childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

1 min read

குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான 100 சதவீத சத்துக்களையும் 6லிருந்து 12 மாதத்திற்கு 66% சத்துக்களையும் ஒன்றிலிருந்து ஐந்து வயது வரை 33 சதவீத சத்துக்களையும் தரும் ஒரே உணவு தாய்ப்பால். எந்த முறையில் மகப்பேறு நடந்திருந்தாலும் (இயற்கையான வழியில் ஆயுதம் மூலம் அல்லது அறுவைசிகிச்சை வழியாக) குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டுவது நல்ல தொடக்கமாக குழந்தைக்கு அமையும். முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் அளவில் குறைவானது ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியில் மற்றும்அது தரும் ஆற்றலில் மிகுந்தது. தாயிடமிருந்து சீம்பால் உற்பத்தி 24 வாரம் கர்ப்பம்கடந்தபின் ஆரம்பிக்கிறது. உயிர் பிழைக்கும் வாய்ப்பு ள்ள 24 வாரம் கடந்த சிசுவிற்கு சீம்பாலை கலந்து தரலாம். அதிகப் புரதம் கொழுப்பு எதிர்ப்புச் சத்து நிறைந்த திரவத்தங்கம்  சீம்பால். உயிர்ப்பொருட்கள் ,திசுக்கள், நொதிகள் குடல் வளர்ச்சி ஊக்கிகள் IgG.IgAஎதிர்ப்பு சக்தி என பலஉடனடி நோய்எதிர்ப்பிற்கு உதவுகின்றன. முதல் மூன்று நாட்களுக்கு குழந்தைக்குத் தேவையான நீர்ச்சத்து மிகக்குறைவு எனவே குறைந்த அளவில் (பதினைந்திலிருந்து முப்பது மில்லி) சுரக்கும் சீம்பால் போதும்.

பிறகு சுரக்கும் தாய்ப்பாலை சத்துக்களின் தன்மை அடர்த்தி மற்றும் அளவு ஒவ்வொரு முறையும் மாறுபடும். தாகத்தை உடனே குறைக்க நீர் நிறைந்தும் பசியாற உடனடி லாக்டோஸ் சர்க்கரை மிகுந்தும் இருப்பது முன் பால் .இதை குடித்து விட்டு தூங்க தொடங்கினால் குழந்தையை எழுப்பி விட்டு பால் தருவதை தொடரவேண்டும். தாகமும் பசியும் மட்டுப் பட்டபின் குடிக்கும் போது சுரக்கும் பின்பாலில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் இவை ஆற்றலையும் உடல் வளர்ச்சியையும் திசுக்களின் பிரிதல் முதிர்தலையும் மேம்படுத்தும். தாயின் உடல் வாகு ,(குண்டு ஒல்லி)மார்பகத்தின் அளவு எப்படி இருந்தாலும் ஒவ்வொரு தாயின் மார்பகத்திலும் 15- 20 பால்சுரப்பு தொகுப்புகள் தான் இருக்கும் .எனவே தாயின் உடல் அமைப்பு மார்பக அளவு பால் சுரப்பினை பாதிக்காது.

பால் ஊட்டுவதற்கு குழந்தை அழும் வரை காத்திருக்கக் கூடாது .பசியின் அறிகுறிகளான ,சுறுசுறுப்பாவது, உதட்டினைச் சப்புவது, பாலூட்டுவது போல் பாவனை  செய்வது,மார்பினை தேடுவது இவைகளை கண்டவுடன் பால் தரவும். நன்கு குடித்து முடிக்கும் வரை ஒரு மார்பகத்திலேயே தரவும் தேவைப்படின் அடுத்த மார்பகத்திலிருந்து ஊட்டலாம்

குறை மாத கர்ப்பத்தில் பிறந்த குழந்தைக்கு அதிக அளவு புரதமும் கொழுப்பும் எதிர்ப்பு சத்துக்களும் தேவைப்படும் .தேவைக்கு ஏற்ப தினம்தினம், நாளின் பல நேரங்களில் தனது சத்துக்களின் அளவினை மாற்றி சுரக்கும் தாய்ப்பால்.

கடும் வெயில், வறட்சி காலங்களில் குழந்தையின் நாவறட்சி மூலமாக நீர்த் தேவையினை மார்க் காம்பின் நரம்பு முனைகள் அறிந்துகொள்ளும். மூளைக்கு செய்தி பறக்கும் .அடுத்து சுரக்கும் பாலை இருக்கும் அதிக நீர்

பேரழிவு பேரிடர் காலங்களில் குழந்தைக்கு பிரச்சனையின்றி தரக்கூடிய ஒரு உடனடி உணவு தாய்ப்பால் மட்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஊட்டச் சத்துப்பிரச்சினைகள், இரத்தசோகை, நிமோனியா ,வயிற்றுப்போக்கு, பற்சொத்தை ,ஒவ்வாமை ஆகியவை வரும் வாய்ப்பு மிகக் குறைவு. தாய்ப்பாலில் மிகுந்துள்ள டாரின் மற்றும் டி ஹெச் ஏ காரணமாக குழந்தையின் ஐக்யூ புள்ளிகள் 10 வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தாய்ப்பாலில் உள்ள இரும்புச்சத்து அளவு குறைவாக இருந்தாலும் முழுவதுமாக உறிஞ்சப்படும் லேக்டோபெரின்குடலில் உள்ள கிருமிகளைக் கொன்று எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது

குழந்தை பிறந்தவுடன் தாயுடன் முதல் மூன்று நாட்களில் கூடவே இருக்கும் பெற்றோர், மாமியார் ,பாட்டி மற்றும் நெருங்கியஉறவினர்கள் சில சிரமங்களை அனுபவிப்பர். குழந்தையின் அழுகை ,அடிக்கடிகோவணத்துணி மாற்றுதல் ,தூக்கம் கெடுத்து தாய்ப்பாலூட்ட தாய்க்கு உதவுதல் மற்றும் உறவினர்களின் வருகை, குறைந்த நேர ஓய்வு ஆகியவைகளைப் பாராமல் தாய்க்கு உறுதுணையாக இருந்தால் தாய்ப்பாலூட்டல் வெற்றிகரமாக அமையும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading