஆலோசனை சொல்ல எக்கச்சக்கமான பேர் கிளம்பிடுவாங்க! உங்க அம்மா சாப்பிட்ட சாப்பாடு சேரலை,! குழந்தைக்கு வயிறு ஏதோ சங்கடப்படுத்துது! வயிறு உப்பி இருக்கு!. கிரைப் வாட்டர குடுங்க இது காத்து போயிருச்சு கொஞ்சம் நீவி விட்டா சரியாப் போயிடும் இப்படி எக்கச்சக்கமான ஆலோசனைகள் இலவசமாக கிடைக்கும் குழந்தைக்கு கிரைப் வாட்டர் தேவையா? என்பதைப் பார்ப்போம்.நம்ம ஊருல்ல நிறைய பேரில் விக்கிறது

அதுக்கு முன்னாடி இந்த கிரைப் வாட்டர் என்கிறது எப்ப வந்துச்சு ?உலகம் முழுசும் எப்படி பரவுச்சு? அதுல என்ன தான் இருக்குது ?எதனால ஜனங்க அதைத் தொடர்ந்து உபயோகப் படுத்தினார்கள் ?அப்படிங்கறததைப் பாப்போம்

1951 இல் வில்லியம் உட்வார்டு அமெரிக்காவில் இருந்து லண்டன் வந்து மருந்து கடையை ஆரம்பிச்சாரு அந்த காலத்துல மருந்து கடையில் மருந்து வாங்கிச்சாப்பிடறது தான் மக்களுக்கு வழக்கம். அவரு நல்ல ராசியான மருந்து கடைக்காரர்! அவரு குடுத்த மருந்தைச்சாப்பிட்டா ஒரு வேளைல சரியா போயிடும் அப்படின்னு ஒரே கூட்டம். அவருடைய மருந்து தயாரிப்பில் முக்கியமானது இந்த கிரைப் வாட்டர் பொதுமக்களுக்கு எல்லாம் அவுன்சு கணக்கிலும் மருத்துவமனைகளுக்கு காலன் கணக்கிலும் அவர் விற்று பிரபலமடைந்தார்.

1850 -1860 வரைக்கும் நீர் சேர்ந்த தாழ்ந்த நிலப் பகுதிகளில் ஒரு வகையான காய்ச்சல் அதிகமாக இருந்தது. அது மலேரியா கொசுவினால பரவுகிறது அப்போ யாருக்கும் தெரியல. இந்த காய்ச்சலுக்கு நாட்டிங்காம் பகுதியிலிருந்த டாக்டர்கள் ஒரு மருந்து கஷாயத்தை உபயோகிச்சாங்க. அந்த மருந்து கஷாயத்தை ரொம்ப அழுதுட்டு இருக்கிற குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் அழுகைகுறையுது என்பது தெரிந்தது வில்லியம் உட்வார்டு அங்கிருந்து அந்தக் கசாயத்தின் தயாரிப்பைப் தெரிஞ்சுட்டாரு.
. கிரைப் வாட்டர் அப்படினு ஏன் பெயர் வந்தது? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வயிற்றுப்போக்கிற்கு வாட்டரி கிரைப்ஸ் என்ற பேரு இருந்துச்சு அதனால இந்தப் பெயரை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் அந்த லேபில் இருக்கிற ஹெர்குலிஸ் குழந்தை படத்தை ஜோஷுவா ரெனால்ட்ஸ் வரைஞ்சார் அந்தப் படத்தை பார்த்தால் தன்னை கொல்ல அனுப்பப்பட்ட இரண்டு பாம்புகளை நெறுச்சுகிட்டு இருக்கிறமாதிரி வரையப்பட்டிருக்கும்.இன்னிக்கு வரைக்கும் அதே படம்.(எவ்வளவு செலவு மிச்சம்)
அவருக்கு அப்புறம் அவருடைய மகன் தன்னுடைய திறமையினால் விற்பனையை அதிகரித்தார். உலகையே ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பெண்கள் மூலமாக இது பரவ ஆரம்பித்தது

woodwards-ttkcpd-banner1
எங்க பாட்டி எனக்கு சொன்னாங்க! எங்க அம்மா எனக்கு ! எனற வார்த்தைகளை அப்போ இருந்து தொடர்ந்து விளம்பரத்தில் உபயோகப்படுத்தி வருகிறார்கள் .
நாட்டைக் காக்க போர்க் கப்பல்கள் ;நம் குழந்தையை காப்பாற்ற கிரைப்வாட்டர்அப்படின்னு கூட விளம்பரப்படுத்தி இருக்காங்கன்னு பாருங்களேன்

கிரைப் வாட்டர் உள்ள பொருள்கள் வந்து நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது பிரிட்டனில் 1992 வரைக்கும் சாராயம் இருந்துச்சு இந்தியாவில் கூட முன்ன இருந்துச்சு இப்ப இல்ல .இனிப்பை தரக்கூடிய சுக்ரோஸ் க்கு பதிலா லைக்காசின் இப்போ உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது கூடவே சதகுப்பை இத்துடன் சோடா பை கார்பனேட் உப்பும் சேர்ந்திருக்கிறது சதகுப்பை விதையிலுள்ள ஷாரோன் லிமோனின் என்ற நறுமண எண்ணெய்கள் தான் குடல் தசைகளை தளரச் செய்து வலியை குறைக்கிறது என நம்பப்படுகிறது.

20160dill seeds
வயிற்று வலிக்கு மருந்துன்னு ஜனங்க உபயோகப்படுத்தினாலும் அதன் லேபிள் வயிறு உப்புசம், பல் முளைத்தல் மற்றும் வயிற்றுப் போக்குக்கு உதவும் அப்படின்னு தான் சொல்லுது. முதல் 4-5 மாதங்களில் வரக்கூடிய வயிற்றுவலி நிறைய பெற்றோர்களுக்கு பயத்தைக்காட்டிரும். என்ன காரணம் அப்படிங்கிறது தெரியவில்லை சில குழந்தைகளுக்கு வளர வளர சரியாக்கூடிய தொல்லையாக இருக்கலாம் பின்னாடி வரக்கூடிய நடத்தை கோளாறுகளுக்கு ஒரு கட்டியம் கூறுவது போல இது இருக்கலாம். பெற்றோர் குழந்தைகள் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய உறவு சீர் கெட்டிருந்தாலும் வரலாம்

babuline

என்ன காரணத்தினால் குழந்தை அழுவதும் தெரியலனாவே எக்கச்சக்கமான மருந்துகள் வந்திரும்.நாட்டு மருந்து. ,மூலிகை டீல ஆரம்பிச்சு பாட்டி வைத்தியம் வரைக்கும் நூற்றுக்கணக்கில் இருக்கு.வயிற்று வலியை குறைக்கிறதுக்கு நல்ல குடல் கிருமிகள் முதல் டைசைக்குளோமின் மருந்து வரை பலது உண்டு. ஆனா வலி மருந்தை வயது ஆறு மாசம் முன்னாடி தரமுடியாது .முன்னாடி வித்துட்டு இருந்த நூற்றுக்கணக்கான கிரைப் வாட்டரில் ஆல்கஹால் அளவு 4- 9% வரைக்கும் இருந்துச்சு ஒரு காலத்துல பெரியவங்க கூட போதைக்கு இதை குடிச்சாங்கன்னா பாருங்களேன
வயிறு உப்புசத்தினால் ஏற்பட்ட வலிய சதகுப்பை குறைக்கிறது நம்ம சித்த மருந்துகளையும் இருக்கு கிரைப் வாட்டரின் வலியை குறைக்கும் தன்மைக்கு காரணம் இனிப்பு தான் அப்படிங்கறது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது
மலேரியாவுக்கு ஆக விற்கப்பட்ட கிரைப் வாட்டர் அதனுடைய இனிப்புச்சுவையினால் குழந்தைகளின் வயிற்று வலிக்கு உபயோகமாக இருக்கிறது அப்படிங்கிற செய்தி ஆச்சரியமாக இருக்குதல்லவா?
சரி! அழும் குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது ?
தோளின் மேல் போட்டு நடக்கவும். தொட்டில் பழக்கமெனில் படுக்க வைத்து ஆட்டவும்.தாய்ப்பால் தரலாம்.லேசாக நீவி விடலாம்.காற்றாட வெளியே வரலாம்.சீரணமாக எதுவும் தேவையில்லை. கட்டாயம் கிரைப் வாட்டர் தர வேண்டாம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading