childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

சிலந்திக்கடி

1 min read
frightened little girl with cookie

Photo by Charles Parker on Pexels.com

black spider graphic
Photo by Ali Müftüoğulları on Pexels.com

1.எந்த வகையான சிலந்தி அது ?(கறுப்பு கைம்பெண் அல்லது தவிட்டு நிற சிலந்தியா?)
2. ஒருவேளை தேள் கடியா?
3. கடித்த இடத்தில் தசைப்பிடிப்பு உள்ளதா ?வயிற்றுக்குக் கீழ்ப் பகுதியிலோ அல்லது மார்பகப் பகுதியில் ஏதேனும் தசைப்பிடிப்பு, வலி உள்ளதா? (கறுப்பு கைம்பெண் சிலந்திக் கடி இல்லை என உறுதி செய்ய)
4. கடிபட்ட சம்பவத்திற்குப் பிறகு குழந்தை சோர்வாக அல்லது பலஹீனமாக இருக்கிறதா?(விஷ ம் ரத்தத்தில் கலந்து இருக்கிறதா? என அறிய)
5. சிலந்திக்கடி தானா? என்று தெரியவில்லை  என்றால், தாங்க முடியாத வலி உள்ளதா ?என்று கேட்கவும் .கடிவாய் மேல் கொப்புளம் ஏதேனும் உள்ளதா? கடித்த இடத்தில் நடுப்பகுதி பழுப்பு நிறத்தில் மாறி உள்ளதா? என்று கேட்கவும்(விஷ சிலந்திக் கடியினைக் கண்டுபிடிக்க)
6. நோயாளியை கூட்டி வரும் போது உயிரோடு அல்லது இறந்த சிலந்தியை ஒரு பெட்டியில் போட்டு கொண்டு வருவது எந்த வகையான சிலந்தி என அடையாளம் காண உதவியாக இருக்கும(தவிட்டு நிற சிலந்திகளைை அடையாளம் காண்பதற்கு கடினமாக இருக்கும்)
7. சிலந்திக்கடி ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தால் கடித்த இடத்தில் பிடித்திருக்கிறதா காய்ச்சல் இருக்கிறதா ?சிவந்து படலம் உள்ளதா?தடித்து உள்ளதா? எனக் கேட்கவும் (சீழ் பிடித்தல் அல்லது நிணநீர் குழாய் தடிப்பு இதன் மூலம் அறியலாம்)

brown orb weaving spider
Photo by Egor Kamelev on Pexels.com

சாதாரண சிலந்திக்கடியில் விஷமில்லை.

  1. சோப் மற்றும் தண்ணீரில் கழுவி மருந்திடவும்
  2. வலி வீக்கத்தினை குறைக்க குளிர்ந்த நீரில் நனைத்த துணியினை மேலே போடவும்
  3. கை, கஅல்களில் கடித்திருப்பின் உயர்த்தியே வைத்திருக்கவும்
  4. வலிக்கு சாதாரண வலி நீக்கி மருந்துகளை தரவும்
  5. கடிபட்ட இடத்தில் நோய்தொற்று உள்ளதா ? எனக்கவனித்து வரவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading