childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தைக்குஎன்ன பழம் தரலாம்? எப்படித்தரலாம்?

1 min read

குழந்தைகளுக்கு பழம் தர வேண்டும் ?என்று நினைக்கும் பெற்றோர்கள் மனதில் முதலில் வருவது  A for ஆப்பிள் தான். சாதாரண மக்கள் தொடங்கி,பணம் படைத்தவர்கள், வசதியானவர்கள் பிரபலமானவர்களின் முதல் விருப்பம் அதுதான் அனைவராலும் விரும்பப்படுவது ஆப்பிள் தான்.விலை அதிகமாய் இருந்தாலும் எப்படியாவது குழந்தைக்கு சத்தினை ஏற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் தான் சிரமப்பட்டாவது வாங்கித்  தருகிறார்கள்.

உள்ளூரிலேயே கிடைப்பது ,எல்லா காலங்களிலும் தரலாம், விலை மலிவானது ,விதவிதமான வகைகளைக் கொண்டது என பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட வாழைப்பழத்துக்கு இந்த மரியாதை இல்லை. உண்மையிலேயே ஆப்பிளில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா ?கடையில் நாம் வாங்கும்  ஆப்பிள் பறித்து எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும?  எவ்வளவு நாட்கள்கழித்து நமக்குக் கிடைக்கிறது ? எந்த பதப்படுத்தும் முறையினால் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்கிறது? எனப் பார்ப்போம்

குளிரூட்டப்பட்ட பழமுதிர் நிலையத்தில் வைக்கப்பட்டு நம்மால் எடுக்கப்பட்டு , குழந்தைக்கு தரும் ஆப்பிள் பழம் பறித்து 1 வருடம் கூட இருக்கலாம்.!!!ஆச்சரியமாக இருக்கிறதா? இது நம்ப வேண்டிய உண்மை.

சரியான சாப்பிட ருசியாக உள்ள ஆப்பிள் பழம் சரியான பதத்தில்பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பறிக்கப்படும்
ஆப்பிள் தோட்டங்களில் பறிக்கப்படும் பழங்கள் முதலில் ஆப்பிள் பைகளில் கொண்டுவரப்பட்டு 400 கி லோ வரை பிடிக்கும்மரப் பெட்டிகளில் போடப்படும்.

பின் ஆப்பிள் பழம் தரம் பிரிக்கும் நிலையங்களுக்கு இவை அனுப்பப்படும். இந்த நிலையங்களில் நன்கு கழுவப்பட்டு இயந்திரங்கள் இயந்திர மனிதர்கள் மற்றும் நவீன மின்ணணு கருவிகள் துணை கொண்டு எடை, நிறம் ,தோ ல் மே லுள்ள வடுக்கள் வாரியாக தரம் பிரிக்கப்படும். தனித்தனி பாதைகளில் தானியங்கி முறையில் கொண்டுசெல்லப்பட்டு கார்ட்போர்ட் அட்டை பெட்டிகள் அல்லது பைபர் பெட்டிகளில் சேமிக்கப்படும்

இங்குதான் ஆப்பிளுக்கு மெழுகு பூசும் வேலை நடக்கிறது சாதாரணமாக ஒவ்வொரு பழமும் தன்னுடைய வெளிப்புறத்தை பாதுகாக்கவும் , தரம் குறையாமல் வைத்துக் கொள்ளவும் இயற்கை மெழுகினைச் சுரக்கும் ஆப்பிள் ஆரஞ்சு பேரிக்காய் பிளம்ஸ் என அனைத்தும் மெழுகினைச் சுரக்கும் இதைப்போலவே செயற்கையான மெழுகு தரம் பிரிக்கப்பட்ட ஆப்பிளுக்கு பூசப்படும் ஏனெனில் இயற்கையான மெழுகு கழுவும்போது கரைந்துவிடும் .பழங்களை சேமிக்கும் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் விற்பனை நிலையத்திற்கு மாற்றும் போதும் காயம் ஏற்படாமல் வைக்கவும் எப்போதும் புது மெருகு குறையாமல் வைத்திருக்கவும் பூசப்படும் பழமெழுகு உபயோகமாகும் இது சர்க்கரைப்பாகு, தேன்மெழுகு மற்றும் ரெசின் கொண்டு செய்யப்படும் இந்த மெழுகு பூசுதல் இயந்திரங்கள் மூலமாக நடைபெறும். அதற்குப் பிறகு ஆப்பிளின் பழுத்தல் தன்மையை நிறுத்தி வைப்பதற்காக 1எம்சிபி என்ற ரசாயனம் உபயோகப்படுத்தப்படும். இந்த ரசாயனம் உபயோகப்படுத்தப்பட்ட உடன் ஆப்பிள் அதற்கு மேல் பழுக்கும் தன்மையை மறந்து விடும் அதே காலத்தில் உறைந்து போகும் .

மெழுகு பூசி என்சிபி இல் பதப்படுத்தப்பட்ட ஆப்பிள்கள் சேமிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன இந்த சேமிப்பு நிலையங்கள் இரண்டு வகைப்படும்

1..குறுகிய காலத்திற்கு ஆப்பிளை சேமிக்கும் குளிர்பதன நிலையங்கள்

2.நீண்டகாலத்திற்கு ஆப்பிளை சேமிக்கும் வைக்கும் சூழலை கட்டுப்படுத்தும் நிலையங்கள்

குறுகியகால ஆப்பிள் சேமிப்பு நிலையங்கள் குளிர்பதனப் பெட்டிகள் மூலமாகச்சேமிப்பதன் வழியாகஇயங்குகிறது மூன்று மாதங்களில் இவை விற்பனை இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

நீண்டகால சேமிப்புக்கு சுற்றுச்சூழலை கட்டுப்படுத்தும் சேமிப்பு நிலையங்கள் உதவுகின்றன இந்த நிலையங்களில் ஆக்சிஜன் அளவு ஜீரோவுக்கு அருகில் குறைக்கப்பட்டு கார்பன்-டை-ஆக்சைடு அதிகப்படுத்த பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் பழங்கள் பழுப்பது தவிர்க்கப்படும்.

Different apples need different controlled storage environments. For example, Honeycrisps are sensitive to low temperatures so you can’t put them in cold environments right after they’ve been harvested. And Fujis can’t take high carbon dioxide level

நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் ஆப்பிள்கள் ஒரு வருடத்திற்கு முன் பறிக்கப்பட்டது என முதலிலேயே பார்த்தோம் இந்த ஆப்பிள்களில் மேலே மெழுகு பூசப்பட்டிருக்கும். எம்சிபி உபயோகப்படுத்தப்பட்டு இருக்கும். எப்போது விற்பனைக்கு தேவை என்று நினைக்கிறாரோ அப்போது சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்ட கிடங்குகளை திறந்து உள்ளே இருக்கும் ஆப்பிள்கள் எடு க்கப்படும்

கிடங்குகளில் ஆக்சிஜன் அளவு பழைய நிலைமைக்கு மெதுவாக திரும்பும் .அப்போது விற்பனை நிலையங்களுக்கு அதனை மாற்ற ஆரம்பிப்பார்கள்.அமெரிக்க விவசாய துறையின் அறிவிக்கையில் இப்பழங்களில் உ ள்ள சத்துக்கள் குறைவதில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது ஆனால் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் இந்த பழங்களில் உள்ள முக்கிய நோய் எதிர்ப்பு பொருளான பாலிஃபீனால் அளவு மிகக்குறைவாக மூன்று மாதத்திற்கு பிறகு ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு ஒன்றுமே இல்லாதது ஆகிவிடுகிறது என்ன சொல்லுகிறது

நாள்பட நாள்படப், பழத்தில் உள்ள பாலிஃபீனால் அளவு குறைகிறது மேலும் இப்பழங்களில் உள்ள மெழுகு தண்ணீரினால் கழுவுவதின் மூலம் நீங்காது எனவே தோலை சீவி சாப்பிடுவதுதான் நல்லது அப்படி சாப்பிடும் போது மீதியிருக்கும் பாலிஃபீனாலும் காணாமல் போய்விடும்
அவ்வளவு சிரமப்பட்டு ஆப்பிளை வாங்கி வேகவைத்து தரவேண்டுமா? வேண்டாம் !நமது நாட்டில் இல்லாத பழங்களா ?வாழைப்பழத்தில் எத்தனை வகைகள் எத்தனை ராகங்கள் ??ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு உடல் நிலைக்கும் ஏற்ற பழங்கள்? எத்தனை எத்தனை விதமான காய்கறிகள் கனிகள் மா பலா வாழை முக்கனிகள்? கூடவே கொய்யா பப்பாளி சீதா மாம் பழம் என பல பழங்கள் .இவைகளை உபயோக படுத்துவோம். நமது ஊரில் கிடைக்கும் பழங்களை உண்போம் .ஆசைக்கு என வேண்டுமென்றால் அவ்வப்போது வெளிநாட்டு பழங்களையும் உண்போம்

உசாத்துணை

1.https://pubs.acs.org/doi/abs/10.1021/bk-2007-0956.ch020

2.http://www.learnz.org.nz/primaryindustries192/storing-and-exporting-apples#:~:text=Apples%20are%20picked%20by%20hand,to%20be%20cleaned%20and%20graded.

3.https://www.theatlantic.com/technology/archive/2017/04/why-fruit-has-a-fake-wax-coating/524619/

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading