childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

வலக்கையரா? இடக்கையரா?

1 min read

நாம் பொதுவாக எந்த கையை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம் என்பதைப் பொருத்துதான் வலக்கையரா? இடக்கையரா?
என தீர்மானமாகிறது ,உணவு உண்பது,எழுதுவது ஆகியவைகளுக்கு எந்தக் கையை அதிகமாகப் பயன்படுத்துகிறோம் அந்தக் கை நல்ல கை யாகவும் மற்ற கை ஆய்க்கை என குழந்தைகளுக்கு ஆகி விடுகிறது
இதனை மருத்துவ உலகில் அதிகப்பயன்பாடு உள்ள கை , பயன்பாடு இல்லாத கை எனத் தான் இது குறிக்கப்படுகிறது

Left-handed
இடது கையை பயன்படுத்துவதற்கு சூழல் சார்ந்த மரபியல் காரணங்கள் இருக்கலாம் என்பது தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு
90% மக்கள் வலக்கையை உபயோகப்படுத்துகிறார்கள். எனவே நிறைய சாதனங்கள் வலதுகை உபயோகப்படுத்துபவர்களுக்கு எளிதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இதனால் இடது கை பழக்கம் உள்ளவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆனால் இடது கை விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

120707-F-MU952-276

முக்கியமாக குறிபார்த்து விளையாடக்கூடிய விளையாட்டுக்களான கூடைப்பந்து டென்னிஸ் வால் சண்டை கிரிக்கெட் மற்றும் குத்துசண்டை விளையாட்டுக்களில் களில் சிறந்து விளங்குகின்றனர் இதற்கு காரணம் என்னவென்றால் இவர்களுடைய எதிரணி விளையாட்டு வீரர்கள் வலதுகை பழக்கம் உள்ளவர்களாக இருக்கும்போது இவர்களை எதிர்கொள்வது எப்படி என்பது தெரியாமல் இருப்பதுதான்.90% மக்கள் வலதுகைப் பழக்கமும் 10 சதவீத மக்கள் இடக்கைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
Askay2

இரு கைகளையும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்துபவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது இருகைகளையும் துளிகூட வித்தியாசமில்லாமல் திறம்பட உபயோகப்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதைவிடக் குறைவு
வலது கை இடது கைப் பழக்கம் எவ்வாறு உருவாகிறது என்பதற்கு நிறைய கருத்துக்கள் உலவுகின்றன

தாயின் வயிற்றில் குழந்தைஉருவாகும் போது ஏற்படக்கூடிய நிகழ்வுகள் மிக முக்கிய காரணம்.கருப்பையில் குழந்தை எந்தக் கையினை அதிகமாக உபயோகப்படுத்துகிறதோ அதையே தான் பிறந்த பின்னும் உபயோகப்படுத்துகிறார்கள் என 2013 இல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது இவைகளைத்தவிர மரபணுக் காரணங்கள் மூளையின் வேலையைப் பிரிக்கும் திறன் . சூழல் சார்ந்த மரபியல் காரணங்கள். கருஉருவாவதற்கு ஊக்குநீர் மருந்துகள். வெஸ்டிபுளர் அப்பரேட்டஸ் இன் மாறுபட்ட தன்மை ஆகியவை காரணங்களாக இருக்கலாம்

சிறு வயது குழந்தை இரண்டு கைகளையும் தொடர்ந்து மாறிமாறி உபயோகப்படுத்தும் மூன்றிலிருந்து நான்கு வயதிற்குள் மெதுவாக ஒரு குறிப்பிட்ட கையைப் பயன்ப்படுத்த பழகிக் கொள்ளும்
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் மிகச்சிறந்த வெற்றியாளர்களாக இருப்பார்கள் என நம்பிக்கையும் உள்ளது ஆனால் அறிவுத்திறன் புள்ளிகள் எண்ணிக்கையில் ஒரு புள்ளி மட்டும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மொழியை கற்றுக்கொள்வது இவர்களுக்கு சுலபமாக இருக்கும்.இசை நினைவு மற்றும் இசை மாயத்தோற்றம் அதிகமாக இருக்கும்.குறைந்த பிறப்பு எடை,மன நோய்கள்-மன அழுத்தம்.இறுக்கம். கவலை, இதய நோய்கள் அதிகமாக உள்ளது.

சண்டை மற்றும் போர் சூழலில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம். நிறைய சமுதாயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது அடக்கப்படுகிறார்கள்.அண்மைக்காலம் வரைசீனா, சப்பான் மற்றும் கொரியாவில் வலது கைக்கு மாறக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

Kangaroo_Australia_

விலங்குகளில் கங்காரு அதிகமாக இடது கையை உபயோகிக்கும்.நாய், குதிரை பூனைகளில் ஆண் இனம் இடது முன்னங்காலை உபயோகிக்கும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading