Blog Stats

  • 128,342 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

புட்டிப்பால் தந்தால் உங்கள் மருத்துவர் ஏன் கோப்ப்படுகிறார்?

1 min read

குழந்தையின் பெற்றோரான உங்களுக்கு குழந்தை மருத்துவரிடம் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். முதல் ஆறு மாதங்களில் குழந்தைக்கு தாய்ப்பாலை தவிர்த்து வேறு ஏதாவது பால்  மற்றும் பால் பொடிகளையும் தருவதற்காக புட்டியை எடுத்து சென்றிருப்பார்கள். உடனடியாக உங்கள் குழந்தை நல மருத்துவர் கேட்டிருப்பார்.

Photo by Tatiana Twinslol on Pexels.com

எதற்காக பால்புட்டி தருகிறீர்கள்? இதனால் ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? பால் போதவில்லை என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள் ?இதை யார் உங்களுக்கு சொல்லித் தந்தார்கள் ? என பல கேள்விக்கணைகள் பிறக்கும்.முகம் சிவந்து ,கண்களில் இருந்துகனல் பறக்க , நெற்றிக்கண்ணை திறந்து எரித்து விடு போல் பார்ப்பார். மிகச் சிலகுழந்தைகள் நல மருத்துவர்கள்,எதுக்கு வம்பு !!உங்க குழந்தை .என்ன வேணாலும் பண்ணிக்கோங்க அப்படின்னு நினைச்சிட்டு அப்படியா? சரி விட்டுவிடுங்கள் என்று தலையை ஆட்டிக்கொண்டு அடுத்த குழந்தையை நோயாளியைப் பார்க்க மணியை அடித்து விடுவார்

 

நிறைய பேருக்கு ஏன் அந்த மருத்துவர் இப்படி முகம் சிவந்து, கண்களில் கனல் பறக்க ,கோபம் கொப்பளிக்க நெற்றிக்கண்ணைத் திறந்து நம்மை மிரட்டுகிறார் என்பது புரியாது. மெதுவாக கேட்டு பார்த்தால அதன் பின்னணியில் இருக்கும் கதைகளை வரிசையாக சொல்லுவார்கள்.

ஒவ்வொரு குழந்தை நல மருத்துவரும் தன்னுடைய வாழ்நாளில்  ஆயிரக்கணக்கான குழந்தைகளை பார்த்திருப்பார்கள். மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு ஆபத்துக்கு உள்ளாகும் குழந்தைகள் தாய்ப்பால் மறுக்கப்படும் குழந்தைகள் தான் என்பது மருத்துவர்களுக்கு தெரியும்.கூடவே , ஆனால் குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்குள் , தாய்க்கும் குடும்பத்தினருக்கும் தாய்ப்பால் தருவதின் தன்மையையும் அதற்குரிய வழிமுறைகளையும் சரியாக கற்று தெரியாமல் இருந்தால் குழந்தைக்கு பால் குடிப்பதில் பிரச்சினைகள் இருக்கும். இரவு வேளைகளில் குழந்தை தொடர்ந்து அழ ஆரம்பிக்கும். குழந்தையின் தூக்கத்தை பால் பற்றவில்லை என்று எடுத்துக்கொண்ட மருத்துவமனை ஊழியர்களும் குழந்தையின் உறவினர்களும் பால் தரலாமா ?என்று கேட்க நிறைய மருத்துவர்கள் சரி என்று சொல்லிவிடுவது வழக்கம். எந்த தாய்க்கும் தன் குழந்தைக்கு தன் பாலை தராமல் மறுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது உண்மை தான். பால் புட்டு தரும் தினத்தன்று ஆரம்பிக்கும் பிரச்சனை அதற்கு பிறகு தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும்.முதலில் பாட்டிலில்பால் குடிப்பதற்ம் நேரடியாக தாயிடம் பால் கொடுப்பதற்கும் என்ன வேறுபாடு என்பதை பார்ப்போம் புட்டியில் பால் குடிக்கும் குழந்தை
நிரப்பப்பட்ட பால் புட்டியை வாயில் வைத்தவுடன் ஒரு உறிஞ்சு உறிஞ்சும்.உடனடியாக பால் வாயை நிரப்பி விடும் .நாக்கை உபயோகப்படுத்தி அதிகவேகத்தை  தடுக்கும் . வாயில் நிரம்பிய பாலை விழுங்கி வெகு சீக்கிரமாக பால் கொடுப்பதை முடிந்துவிடுகிறது நேரடியாக தாயிடம் பால் குடிக்கும் குழந்தை பால் குடிப்பதற்கு சில முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தையின் தாடை மார்போடு அணைத்து இருக்க, அகன்று திறந்த வாய் மார்பினை நன்கு கவ்வும் வகையில் இருக்க வேண்டும் அப்போது தாயின் மார்க்காம்பு குழந்தையின் மேலண்ணத்தின் பின் பகுதிக்குச் சென்று இருக்கும். குழந்தை தன்னுடைய நாக்கினை உபயோகப்படுத்தி மார்க் காம்பு மற்றும் கருவட்டத்தினை அழுத்தி பாலை வெளியேற்றுகிறது இதன் மூலம் குழந்தைக்கு தேவையான பால் சிறிது முயற்சிக்கு அப்புறம் கிடைக்கிறது சிறிது நேரம் சப்பி வாய் நிரம்பியவுடன் அடுத்து விழுங்குவதற்கு நேரம் எடுத்துக்கொண்டு மறுபடியும் சப்புதல் ஆரம்பிக்கிறது.புட்டியில் பால் குடித்த குழந்தை தாயிடம் பால் குடிக்க ஆரம்பிக்கும் போது மார்க்காம்பின்நுனியை மட்டும் சப்பும்.அதனால் நுனியில் விரிசல் ஏற்படலாம் .வலி உண்டாகலாம் நோய்த்தொற்று ஏற்படும்.அதனால் வலி வீக்கம் ஏற்படலாம் சிறுபால் குழாய்த்தொற்று பாதிக்கலாம் தாய்ப்பால் தருவதில் பிரச்சனை தொடர ஆரம்பிக்கிறது.இதை  தவிர்க்க வேண்டியது முக்கியம். மார்க்காம்பினை சரியாக குழந்தை மார்போடு சேர்த்து கவ்வாத போது குழந்தையின் பால் ஊட்டுதல் தாமதப்படுத்துகிறது. 2 போதுமான அளவு பால் தாயின் மார்பகத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால் தங்கியுள்ள பால் மேற்.கொண்டு சுரப்பினை தவிர்க்கும் இதன் மூலம் சரியாக பால் வெளியேற்றப்பட்ட போது பால் சுரப்பு படிப்படியாக குறைந்து 3 அல்லது 4 மாதங்களில் தாய்ப்பால் குடிப்பதற்கான ஆர்வத்தை குழந்தை இழந்துவிடுகிறது எனவே வெகுவிரைவிலேயே குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தி விடலாம். 3.சமீப காலங்களில் பாலினை பீச்சி புட்டிகளில் தாய்ப்பாலை தருகிறார்கள். இது சரியான பழக்கமல்ல நேரடியாக தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டியில் பால் ஊட்டுவதற்கு வித்தியாசம் ஏற்படும் .எனவே குழந்தை சப்புவது குறையும்போது தாயிடம் இருந்து வரக்கூடிய பாலின்அளவு குறையும் . 4 ஒவ்வொரு முறையும் பால் புட்டியில் பால் போட்டுக் கொடுப்பதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், பால்புட்டி ஏற்படக்கூடிய நோய்த்தொற்று, பாட்டிலுள்ள பிஸ்பினால் போன்ற நச்சுப் பொருட்கள்,  நுண்ணுயிர் கிருமிகள் ,பால்புட்டி மூலம் ஏற்படக்கூடிய தொல்லைகள் ஆகியவை நம்மை பயமுறுத்தும்.பாட்டில் குடிக்கும் குழந்தைகளுக்கு தொண்டை சளி. நெஞ்சு சளி, காது சீழ், பால்புட்டி சொத்தைப்பல் வயிற்றுப்போக்கு என நோய்கள் ஏற்படுவது அதிகமாகும் 5 அதிக சர்க்கரையும் அதிக இனிப்பு உள்ள பால் பவுடர் மற்றும் மற்ற விலங்கினங்களின் பாலைக் தருவது தவறு.ஏனெனில் தாய்ப்பால் குடிப்பதில் குழந்தைக்கு ஆர்வம் குறைந்து விடும் 6. தாய்ப்பால் தவிர்த்து வேறுபாலை அருந்தும் குழந்தைக்கு 18 வகையான நோய்கள் அலர்ஜி முதல் ஆஸ்துமா வரை ரத்த அழுத்தம் முதல் கேன்சர் வரை என உடல் பருமன் முதல் தொற்றா நோய்கள் வரை )என பல விதமான நோய் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு 7. வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் கிருமிகளில் மிக ஆபத்தான ஈ கோலை, புட்டிப்பால் பாட்டில் உபயோகப்படுத்தும் போது அதிகமாக பரவுகிறது என்பது ஆராய்ச்சி பூர்வமாக உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பால்புட்டி மூலம் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு குடலில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவ்வளவு சுலபத்தில் நோய்த்தொற்று குறைவதற்கான வாய்ப்பு இல்லை .எனவே குழந்தைகளுக்கு நோய் தொடர்ந்தும் குழந்தையின் எடை குறைந்தும் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது 8.  ஆறு மாதத்திற்கு அப்புறம் வீட்டு உணவை சாப்பிட்டு பழகாது. எனவே போதுமான சத்துள்ள கிடைக்காமல் போகும் 9.இதைத் தவிர பால்புட்டி மூலம் பாலூட்டும் குழந்தைகள் தாயோடு இருக்கும் உணர்வுப் பிணைப்பு குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன 10.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் வெறும் பாலை மட்டும் குடிக்கும் குழந்தை ஒரு வயது ஆகும் போது பொத பொத த வென்று இருக்கும் .பால் மட்டும் அருந்துவதினால் ரத்தசோகை ஏற்பட்டு உடம்பு தோல் வெளிறி இருக்கும் பெரும்பாலும் பால் பழகியதால் கீரைகளையும் காய்கறிகளையோ பழங்களையோ சாப்பிட்டு பழகாமல் இருக்கும். இந்தக் குழந்தைக்கு மறுபடியும் உணவினை பழக்குவது என்பது மிகக் கடினமான காரியங்களில் ஒன்றாக இருக்கும் எப்படி புட்டிப்பழக்கத்தினை மாற்றுவது? படிப்படியாக புட்டி மூலம்பால் ஊட்டுவதில் இருந்து முதலில் கிண்ணத்திற்குமாற்ற வேண்டும் . கொடுக்கும் பாலின் அளவினை குறைக்க வேண்டும் .முடிந்தால் பாலுக்கு பதிலாக கெட்டி உணவுகளை உடனடியாக மாற்றலாம் .இல்லையென்றால் குறைந்தபட்சம் 100 லிருந்து 200 மில்லி பாலை மட்டும் தந்து , அன்றாட உணவுகளை படிப்படியாக பழக்கலாம் இதன் மூலம் குழந்தையினுடைய வயிறு பெரும்பாலும் பால்மூலம் நிரம்புவது தடுக்கப்படும் பசி உண்டாகும் பசித்த குழந்தைக்கு வீட்டில் செய்யும் உணவுகளை காரமின்றி சேர்த்து தருவதன் மூலம் உணவை சாப்பிட்டு பழக ஆரம்பிக்கும் .இந்த குழந்தைகளுக்கு பொதுவாக இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக தேவைப்படும் எனவே உங்கள் மருத்துவர் பால் புட்டியை நிறுத்த சொன்னால் தயவு செய்து உடனடியாக அதனை கடைபிடிக்கவேண்டும் .உங்கள் குழந்தை வளர்ச்சியினை ஊக்குவிக்க ஒரு நல்ல முயற்சியை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார் . உங்கள் ஒத்துழைைப்பு தேவை என்பதுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. மே 7,2021 இல் முதலில் வெளியானது

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading