childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் ஆகிய இரண்டும் ஒன்றா? அல்லது வேறு வேறா?

1 min read

இரண்டுமே வெவ்வேறு. இதில் நிறைய பேருக்கு குழப்பம் இருப்பதால்தான் தவறுதலாக பல அறிவியல் செய்திகள் மக்களை சென்றடைகின்றன .சாதாரணமாக கைகளின் பின்புறத்தில் தெரியக்கூடிய பச்சை நிறத்தில் உள்ள இரத்த நாளங்களை

நரம்புகள் என்று தவறாகச் சொல்லி விடுவார்கள். ரத்த நாளங்களில் போடும் ஊசியை நரம்பு ஊசி என்று மறுபடியும் குழப்பி விடுவார்கள்

இவை இரத்த நாளங்கள்

இதில் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சிரை(vein) என்றும் சுத்த இரத்தத்தை கொண்டு செல்பவை தமனி என்றும் அழைக்கப்படும்

அசுத்த இரத்தத்தை கொண்டு செல்லும் சிரை வழியாக தான் குளுக்கோஸ் இறக்குவார்கள். ஊசிகளும் இதன் மூலம்தான் சாதாரணமாக தரப்படும். சுத்த ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் வழியே ஸ்டண்ட் வைப்பது ,ஆஞ்சியோ செய்வது, ரத்த அழுத்தத்தை கவனிப்பது உள்ளேயே குளுக்கோஸ் செல்லும் வழித்தடம் அமைப்பது என பலவும் செய்யப்படும்.

இனி நரம்புகள் என்பது என்ன? என்று பார்ப்போம் .உடலில் உள்ள தசைகளை இயக்குவதற்கான கட்டளைகள் மூளையிலிருந்து தண்டுவடத்தின் வழியாகவே தசைகளுக்கு வந்து சேரும் .அந்த செய்தியினை கொண்டுவரும் நரம்பு மடிப்புகள் நரம்புகள் எனப்படும் .சாதாரணமாக இவை அடித்தோலின் கீழே சதைக்கு நடுவில்மட்டும்தான் இருக்கும் .தோலின் மேற்புறத்தில் காண்பது மிக அரிது சில நேரங்களில் தொழுநோய் பாதித்தவர்களுக்கு காதின் பின்புறத்தில் உள்ள நரம்பு தடித்து இருக்கும் முழங்கையின் ஒரு நரம்பும் தடித்திருக்கலாம் இதைவைத்து அப்பகுதியில் நோயின்பாதிப்பு இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்

நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் ஆகிய இரண்டும் ஒன்றல்ல.வெவ்வேறு

தமிழ் கோரவில் எழுதிய பதில்:https://ta.quora.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/answers/262759153

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading