childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

மூளை மின் அலை வரைவு படம் என்றால் என்ன?

1 min read

உங்கள் குழந்தைக்கு வலிப்பு அல்லது மூளை சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் மூளை மின்னலை வரைவு படமெடுக்க பரிந்துரைப்பார் .மூளை மின் அலை வரைவு படம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்

மூளையின் இருபுறக் கோலங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதற்கு மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை உபயோகிக்கின்றன .நாம் எடுக்கும் மூளையின் மின் அலை வரைவு படம் ,இதனை அளந்து கணினித் திரையில் கோடுகளாக காண்பிக்கும். மூளையின் செயல்கள் நன்றாகஉள்ளதா? வலிப்பு சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளதா ?குறிப்பிட்ட இடத்தில் கட்டி போன்ற கோளாறு உள்ளதா? என்பதனை கண்டறிய மின் அலை வரைவு படம் எடுக்கப்படும்.

நன்றி கூகுள்

பாதிப்புள்ள இடத்தில் மின் அலை வரைவின் வடிவத்தில் மாற்றம் ஏற்படும் அது கணினித்திரையில் தெரியும் .பதிவாகும் கோடுகளில் ஒரு மாற்றமாக இருக்கும் இதை வைத்து எங்கே பிரச்சனை இருக்கிறது? என்பதனை அனுமானிக்க மருத்துவரால் முடியும்.மூளை மின் அலை வரைவு படம் எடுப்பதற்கு முன் உங்கள் குழந்தையின் தலையை ஷாம்பு உபயோகப்படுத்தி நன்கு கழுவி துடைத்து ஈரம் போக்கி வைக்கவும்.பரிசோதனையின் போது குழந்தை அசையாமல் படுத்து இருக்க வேண்டும். இல்லை என்றால் சிறிது தூக்கத்தை தர மருந்தினை தர வேண்டியதிருக்கும் அது திரவ வடிவில் அல்லது மாத்திரை என தரப்படலாம் சில நேரங்களில் மூக்கில் அடிக்கக்கூடிய மிடசோ லாம் ஸ்பிரே உபயோகமாகலாம்.குழந்தை தூங்க வில்லை என்றால் மயக்க மருந்து தந்து தான் தூங்க வைத்து பிறகு பரிசோதிக்க வேண்டும் .கடைசியாக உணவு உண்டு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஆகி இருக்க வேண்டும் .அப்போதுதான் மயக்கமருந்து தருவதும் தெளிந்தவுடன் வாந்தி , புரையேறுதலைக்ககுறைக்கவும் முடியும்.மயக்க மருத்துவர் உதவியுடன் மயக்கம் தரப்படும்

நன்றி . என்சைகிளோப்பீடியா பிரிட்டானிக்கா

மூளை மின் அலை வரைவு படமெடுக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம். மின் வாய்மூலம் வட்டங்கள் ஒட்டப்பட்டு அதில் மின் அலை கடத்தி கம்பிகள் இணைக்கப்படும். மருத்துமனையில் செய்யப்படும் இந்தப் பரிசோதனை சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியரால் நடத்தப்படும் .வழக்கமாகக் குழந்தை படுத்திருக்கலாம் .சில நேரங்களில் குழந்தைகள் உட்காரவும் அனுமதிக்கப்படுவார்கள் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையுடன் இருக்கலாம்.மூளையின் மின் அலை வடிவத்தை கணினி பதிவு செய்யும். பரிசோதனையில்

1.மூன்று நிமிடங்களுக்கு ஆழமாக சுவாசிக்க செய்வார்கள்

2.கண்களைத் திறக்கவும் மூடவும் செய்யும்போது பதிவு எடுக்கப்படும்

3.வெளிச்சத்தை பார்க்கும்படி செய்து சில நிமிடங்களுக்கு மின் அலை வரைவு பதிவு எடுக்கப்படும்

மேற்கண்ட செயல்கள் மூலம் மூளையின் மின் அலை நடவடிக்கையில் மாறுதல் ஏற்படுகிறதா என்பது அலைக்கோடுகள் மூலம் கண்காணிக்கப்படும் . குழந்தை தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையால் எந்தவித பக்க விளைவுகள் அல்லது பிரச்சினைகள் இல்லை.

குழந்தைக்கு தூக்க மருந்து கொடுக்கப்பட்டால், பரிசோதனைக்கு பிறகு தூக்க கலக்கத்தோடும் சிறுபொழுது சோர்வாகவும் இருக்கும்.எனவே அடுத்த ஆறு மணி நேரங்களுக்கு கவனமாகக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவும் .தண்ணீர் அல்லது திரவ உணவுகளைத் தரவும் .பசிக்கிறது என்று கேட்டால் வழக்கமான உணவினை தரவும். குழந்தை விழித்து எழுந்தவுடன் அவனுடைய தினசரி நடவடிக்கையில் ஈடுபடலாம். தலையில் மின்வாயினைஒட்ட உபயோகப்படுத்திய கிரீமை ஷாம்பு உபயோகித்து கழுவிவிடவும்

மற்ற நரம்பியல் பரிசோதனையான எம்.ஆர்.ஐ, தேவைப்படின் செய்ய வேண்டியிருக்கும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading