
தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு அதிலுள்ள நல்ல கொழுப்பு அமிலங்களிஎடை அதிகமாக ஏறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை குழந்தை கொழுப்பு எனப்படும் இது வளர வளர வடிந்துவிடும். மற்ற பாலினால் ஏறும் எடை கந்துவட்டி போல் அதிகமாகி உயிருக்கே உலை வைத்துவிடும் .கொழுகொழுவென்று புட்டுக் கன்னம் குழந்தைக்கு அமைய மார்பினைக் கவ்வி பாலூட்டுதலும்,இசைந்து அசைந்த தாடை அசைவுகளும் தான் காரணம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இளம் வயது நீரிழிவு ,மிகுரத்த அழுத்தம் ,மிகுகொழுப்பு உள்ளிட்ட தொற்றா நோய்கள் ,ஒவ்வாமை, தன்னெதிர்ப்பு நோய்கள், சில வகைப் புற்று நோய் உள்ளிட்ட பலவும் வரும் வாய்ப்பு குறைவு. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை வயிறு நிறைந்தவுடன் பால் அருந்துவதை நிறுத்தி விடும் .இனிப்பாலும், குடிக்க எளிதாக இருப்பதாலும், புட்டிப்பாலை கண்மண் தெரியாமல் குடித்து குண்டாகிவிடும் குழந்தை.
மற்ற பாலில்உள்ள புரதத்திற்கு எதிராகக்குழந்தையின் உடலில் உற்பத்தியாகும் எதிர்ப் புரதங்கள் இன்சுலின் சுரப்பு திசுக்களின் தற்சிதைவைத் தூண்டிவிடும். தாய்ப்பாலோ , நீரிழிவு நோய் ,கர்ப்ப கால நீரிழிவு நோய் உள்ள தாய்மார்களின் குழந்தைகளை பாதுகாக்கும். குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குடல் அழுகல் முதல் வாரத்தில் ஏற்படும் வாய்ப்புண்டு தாய்ப்பாலில் உள்ள உடல் வளர்ச்சி ஊக்கிகள் எதிர்ப்புபுரதங்கள் குடல்அழுகல் ஏற்படாது தடுக்கும் திறன் பெற்றவை. மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட குறை மாத குழந்தைக்கு தாய்ப்பாலிலுள்ள உயிருள்ள நரம்பு செல்கள் ரத்த உறைதலுக்கும்மூளை பாதிப்பு ஏற்படாததற்கும் உதவுகின்றன
தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தைகள் கக்கும். குடித்த பால் வாய் மூக்கு வழியே வெளியே வரும். கக்கிறபிள்ளை தக்கும்என்பது நம் முன்னோர் மொழி .கக்கியபின் பால் குடிக்கும் குழந்தையின் மேலண்ணத்தில் ஒட்டியிருக்கும் துணுக்குகள் மார்க்காம்பில் படும் .அதன் வழியாக மூக்கில் உள்ள வைரஸ் தொற்று அறிந்து அதற்கேற்ப நோய் எதிர்ப்பு சக்தியினை சுரக்கும் தாய்ப்பால் என்பது அண்மையில் நடந்த ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.தாய் சேயுடனான பாசப்பிணைப்பு அதிகமாகும். உணர்ச்சி மிகுந்த பற்றும் நெருக்கம் மிகுந்து குடும்பத்தினருடன் உறவும் அன்பும் மேலோங்கும்.

நல்ல நுண்ணுயிரிகள் நம் உடலில் இருப்பது நல வாழ்க்கைக்கு மிக முக்கியம். தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் ,புற்றுநோய், தன்னெதிர்ப்பு நோய்கள், மன நோய்கள் என அனைத்துப்பிரச்சினைகளுக்கும்இவை முக்கியம் .உடலின் எதிர்ப்புச் சக்திக்கு குடலின் பங்கும் நுண்ணியிர்களின்பங்கும் அதிகம் நல்ல நுண்ணுயிர்களான பிஃபிடோபாக்டரியம் வகையினைச் சார்ந்த லாக்டோபசில்லஸ் உள்ளிட்ட பல நுண்ணுயிரிகளை குழந்தையின் உடலுக்கு தருவது தாய்ப்பால். அவை குடலில் நிலைகொண்டு பல்கிப் பெருக தேவையான HMO- ஹியூமன் மில்க் ஒலிகோசாக்ரைடைத் தருவதும் தாய்ப்பால்தான்.
முதல் மூன்று நாட்களுக்கு குழந்தையின் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுவது கீட்டோன் பொருட்கள் ,கிளிசரால், அமினோ அமிலங்கள் வழியாக நடக்கும் குளுகோஸ்உற்பத்தி. இதனைத் தூண்டுவதும் தேவையான நொதிகளை சீராக சுரக்க வைப்பதும் சீம்பால் ஆகும். covid-19 நோய் எதிர்ப்புச்சக்தியை தாயிடமிருந்து குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக வரும். குடும்பத்தின் மாதச் செலவில் மூன்றில் ஒரு பங்கை குறைக்கவும் , மருத்துவமனைக்கு செல்வது தடுப்பூசிக்கு மட்டும் எனவும் மாற்றும் .சூழல் மாசுபாடு இல்லை தண்ணீர் சேதாரம் இல்லை இயற்கை வளம் சுரண்டப் படுவது இல்லை எங்கேயும் எப்போதும் எந்நேரமும் கிடைக்கும் உணவு .தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள்புதிதுபுதிதாக இன்றுவரை கண்டறியப்பட்டு வருகின்றன. தாய்ப்பால் வரவில்லை என்றால் தரும் முறையில் தான் பிரச்சனை .சரி செய்யும் வரை தாய்க்கு உதவியாக இருக்க வேண்டும் மாற்றுப் பால் தயாரிப்பு நிறுவனங்களின் மாயவலையில் மக்கள் விழாமல் காப்பது நமது கடமை
