Blog Stats

  • 128,340 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

வென்றிகுலோ பெரிடோனியல் ஷண்ட்

1 min read
சில குழந்தைகளுக்கு மூளையில் நீர் கோர்த்து இருக்கும் . நீர் கோர்த்த தலை (hydrocephalus) என சொல்லுவார்கள் பாதித்த குழந்தைகளுக்கு உடல் நலப்பிரச்சனை அதிகமாக இருக்கும் மூளையில் உள்ள அளவு அதிகரித்த நிலையில் (அதிகபட்ச அழுத்தத் துடன் சிஎஸ்எப் இருக்கும் போது மட்டுமே) வயிற்றுக்கு செல்லும் வண்ணம் உதவ ஒரு வால்வுடன் கூடிய குழாய் உள்ளது இது அதிக அழுத்தம் இருக்கும்போது மட்டும் சிஎஸ்எப் ஐ வடித்து உதவியாக இருக்கும்

சில குழந்தைகளுக்கு மூளையில் நீர் கோர்த்து இருக்கும் . நீர் கோர்த்த தலை (hydrocephalus) என சொல்லுவார்கள் பாதித்த குழந்தைகளுக்கு உடல் நலப்பிரச்சனை அதிகமாக இருக்கும் சாதாரணமாக சிஎஸ் ஆப் என்ற திரவம் மூளைக்குள் சுரக்கும் ரத்தத்திலிருந்து அரக்னாய்டு வில்லை மூலம் உற்பத்தி செய்யப்படும் இத்திரவம் மூளையின் எல்லாப் பகுதிகளையும் மெத்து மெத்தென அசங்காமல் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது இது மூளு, தண்டுவடப்பகுதிகளை சுற்றி வந்து மறுபடியும் உள்உறிஞ்சப்படுகிறது.

பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் காரணமாக உற்பத்தி அதிகமாகி,மூளையின் அறைகள் பெரிதாககிறது .தலைச்சுற்றளவு அதிகரிக்கும் . திரவம் திருப்பி உறிஞ்சப்படும் அளவு வேறுபட்டால் நீர் அதிகமாகி நரம்பு மண்டலப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அப்போது மூளை அழுத்தமும் அதிகமாகும் அழுத்தம் அதிகமானால் மூளையின் பிரச்சினைகள் தோன்றலாம்

சாதாரணமாக சிஎஸ்எப் மூளையில் உள்ள வென்ட்ரிகிள் அறைகளில் இருக்கும் . இந்த அறுவை சிகிச்சையில் மூளையில் உள்ள அளவு அதிகரித்த நிலையில் (அதிகபட்ச அழுத்தத் துடன் சிஎஸ்எப் இருக்கும் போது மட்டுமே) வயிற்றுக்கு செல்லும் வண்ணம் உதவ ஒரு வால்வுடன் கூடிய குழாய் உள்ளது இது அதிக அழுத்தம் இருக்கும்போது மட்டும் சிஎஸ்எப் ஐ வடித்து உதவியாக இருக்கும்

இந்த அறுவை சிகிச்சையின் நோக்கம் அதிகமாக உள்ள மூளையின் அழுத்தத்தை குறைத்து சாதாரண அளவிற்கு கொண்டு வருவதுதான். இதற்கு இந்த வென்றிக்குலோ பெரிடோனியல் மாற்றுக்கிழாய் உதவி செய்கிறது.வென்றி குலோ பெரிடோனியல் ஷன்ட் என்பது அந்த வென்றிக்குல் அறையிலுள்ள அதிக சிஎஸ்ஐ திரவத்தை ஒரு குழாய் மூலம் கொண்டு செல்வது வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை மூலம் இந்த சி எஸ் எஸ் கொண்டு செல்லப்படுகிறது


குழந்தைக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது தலையின் மேல் பகுதியில் முதலில் முடி அகற்றப்பட்டு காதின் பின்புறம் மண்டைை ஓட்டில் ஒரு சிறிய துளை இடப்படுகிறது மூளையின் வென்ட்ரிகிள் அறைக்குள் ஒரு சிறிய குழாய் செலுத்தப்படுகிறது. காதின் பின்புறம் இருந்து தோலுக்கு கீழே ஆழமாக சுரங்கப்பாதை போல் ,குழாய் போக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை மூலம் இந்த சி எஸ் எஸ் கொண்டு செல்லப்படுகிறது.வால்வுபோதுமான அளவு நீளம் இருப்பதால் குழந்தை வளர வளர தானே நீண்டு கொள்கிறது மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை


இந்த அறுவை ச் சிகிச்சை செய்த பின்னர் ரத்தக்கசிவு ,நோய்த் தொற்று ,மூளையில் சாதாரண திசுக்களுக்கு பாதிப்பு .மறுபடியும் அறுவை சிகிச்சைத்தேவைை ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம் ரத்த கசிவு என்பது அறுவை சிகிச்சைக்கு பின்னர் தெரிந்துவிடும் அதிகபட்ச ரத்தக்கசிவு இருந்தால் மூளை பாதிப்பை தடுப்பதற்காக மறுமுறை அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும்.
மூளைக்குள் குழாயைச் செலுத்தும் போது சாதாரண மூளை திசுக்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது .வெகு அபூர்வமாகவே நோயாளிகளுக்கு கை கால் செயலிழப்பு ,உணர்வு மற்றும் கண் பார்வைக் குறைபாடு, பேச்சுக் குறைபாடு ஏற்படலாம் நோய்த்தொற்றும் குழாயில் அடைப்பு ஏற்படுவதுமே முக்கிய பிரச்சினைகள்.

குழாயின் உள்ளே இருக்கும் நோய்க்கிருமிகளை உடல் எதிர்த்து போராடுவது பலன்அளிக்காது.எனவே நோய்க் கிருமித் தொற்று ஏற்பட்டால் பழைய குழாயை எடுத்துவிட்டு புதிய குழாயை இணைக்க வேண்டியிருக்கும் .அடைப்பு ஏற்பட்டால் அடைப்புள்ள பகுதி நீக்கப்பட்டு புதிய பகுதி இணைக்கப்பட வேண்டும்
குழந்தையின் வயதைப் பொருத்தும் ,என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதைப் பொருத்தும் அறுவை சிகிச்சையின் வெற்றி உள்ளது, சாதாரணமாக 50% வெற்றி வாய்ப்பு உள்ளது நோய் தொற்று ஏற்பட்டு அடைப்பு ஏற்பட்டால் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எண்டாஸ்கோபி மூலமாக செய்யக்கூடிய அறுவை சிகிச்சையில் வெ ற்றி அதிக ம்.ஆனால் குறிப்பிட்ட சிலவகையான நோயாளிகளுக்கு மட்டும் இதைச் செய்ய முடியும். அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு அல்லது ஏழு நாட்களுக்குள் வீட்டுக்கு செல்லலாம். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து பூசப்பட்ட குழாய்கள் மற்றும் எம்ஆர்ஐ உதவியுடன் செய்யப்படும் குழாய் பொருத்துதல் ஆகியவை புதுமையான அறுவைச் சிகிச்சை முறைகளாகும்

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading